ஜாலி பிட்ஸ்! - உணர்ச்சிகளில் வேதியியல்

 




dance love GIF by The Next Step




உடலில் வேதியியல்!

நம் மனித  உடலில் ஆக்சிஜன், கார்பன் ஆகிய சேர்மங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இவற்றோடு, நைட்ரஜன், பாஸ்பரஸ், ஹைட்ரஜன், கால்சியம், பொட்டாசியம், சல்பர், மெக்னீசியம் ஆகிய சேர்மங்களும் மனிதர்களின் உடலில் முக்கியப் பங்காற்றுகின்றன. 

ஆக்சிஜன் (65%), கார்பன் (18%), ஹைட்ரஜன் (10%), நைட்ரஜன் (3%), கால்சியம் (1.5%) என உடலில் நிறைந்துள்ளன. இவற்றோடு இரும்பு,மெக்னீசியம், காப்பர் ஆகியவையும் உடலில் உண்டு. 

உணர்ச்சிகளில் வேதியியல்

உங்கள் உடலில் ஏற்படும் மகிழ்ச்சி, சோகம், ஓய்வு, விரக்தி ஆகியவற்றின் பின்னால் வேதிப்பொருட்களின் பங்கு உண்டு. இதனால் தேர்வில் வெல்லும் போது உற்சாகமும், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதபோது வருத்தத்தையும் நீங்கள் உணர்கிறீர்கள்.  

மூளையில் ஏற்படும் ஈர்ப்பு!

ஹிப்போகாம்பஸ், மெடியல் இன்சுலா, ஏன்டெரியர் சிங்குலேட் ஆகிய பகுதிகள், காதல் மற்றும் பரிசு பெறவுமான உணர்ச்சிகளுக்குப் பொறுப்பு ஏற்கின்றன. 

அமைக்டலா (AMYGDALA)

பயம் மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்பாடாக வைக்க உதவுகிறது. 

பிட்யூட்டரி (PITUITARY GLAND)

உடலில் ஹார்மோன்களை சீராக வைக்க உதவுகிறது. 

ஹைப்போதாலமஸ் (HYPOTHALAMUS)

ஆக்சிடோசின், டோபமைன், வாசோபிரசின் ஆகிய ஹார்மோன்கள் சுரப்பது இங்கேதான். 

தாவரங்களுக்கு உணவு!

தாவரங்கள் ஒளிச்சேர்க்கை முறையில் உணவு தயாரிக்கின்றன. இது, மிகச்சிக்கலான முறையில் அமைந்த வேதிவினை நிகழ்ச்சி. சூரியன் மூலம் தாவரங்கள் உணவு தயாரிக்கின்றன. இதன் வழியாக, விலங்குகள் உயிர்வாழ்கின்றன. இது சுழற்சியாக உணவுச்சங்கிலி உருவாகிறது. 

6 CO2 + 6 H2O + light → C 6H12O6 + 6 O2

சோப்பின் பணி!

சாப்பிடப் போகிறீர்கள்? உடனே அதற்காக உள்ள சோப்பில் கைகழுவுவீர்கள். உண்மையில் அந்த சோப்பு உங்கள் கைகளிலுள்ள அழுக்கை, கிருமிகளை நீக்குகிறது. சோப்பில் கொழுப்பு அமிலங்களும், சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் உப்புகளும் உள்ளன. சோப்பு கிரீஸ் மற்றும் ஆயில் மூலக்கூறுகளுடன் வேதிவினை புரிந்து பொருளை சுத்தம் செய்கிறது. 

வெங்காயத்தின் உள்ளது என்ன?

வெங்காயத்தில் சல்ஃபாக்சிடைஸிலிருந்து சல்ஃபெனிக் அமிலம் உருவாகிறது. சல்ஃபெனிக் அமிலம், புரொப்பனிதியோல் எஸ் ஆக்சைடு வெங்காயத்தை வெட்டும்போது, நம் கண்களில் கண்ணீர் வரக்காரணம். 

பேக்கிங் வேதிப்பொருட்கள்

கேக், பன் உள்ளிட்டவற்றை தயாரிக்க உதவுவது, பேக்கிங் சோடா மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவை. ரசாயன சுத்திகரிப்பு(Chemical leavening) எனும் முறையில் கேக், பன் ஆகியவை தயாரிக்கப்பட்டு சுவை கூட்டப்படுகிறது. இதில் சோடியம் பைகார்பனேட், அம்மோனியம் பைகார்பனேட், பேக்கிங் சோடா, ஈஸ்ட் ஆகிய பொருட்கள் முக்கிய உட்பொருளாகச் சேர்க்கப்படுகின்றன. 

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

நூடுல்ஸ் மற்றும் சமோசாவுக்கு பயன்படுத்தும் சாஸ், ஜாம், ஊறுகாய் ஆகியவற்றில் பல்வேறு வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை பிரசர்வேட்டிவ்ஸ்(Preservatives) என்று குறிப்பிடுகின்றனர். இவை உணவுப்பொருட்கள் பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் ஆகியவற்றால் கெடுவதைத் தாமதப்படுத்துகின்றன. இதிலுள்ள கொழுப்புகள் ஆக்சிடேஷன் முறையில் மாறுவதைத் தடுத்து கெட்டுப்போவதைத் தடுக்கின்றன.   கால்சியம் சார்பேட், பொட்டாசியம் சார்பேட், சோடியம் சார்பேட், புரோபயோனிக் அமிலம் மற்றும் நைட்ரஸ் அமிலத்தின் உப்புகள் ஆகியவை உதவுகின்றன. 





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்