புத்தகங்களை பாதுகாக்கும் பேசும் பூனை! - புதிய நூல்கள் அறிமுகம்

 


















பீஸ்ட்ஸ் ஆப் லிட்டில் லேண்ட்

ஜூகியா கிம்

ஒன்வேர்ல்ட்

ரூ.499

1917 ஆம் ஆண்டு ஜேட் என்ற கொரியப் பெண், மிஸ் சில்வர் என்ற பெண்ணின் பள்ளிக்கு வேலைக்காக விற்கப்படுகிறாள். அதன்பிறகு கொரியாவில் ஜப்பானியப்படை போர்த் தாக்குதல் நடைபெறுகிறது. இந்த நேரத்தில்  ஜேட் என்ற பெண், ஜங் ஜோ என்ற இன்னுமொரு ஆதரவற்ற சிறுவனைப் பார்க்கிறாள். இருவருக்குள்ளும் நட்பு உருவாகிறது. ஆனால் வாழ்க்கை ஒருகட்டத்தில் இருவரையும் எதிரெதிரான நிலையில் நிறுத்துகிறது. 

தி கேட் ஹூ சேவ்டு புக்ஸ்

சூசுகே நட்சுகாவா, ட்ரஸ் லூயிஸ்

ஹீல் கவாய்

பிகாடர்

ரூ. 334

தாத்தா விட்டுப்போன புத்தக கடையை பேரன் நட்சுகி பார்த்துக்கொள்கிறார். கையில் கிடைக்கும் அனைத்து நூல்களையும் அவன் படித்துக்கொண்டிருக்கிறான். அப்போது நூல்களை பாதுகாக்கும் பேசும் பூனை ஒன்றை சந்திக்கிறான். அந்த நிகழ்ச்சி அவன் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பல்வேறு சம்பவங்களைப் பற்றித்தான் நூல் பேசுகிறது. 

அட்லஸ் சிக்ஸ்

ஆலிவியா பிளாக்

டோர்

ரூ.699

ஒரு ரகசியமான இயக்கத்தில் சேர மாயமந்திரக்காரர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. பாரம்பரியான இயக்கத்தில் சேருவது யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு. அதேசமயம் தன்னை நிரூபிப்பது மிகவும் முக்கியம். அப்படி ஆறு பேர் தங்களை எப்படி நிரூபித்தவர்கள் என்பதைத்தான் நாவல் பேசுகிறது. 

தி குளோபல் மெர்ச்சன்ட்ஸ்

ஜோசப் சசூன்ஸ்

ஆலெப் லேன்

 130 ஆண்டுகள் வணிகம் செய்து வந்த ச சூன்ஸ் என்ற புகழ்பெற்ற வணிக குடும்பத்தைப் பற்றிய வரலாறு. கூடவே பிரிட்டிஷ் வரலாறு, இந்தியாவின் சுதந்திரம் பற்றியும் பேசுகிறார்கள். 


தி இந்து ஆங்கிலம்




கருத்துகள்