இடுகைகள்

கலிஃபோர்னியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கலிஃபோர்னியா காட்டுத்தீ - போபால் விஷவாயு, சீனாவில் நச்சு நீர்,

படம்
  ஆஸ்பெடாஸ் உடலுக்குள் செல்வதால் ஏற்படுத்தும் தீமைகள்   ஆஸ்பெடாசிலுள்ள நார்கள், மனிதர்களின் உடலுக்குள் செல்லும்போது நுரையீரலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் ஒருவர் நன்றாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விட முடியாது. மூச்சு விடவே திணறுவார். நுரையீரலின் மேலுள்ள மெல்லிய அடுக்கின் பெயர், பிலுரா. இதை ஆஸ்பெடாஸ் வேதிப்பொருள் தடிமனாக்குகிறது. எனவே மூச்சுவிடுவது கடினமாகிறது. ஆஸ்பெடாஸ் காரணமாக ஏற்படும் புற்றுநோய்க்கு மெசோதெலியோமா என்று பெயர். இந்த நோய் ஒருவருக்கு ஆஸ்பெடாஸ் உடலுக்குள் செல்வதால் ஏற்படுகிறது. அதாவது, மெல்ல கொல்லும் விஷம் போல. முதலில் நுரையீரலில் பரவும் புற்று பிற உறுப்புகளுக்கும் வேகமாக பரவுகிறது. நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுவிடுவது கடினமாகிறது என்றால் இதயம் கடினமாக வேலை செய்யும்படி ஆகிவிடும். இதனால் இதயத் தசைகள் மெல்ல கடினமான இயல்பை பெறும். இது மார்பு வலியை உருவாக்கும்.   அமெரிக்காவின் மாண்டனாவில் உள்ளது லிபி. இங்கு ஆஸ்பெடாஸ் பல்வேறு பொருட்களில் கலந்து, மக்கள் பாதிக்கப்பட்டனர். இதை அகற்ற மட்டுமே அமெரிக்க அரசுக்கு அரை பில்லியன் டாலர்கள் தேவைப்பட்டன. அரசின் சூழல் பாத

துப்பாக்கி விதிகள் மாற்றவேண்டுமா? - கலிஃபோர்னியாவில் புதிய பிரச்னை!

படம்
வடக்கு கலிஃபோர்னியாவிலுள்ள கில்ராய் எனுமிடத்தில் உணவுத்திருவிழா நடைபெற்றது. இதில் வெள்ளை இனவெறியர் துப்பாக்கியில் சுட்டதில் 12 பேர் காயமடைந்தனர். 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2014 ஆம் ஆண்டிலிருந்து கலிஃபோர்னியாவில் நடைபெறும் ஏழாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் இது. டெக்சாஸ் மாநிலம் இவ்வகையில் நான்கு துப்பாக்கிச்சூடுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. துப்பாக்கிச்சூட்டை செய்தவருக்கு வயது 19 தான். சான்டினோ வில்லியம் லீகன் என்பவர் போலீசாரால் உணவுத்திருவிழா இடத்திலேயே கொல்லப்பட்டார். இவர் இன்ஸ்டாகிராம் கணக்கில் துப்பாக்கிச்சூட்டிற்கு சில மணிநேரம் முன்பு மைட் ஈஸ் ரைட் எனும் ராக்னர் ரெட்பியர்டு 1890 ஆண்டு எழுதிய நூலை பகிர்ந்துள்ளார். இது வெள்ளையர்களின் இனமேன்மையை தூக்கி பிடிக்கும் நூல். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடுகள் நடைபெறும் சமயம் மட்டும் பேசப்படும் சமாச்சாரமாக மாறிவிட்டது. தேசிய ரைபிள் அசோசியேஷனின் பணம் பெற்று பிரசாரத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் நிச்சயம் துப்பாக்கிகளை இளைஞர்கள் வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பில்லை. வெள்ளை இனவாதம் என்பதை போலியாக உருவாக்கி தேர்தலில் வெல்ல

கண்டுபிடிப்புகளின் தேசம் எது?

படம்
Church Militant கண்டுபிடிப்புகளின் தேசம் அமேசான் வலைத்தளத்தில் 238 கண்டுபிடிப்புகளுக்கான அப்ளிகேசன்கள் வந்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் வடக்குப்பகுதி நகரங்களில் அதிகளவு ஆராய்ச்சி தொடர்பான நடவடிக்கைகள் தென்படுகின்றன. 2000 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில்  கலிஃபோர்னியாவிலுள்ள சான்டா கிளாரா பகுதி அதிகளவு காப்புரிமைகளைப் பெற்றிருந்தது. மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரம் காப்புரிமைகள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதற்கடுத்து சான்டியாகோ நகரம் இடம்பெற்றுள்ளது. இதோடு பாஸ்டன், சியாட்டில் ஆகிய நகரங்கள் தொழில்நுட்பத்தில் சிறந்தவையாக உள்ளன. இதில் லாஸ் ஏஞ்சல்ஸ், டெட்ராய்ட், பீனிக்ஸ் ஆகிய நகரங்களும் உண்டு. ஆராய்ச்சிகள் அதிகரிக்க காரணம், கல்வி கற்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதும், கற்றவர்கள் அதிகரித்துள்ளதும், ஆராய்ச்சிகளுக்கு அதிகம் செலவழிக்கப்படுவதும்தான். சான்டா கிளாராவிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் , சிலிகன் வேலிக்கான பொருளாதாரத்தை உருவாக்கும்படி ஏராளமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளன. பனிக்காலத்தின்போதும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் பல்