பெருமைக்காக மனிதர்களைக் கூட விற்கலாம்! - கடிதங்கள்- வினோத் பாலுச்சாமி

 








அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். நலமா?

பனியின் குளிர் அதிகாலையில் எழ விடுவதில்லை. இந்த சூழலிலும் கூட பக்கத்து அறையிலுள்ள ஐயர், ஹோமங்களை செய்ய நேரமே எழுந்து குளித்துவிட்டு சென்றுவிடுகிறார். நேற்று அலுவலகத்திற்கு, கிரைம் கதை எழுத்தாளர் ஒருவர் வந்திருந்தார். 

வரும்போதே கையிலுள்ள பிளாஸ்டிக் டப்பாவில் சாக்லெட்டுகளை வைத்திருந்தார். ஏதோ வினோதமாக பட்டது. எங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் மீனா என்ற பெண்மணிதான் அவரை அழைத்திருந்தார். வந்த  டக்இன் எழுத்தாளர் சேரில் நன்கு அழுத்தி உட்கார்ந்து கொண்டார். 

தன் முகத்தில் உள்ள மாஸ்கை கழற்றும் முன்னரே சாக்லெட்டை விநியோகிக்க சொன்னார். சாக்லெட்டை பெற்றவன், சரி, அவருக்கு மகள் வயிற்று பேரன், பேத்தி பிறந்திருப்பார்கள் போல என நினைத்தேன். பிறகு உதவி ஆசிரியரான மீனா எங்கள் அருகில் வந்து பெயர், போன் நம்பரை பெற்றார். எதற்கு, சும்மாதான் என்றார். பிறகுதான் சாக்லெட் அங்கிள், எழுதும் வாய்ப்புக்காக வாட்ஸ்அப் வழியே செய்தி அனுப்பினார் என சக உதவி ஆசிரியர்கள் பேசிக் கொண்டனர். சாக்லெட் எதற்கு என இப்போது தெரிந்துவிட்டது அல்லவா? 

இந்த மீனா என்கிற லூசு பெண்மணிக்கு தனது பெருமைக்கு யாரை விலைக்கு விற்கிறோம் என்று புரியவில்லை. யாராக இருந்தாலும் தனக்கு பயன்பட்டே ஆகவேண்டும் என்ற வெறி பொல்லாததுதான். 

அன்பரசு

25.12.2021

---------------

பின்டிரெஸ்ட்

கருத்துகள்