ஷி ச்சின்பிங் உரைகள், கட்டுரைகள் மூலமாக நடக்கும் பிரசாரம்!
ஷி ச்சின் பிங்கின் உரைகள் பாடமாக.... ஷி ச்சின் பிங் ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகள், உலக நாடுகளிலுள்ள 33 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ளவர்கள் அறிந்துகொள்ள ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதிபர் ஷி என்ன நினைக்கிறாரோ அதிலிருந்து துளியும் விலகாமல் கட்சியினர், உறுப்பினர்கள், வணிகர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிறர் அப்படியே வழிமொழிய வேண்டும். இப்படித்தான் சீன கனவுக்கான அடிக்கல் உருவாக்கப்பட்டு வருகிறது. வலிமையான தேசியவாதம், நாடுபற்றிய பெருமை, வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிராத தன்னிறைவு கொண்ட நாடு, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றி்ல ஷி, முன்னாள் அதிபரான மாவோவைப் பின்பற்றுகிறார். அடுத்து கன்பூசியசின் பல்வேறு கருத்துகளை விரும்புகிறார். ஐந்து வகை உறவுகளை சமூகம் பின்பற்றவேண்டுமென கன்பூசியஸ் கூறியுள்ளார். அரசர் - மக்கள், தந்தை - மகன், அண்ணன்-தம்பி, கணவர்-மனைவி, இரு நண்பர்களின் உறவு ஆகியவைதான் அவை. அடிப்படை தலைவர், மக்கள் தலைவர் என பல பட்டங்கள் அதிபர் ஷிக்கு வந்துகொண்டே இருக்கின்றன. பொதுவுடைமைக் கட்சியின் பொதுசெயலாளார்,தே...