இடுகைகள்

பகிர்வுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூல் வெளி

பாரதிபுரம் ஆசிரியர்: யு. ஆர். அனந்தமூர்த்தி பதிப்பகம்: அம்ருதா, சென்னை.                                            ஜெர்ரி – ப்ளம்      பிராமணக்குடும்பத்தில் பிறந்த ஜகன்னாத ராயன் லண்டனில் மேற்படிப்பு படித்துவிட்டு, பாரதிபுரம் எனும் அவனது சொந்த ஊருக்கு வருகிறான். அங்கு மனிதர்களை அடிமைபோல கசக்கிப்பிழியும் சாதி மனோபாவம் எங்கும் துளிர்விட்டிருக்க, அதைக்களைய பல்வேறு வழிகளில் அவன் முயற்சிக்கிறான். என்னவானது அவன் முயற்சிகள்? போராட்டத்தில் வென்றானா என்று கூறுகிறது நாவலின் உச்சப்பகுதிகள்.      நாவல் பயணிப்பது ஊருக்கே முதல்வனான மஞ்சுநாத சாமியைக் காப்பாற்றும், போற்றும் குடும்பத்து மனிதனின் பார்வை வழியில் என்பதைத்தெரிந்துகொள்ளவேண்டும். முழுக்க ஐரோப்பிய வழியில் படித்தவர்களின் அறிவுசார்ந்த தளத்திலான தேடல்கள், தவிப்புகள், சிந்தனைகள், உரையாடல்கள் அமைகிறது. புராணிகர் பேசுவது அதன் தன்மை கெடாத வகையில் ஆங்கிலத்தில் வருகிறது.      உயர்ஜாதியினைச்சேர்ந்தவனின் மனதளவில் ஒரு செயலினைச் செய்ய நினைப்பதற்கும், அதனைச்செய்யும்போது ஏற்படும் சமூகத்தின் எதிர்வினைக்கான பதட்டத்தினையும், பலம், பலவீனத்தைய