தமிழ்நாடு தினத்தின் வரலாறு!

 



ஜல்லிக்கட்டு.svg
ஓவியர் ஜீவா(வள்ளுவர் வள்ளலார் வட்டம் )



தமிழ்நாடு நாள் நவம்பர் 1,1956

1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று, மொழிவாரி மாநிலங்கள் கோரிக்கைப்படி மெட்ராஸ் ராஜதானி பிரிக்கப்பட்டது. இதில் இணைந்திருந்த ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவை தனி மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயர், பின்னாளில் மாநில முதல்வரான சி.அண்ணாத்துரையால், 1968ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று மெட்ராஸ் ஸ்டேட், தமிழ்நாடு என பெயர்மாற்றம் பெற்றது. நவம்பர் 1ஆம் தேதியை கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றன. இந்தவழியில் தமிழ்நாடு அரசு,  இனி வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு நாளை கொண்டாட உள்ளதாக கடந்த 25ஆம்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. 

மொழிவாரி மாநிலங்கள் சிந்தனை, வங்கப்பிரிவினை காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. மொழிவாரி மாநிலமாக 1908 இல் பீகார் மாநிலம் உருவானது. பல்வேறு மாநிலங்களை மொழிவாரியாக  பிரிக்கும் யோசனையை அன்றைய காங்கிரஸ் கட்சி முன் வைத்தது. ஆனால் மக்களை பிரித்தாளும் முயற்சி என தேசியவாதிகள் கூறி இம்முயற்சிக்கு முட்டுக்கட்டை போட முயன்றனர். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கான பிரிவினை ஏற்படுத்திய வன்முறை, உயிர்பலியை  காங்கிரஸ் அரசு மறக்கவில்லை. சுதந்திரத்திற்கு முன்னர்  மொழிவாரி மாநிலத்தை ஆதரித்த காங்கிரஸ் கட்சி, பின்னர் அதனை ஆதரிக்கவில்லை. 


சோழன்.svg

மொழிவாரி மாநிலத்திற்கு ஆதரவான போராட்டங்கள் தெலுங்கர்களால், ஆந்திரத்தில் தொடங்கின. பொட்டி ஸ்ரீராமுலு இதற்காக போராடி உண்ணாவிரதமிருந்து இறந்துபோனார். இதன் விளைவாக அங்கு கலவரம் மூண்டது. உடனே அன்றைய பிரதமர் நேரு, தனக்கு விருப்பமில்லாத மொழிவாரி மாநிலங்கள் கோரிக்கைக்கு இசைய நேரிட்டது.நீதிபதி வாஞ்சூ இதற்கான அறிக்கையை தயாரித்து வழங்க 1953 இல் ஆந்திர மாநிலம் உருவானது. 

மெட்ராஸ் ராஜாதானியை பிரிக்கும் யோசனையை இந்திய அரசு முதலில் நிராகரித்தது.பின்னர், 1953 இல் பாஸல் அலியைத் தலைவராகக் கொண்ட மாநிலங்களைப் பிரிக்கும் ஆணையம் உருவானது. குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள 70 சதவீத மக்கள் ஒரே மொழியைப் பேசவேண்டும் என்ற விதிப்படி மாநிலங்கள் பிரிக்கப்படும் என ஆணையம் கூறியது. புவியியல் தொடர்ச்சி, சமூக கலாசாரம், ஜாதி ஆகியவையும் இதில் முக்கிய காரணிகளாக இருந்தன. மெட்ராஸ் ஸ்டேட்டிலிருந்து பிரிக்கப்படும் பகுதிகள் பற்றிய சர்ச்சை எழுந்தது. தேவிகுளம், பீர்மேடு, கன்னியாகுமரி ஆகியவற்றை மெட்ராஸ் ஸ்டேட்டுடன் சேர்க்க ஈ.வெ.ராமசாமி, சங்கரலிங்கனார், மார்ஷல் நேசமணி, தாணுலிங்க நாடார், டி.வி.ராமசுப்பையர் ஆகியோர் போராடினர்.  


சோதிடம்.svg

தமிழ்மொழி பேசும் தமிழர்கள் வாழும் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட சங்கரலிங்கம் என்ற காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தினார். இதற்காக, 1956 ஆம் ஆண்டு 78 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதற்கான மசோதா காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டும் உடனே சட்டமாக மாறவில்லை. 1968 ஆம் ஆண்டு திமுக அரசால் தமிழ்நாடு எனும் பெயர் மாற்றக் கோரிக்கை சட்டமானது. 

ஆதாரம்: தமிழ்நாட்டு வரலாறு, பேராசிரியர் கே.ராஜய்யன். 







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்