தவளைகளை சோதனைக்குழாய் முறையில் உருவாக்க முயன்ற முதல் ஆராய்ச்சியாளர்!

 




கூகுள் ஆர்ட் அண்ட் கல்ச்சர் - லாஸரோ


லாஸரோ ஸ்பாலன்ஸானி (lazzaro spallanzani)

லாஸரோ, வடகிழக்கு இத்தாலியில் 1729ஆம் ஆண்டு பிறந்தார். அப்பா சொன்னார் என்ற காரணத்திற்காக சட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் படிப்பில் சேர்ந்தபிறகுதான் தனக்கு ஆர்வம் இருக்கும் துறைகளை அடையாளம் கண்டார். இயற்பியல், இயற்கை அறிவியல் ஆகியவற்றில் ஈடுபாடு இருந்ததால் சட்டப்படிப்பை கைவிட்டார். 

 தனது முப்பது வயதில் கத்தோலிக்க பாதிரியாகியிருந்தார். கூடவே மாடனா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்தார். 1769ஆம் ஆண்டு பவியா பல்கலைக்கழகத்தில் பணி வாய்ப்பு கிடைத்தது. 1799ஆம் ஆண்டு காலமாகும் அவரை அப்பல்கலையில்தான் பணியாற்றினார். ஐரோப்பாவில் இயங்கி வந்த பல்வேறு அறிவியல் சங்கங்களில் லாஸரோ உறுப்பினராக இருந்தார். செரிமானம் பற்றி முதலில் ஆராய்ச்சியைத் தொடங்கிய லாஸரோ இறுதியில் விலங்குகளின் இனப்பெருக்கம் பற்றி கவனம் செலுத்தினார். 

தவளைகளை சோதனைக்குழாய் முறையில் உருவாக்க முடியுமா என்று சோதித்த முதல் அறிவியலாளர் லாஸரோ ஸ்பாலன்ஸானிதான். 1930ஆம் ஆண்டு வௌவால்கள் எப்படி எதிரொலி மூலம் பறக்கின்றன என்பதைப் பற்றிய கண்டுபிடிப்பு லாஸரோவுக்கு புகழ் சேர்த்தது. 1780ஆம் ஆண்டு விலங்கு, காய்கறிகளின் மூலக்கூறு அமைப்பு பற்றி ஆய்வுக்கட்டுரை ஒன்றை லாஸரோ எழுதினார். இதனை முக்கியமானது என அறிவியல் வட்டாரத்தினர் கருதுகிறார்கள். 

source

The biology book big ideas simply explained



கருத்துகள்