இடுகைகள்

மனதேசப் பாடல்3 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சென்னை பயணித்தார் எழுத்தாளர் வின்சென்ட் காபோ!

சென்னை பயணித்தார் எழுத்தாளர் வின்சென்ட் காபோ!                                           மெட்ரோ கார்னர் ‘முனி’ வின்சென்ட் காபோ (வி.காபோ), புத்தக மொழிபெயர்ப்பு ஒன்றிற்காக மடிக்கணினி ஒன்றினைப் பெற அனுகந்தன் என்னும் கடும் முரட்டுத்தனமும், துணிச்சலான அன்பும் கொண்ட துணை இயக்குநர் ஒருவரை சந்தித்தார். அவரின் அறையில் தங்க இடம் கிடைத்துவிட்டது. அறை பற்றிக்கேட்டால் வாய்திறக்க மறுக்கிறார் அனுகந்தன். பின் பேசியது இதுதான். ‘’ சோறு தின்னியான்னா கூட கேட்க மாட்டீங்கறான் என்ன ஊருடா இது? மிஷினு மாரி ஓடறானுவ, ஒடியாரானுவ ’’ பேபி ஏலப்பன் எனும் இயக்குநர் ஒருவரிடம்தான் அனுகந்தன் வேலை செய்கிறாராம். அவரிடம் கூட்டிச்சென்றார். பேபியின்அறை முழுக்க பல்வேறு சினிமா போஸ்டர் கட்டிங்குகளாலேயே தன் அறையின் சுண்ணாம்புச்செலவை தவிர்த்திருந்தார். சுண்ணாம்பிற்கு இடம் விட்டால்தானே! அறையின் ஒவ்வொரு கதவுகளிலும் ஒரு வாசகம் குறும்பாக எழுதப்பட்டிருந்தது. உ.தா கழிவறையில் தினசரி நான்கு காட்சிகள் என்ற வாசகம். நந்தம்பாக்கம் வர்த்தசபை சென்றிருந்த அனுபவம் வேறுமாதிரி. தினகரன் நாளிதழ் நடத்திய கல்வி குறித்த கண்காட்சி நடைபெற

நிற்காத கரைச்சலப்பா !

நிற்காத கரைச்சலப்பா !                                           செட் புரோட்டாக்காரன் நாள் முழுவதும் இப்படியே கழிந்துவிடும் என்று நான்கு கண்ணன் நினைத்திருக்கவில்லை. நெல்லை தீபம் என்ற இனக்குழு உணவகத்தில் உணவு சாப்பிட்டபோதும், அவனின் கடாபுடா சத்தம் பிறருக்கு கேட்குமளவு அதிகரித்துவிட்டது. காலையில் இட்லி சாப்பிடத்தொடங்கியபோதே பெவிக்கால் கம்பெனியுடன் இனக்குழு ஓட்டல்காரர் ஏதோ டைஅப் வைத்திருப்பாரோ என்று நினைக்கும்படி இட்லி வாழை இலையில் கையில் பிய்க்க பிய்க்க வழுக்கி ஓடியது. நான்கு கண்ணன் ஓட்டல்காரரைப் பார்த்தபோது, நாளைக்கு உலகம் உறுதியாக அழிந்துவிடும் என்பது போல் தனுஷ் படத்தை அவ்வளவு ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார். கையில் பிட்டு சாப்பிட முடியாத பரிமாண முதிர்ச்சியைப் பெற்ற இட்லியை உள்ளே போட பெரும் முயற்சி தேவைப்பட்டது. சட்னி, சாம்பார் என்று பெயரிடப்பட்ட எதனோடும் இட்லி சேராது தனித்தியங்கும் முடிவைக் கொண்டிருந்தது. வழுக்கிச் செல்லும் இட்லியைப் பிடிக்க இடது கையையும் பயன்படுத்தலாமா என்ற சிந்தித்துக்கொண்டே நான்கு கண்ணன் உணவு உண்டார். தாராபுர எழுத்தாளரின் அணுக்கத்தொண்டர் துணை இய