வைரம் ஏ டூ இசட் தகவல்களை அறியலாம் வாங்க!
வைரம் ஏ டூ இசட்!
கோகினூர் வைரம் இந்தியாவின் பெருமைக்குரிய அடையாளம். தங்கம் மட்டுமல்ல வைரத்திற்கும் இந்தியா புகழ்பெற்றது என உலகம் அறிந்தது பின்னர்தான். வைரத்தைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்லான டைமண்ட் என்பது கிரேக்க வார்த்தையான அடமாவோவிலிருந்து(Adamao) உருவானது. இதன் பொருள், வலிமையானது.
இது ஒன்றும் புதிய விஷயமல்ல. வைரம் என்பது கடினமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது மிகப்பழமையானது. வைரங்கள் பிரித்தெடுக்கப்படும் பாறைகளின் வயது 1600 மில்லியனாகவும், வைரங்களின் வயது 3.3 பில்லியன் ஆண்டுகள் ஆகவும் உள்ளது. கடுமையான வெப்பநிலை மற்றும் அழுத்தம் காரணமாக வைரங்கள் உருவாகின்றன. இப்படிக் கிடைத்த வைரங்களில் சில நம் சூரியமண்டலத்தைவிட காலத்தால் முந்தையவை என்பது ஆச்சரியம்தானே!
கார்பன் அழகு!
வைரத்தின் உறுதியான கட்டுமானத்திற்கு கார்பன் காரணம் என்பதை அறிந்திருப்பீர்கள். நியூட்ரலான கார்பன் அணுவில், ஆறு புரோட்டான்கள், ஆறு நியூட்ரான்கள் இதன் அணுக்கருவில் உள்ளன. இதற்கு பதிலீடான எண்ணிக்கையில் எலக்ட்ரான்களும் உள்ளன.
இதிலுள்ள எலக்ட்ரான் கட்டமைப்பு 1s22s22p2 என்று குறிப்பிடுகின்றனர். கார்பன் அணுக்கள் க்யூப் வடிவில் மிக உறுதியான அணுக்களின் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இதனால், அதனை உடைப்பது மிக கடினமாக உள்ளது. இதற்கு பங்கீட்டுப் பிணைப்பு (Covalent Bond ) என்று பெயர். அணுக்கள் எலக்ட்ரான்களைப் பகிர்ந்துகொள்வதை இப்பெயரில் குறிப்பிடுகின்றனர். இதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு நீர் (H20)
கார்பன் வேறுபாடு!
1919ஆம் ஆண்டு இதனைக் கண்டுபிடித்து உலகிற்கு கூறியவர், ஆராய்ச்சியாளர் இர்விங் லாங்மியூர் (Irving Langmuir).இதன் உருகும் வெப்பநிலையும்(1292 டிகிரி ஃபாரன்ஹீட்) அதிகம்.
வெளிப்படையாகச் சொன்னால், கார்பன்கள் நட்சத்திரங்களிலிருந்து பெறப்பட்டவையே. அதேசமயம் அனைத்து கார்பன்களும் ஒன்றுபோன்ற தன்மை கொண்டவை அல்ல. கார்பன் -12 மற்றும் கார்பன் -13 என்பவை பூமியிலிருந்து பெறப்படுபவை. அதேசமயம் இந்த ஐசாடோப்புகளும், நட்சத்திர மண்டலத்திலிருந்து பெறப்படும் கார்பன்களுக்கும் வேறுபாடு உண்டு. பூமியின் தட்டுகளிலிருந்து அகழ்ந்து வைரங்கள் பெறப்படுகின்றன.
இந்தியாவிலுள்ள குஜராத்தில் உலகின் 90 சதவீத வைரங்கள் பட்டை தீட்டப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இந்தியாவில், வைரம் உற்பத்திக்கான சுரங்கங்கள் அதிகம் கிடையாது. மத்தியப் பிரதேசத்தின் பன்னா எனுமிடத்தில் வைரச்சுரங்கம் ஒன்றை அரசின் கனிமவள நிறுவனம் நடத்திவருகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக