இடுகைகள்

பெருமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெற்றோரை கவனித்துக்கொள்ளும் கடமை, கனவுக்கு தடையாகுமா? ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் நாம் வெற்றி பெற்றதும்   பெருமை என்ற உணர்வு உருவாகிறதே ஏன்? வெற்றி பெறும்போது பெருமை என்ற உணர்வு ஏற்படுகிறதா? வெற்றி என்பது என்ன? வெற்றிகரமான எழுத்தாளர், கவிஞர், ஓவியர்,   தொழிலதிபர் என்று கூறுகிறார்கள். இதற்கு அர்த்தம் என்ன?   நீங்கள் உள்முகமாக குறிப்பிட்ட கட்டுப்பாட்டைப் பெற்று சாதித்திருக்கிறீர்கள். பிறர் அந்த முயற்சியில் வெற்றி பெற முடியாமல் தோற்றுவிட்டார்கள் என்பதுதானே? நீங்கள் பிறரை விட சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்பதுதான் இதன் அர்த்தம். நீங்கள் வெற்றி பெற்றவராக, பிறருக்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் இடத்தை அடைந்துவிட்டீர்கள். இப்படி நினைக்கும்போது மனதில் உருவாகும் உணர்வுதான் பெருமை என்பது. நான் சிறப்பானவன். நான் என்ற உணர்வுதான் பெருமைக்கு முக்கியமான காரணம். வெற்றிகள் பெறும்போது பெருமை உணர்வு வளருகிறது. ஒருவர் தன்னை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து சிறப்பானவன் என்ற எண்ணதை பெறுகிறார். குறிக்கோள் கொண்டுள்ளவர் என்பது, ஒருவரின் நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதுதான் வலிமை, எதை நோக்கி செல்கிறோம், ஊக்கம் அளிக்கிறது. பிறரை விட நான் முக்கி

காதலித்த வெளிநாட்டு காதலன் அக்காவின் கணவரா? - பாவாகாரு பாகுன்னாரா - சிரஞ்சீவி, ரம்பா

படம்
                  பாவகாரு பாகுன்னாரா சிரஞ்சீவி, ரம்பா, பிரம்மானந்தம், பரேஷ் ராவல் இயக்குநர் ஜெயந்த் பானர்ஜி இசை மணி சர்மா வாக்கிங் இன் தி க்ளவுட்ஸ் கதையை எடுத்து தட்டி டிங்கரிங் பார்த்து நம்மூருக்கான மசாலாக்களை சற்று ஜாஸ்தியாக சேர்த்தால் பாவா பாகுன்னாரா படம் தயார். கதை தொடங்குவது வெளிநாடு ஒன்றில்தான். அதாவது நியூசிலாந்து. அங்குதான் ரம்பா படித்துக்கொண்டிருக்கிறார். சிரஞ்சீவி ஒரு பெண்ணைக் கெடுத்துவிட்டார் என அவரது தோழன் புகார் செய்ய, அப்படியா என எதைப்பற்றியும் யோசிக்காமல் அடித்து உதைக்க கிளம்புகிறார் ரம்பா. அதாவது சொப்னா. அவர் அடித்து கை, காலை முறிக்க வேண்டுமென கூறியது ராஜூ என்ற மெகா ஸ்டார் சிரஞ்சீவிதான். அவர் அங்கு ஹோட்டல் ஒன்றை நடத்தி வரு 1,280 × 720 கிறார் கூடவே இந்தியாவில் அனாதை ஆசிரம் ஒன்றுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கி அவர்களுக்கு உதவி வருகிறார். அறம் செய்யவும் பொருள் வேண்டுமே? அதற்குத்தான் ஹோட்டல் தொழில்..  இந்த சூழலில் சொப்னாவுக்கு ராஜூவுக்கும் காதல் வருகிறது. ராஜூ நான் இந்தியாவுக்கு போய்விட்டு வருகிறேன் என கிளம்பிவிடுகிறார். அங்கு வந்து அனாதை ஆசிரம வேலைகளை முடித்துவிட்டு பார்த்த

பெருமைக்காக மனிதர்களைக் கூட விற்கலாம்! - கடிதங்கள்- வினோத் பாலுச்சாமி

படம்
  அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். நலமா? பனியின் குளிர் அதிகாலையில் எழ விடுவதில்லை. இந்த சூழலிலும் கூட பக்கத்து அறையிலுள்ள ஐயர், ஹோமங்களை செய்ய நேரமே எழுந்து குளித்துவிட்டு சென்றுவிடுகிறார். நேற்று அலுவலகத்திற்கு, கிரைம் கதை எழுத்தாளர் ஒருவர் வந்திருந்தார்.  வரும்போதே கையிலுள்ள பிளாஸ்டிக் டப்பாவில் சாக்லெட்டுகளை வைத்திருந்தார். ஏதோ வினோதமாக பட்டது. எங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் மீனா என்ற பெண்மணிதான் அவரை அழைத்திருந்தார். வந்த  டக்இன் எழுத்தாளர் சேரில் நன்கு அழுத்தி உட்கார்ந்து கொண்டார்.  தன் முகத்தில் உள்ள மாஸ்கை கழற்றும் முன்னரே சாக்லெட்டை விநியோகிக்க சொன்னார். சாக்லெட்டை பெற்றவன், சரி, அவருக்கு மகள் வயிற்று பேரன், பேத்தி பிறந்திருப்பார்கள் போல என நினைத்தேன். பிறகு உதவி ஆசிரியரான மீனா எங்கள் அருகில் வந்து பெயர், போன் நம்பரை பெற்றார். எதற்கு, சும்மாதான் என்றார். பிறகுதான் சாக்லெட் அங்கிள், எழுதும் வாய்ப்புக்காக வாட்ஸ்அப் வழியே செய்தி அனுப்பினார் என சக உதவி ஆசிரியர்கள் பேசிக் கொண்டனர். சாக்லெட் எதற்கு என இப்போது தெரிந்துவிட்டது அல்லவா?  இந்த மீனா என்கிற லூசு பெண்மணிக்கு தனது பெ

ரஷ்யாவின் பெருமைக்குரிய ஹீரோ! - யூரி ககாரின்

படம்
  யூரி ககாரின் யூரி ககாரின் பலரும் அமெரிக்க வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்ததைப் பற்றி பேசுகிறார்கள். அவ்வளவு ஏன் பாடல் கூட எழுதிவிட்டார்கள். ஆனால் யூகி க காரின் அவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விண்வெளிக்கு சென்று சாதித்தவர். அவர் ரஷ்யாவில் பிறந்தார் என்பதற்காகவே ஒதுக்குகிறார்களோ எனும்படி இருக்கிறது ஊடகங்களின் செய்திகள்.  விண்வெளி காலம் என்பது நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்த காலத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. ரஷ்ய விண்வெளி வீரர் யூரி, 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று 9.07 மணிக்கு வோஸ்டாக் 1 என்ற விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார்.  சோவியத் யூனியனின் குளுசினோ எனும் நகரில் 1934ஆம் ஆண்டு பிறந்தவர் யூரி. இவரது பெற்றோர்கள் அன்றைய நடைமுறையான கூட்டுப்பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். இவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் யூரி மூன்றாவது ஆள்.  இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. அதில் ஜெர்மனி சோவியத்திற்குள் முன்னேறி வந்தது. அவர்களிடம் குளுசினோ நகரம் பிடிபட்டது. இதனால் குடும்பத்தின் பண்ணையும் அவர்களின் கைக்கு போய்விட்டது. வீர ர்களுக்கு உணவிட யூரியின் பெற்றோர் வற்புறுத்தப்பட்டனர். யூர