ஜெர்மன் உளவுத்துறையை மிரட்டும் கோமாளி ஹேக்கர்கள் குழு! - ஹூ யம் ஐ- ஜெர்மன் திரைப்படம்
ஹூ எம் ஐ
ஜெர்மனி திரைப்படம்
படத்தின் நாயகன் பெஞ்சமின் என்சேல். ஆனால் படத்தில் இவரை ஜூனியர் பாத்திரமாக்கி மூன்று பேர் கொண்ட ஹேக்கர் குழு, பெஞ்சமினின் கல்லூரி தோழி என முழுக்க ஆக்கிரமித்துள்ளனர். படத்தின் இறுதியில் பார்வையாளர்களுக்கு சஸ்பென்ஸ் யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
பெஞ்சமின் தனது பாட்டியுடன் வாழ்ந்து வருகிறான். அந்த வீட்டில் வேறு யாருமில்லை. அவரது பாட்டிக்கு அல்சீமர் வியாதி உள்ளது. அவரைப் பார்த்துக்கொண்டு கணினியில் ஹேக்கிங் செய்து மிஸ்டர் எக்ஸ் என்ற புகழ்பெற்ற ஹேக்கரின் கவனத்தை ஈர்க்க முயல்கிறான். அப்போது எதிர்ப்படும் குழுதான் அவனது வாழ்க்கையையே மாற்றுகின்றனர். கிளே எனும் பெயர் கூட பெஞ்சமின் அவர்களுக்கு கொடுப்பதுதான். அக்குழுவில் ஸ்டீபன்தான் தலைவன். அவனின் அன்பை தனது திறமையைக் காட்டி பெற்றுவிட்டாலும் மற்றவர்கள் அவனை சின்ன பயலே என்றுதான் நினைத்து பேசுகிறார்கள்.
ஸ்டீபனின் வாழ்நாள் கனவே மிஸ்டர் எக்ஸின் சபாஷ் என்ற பாராட்டைப் பெறுவதுதான். அதனை பெறும் முயற்சியில் அவர்கள் சந்திக்கும் ஆபத்துகளே கதை.
முழுக்க கணினியை வைத்து அரசு, பங்குச்சந்தை, கட்சி மாநாடு என பலவற்றையும் மிரட்டுகிறது கிளே குழு. இவர்கள் தாங்கள் செய்யும் அனைத்தையும் யூடியூப், சமூக வலைத்தளம் என பலவற்றிலும் பகிர்ந்து அல்ப்பறை செய்கின்றனர். இவர்களது ஒரே சுலோகன். எந்த கணினியும் பாதுகாப்பானது இல்லை என்பதுதான்.
இவர்களது அட்டூழியத்தால் வெறுப்புற்று எழும் ஜெர்மானிய உளவுத்துறை இவர்களைப் பிடிப்பதற்கான வலையை விரித்து வேகமாக நெருங்கி வருகிறது. அப்போது பெஞ்சமின் செய்யும் தவறால் அவர்களது குழுவுக்கு உயிராபத்து ஏற்படுகிறது. அதனை எப்படி சமாளித்தார்கள் என்பதுதான் இறுதிக்காட்சி.
சைபர் சமாச்சாரங்களோடு உளவியல் விஷயங்களையும் இணைத்து பேசியிருப்பது வினோதமாகவும் புதுமையாகவும் உள்ளது. இதனை புரியும்படி செய்வது கடினம். ஆனால் இயக்குநர் நம்பிக்கையாக செய்திருக்கிறார்.
டெக் சவால்
கருத்துகள்
கருத்துரையிடுக