இடுகைகள்

பீட்டே காரட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்களை விலைக்கு விற்கும் பச்சோந்தி அரசியல்வாதிகள்

படம்
பசுமைக்கட்சி, அணு ஆயுதங்களை, ராணுவ நடவடிக்கைகளை, போரை எதிர்க்கிறது. ஆனால் கூட்டாட்சி முறையில் பல்வேறு சமரசங்களை செய்ய வேண்டியிருக்கிறது. பாசிச ஆட்சிக்கு எதிராக சமரசமே செய்யமுடியாது. முழுக்க போராடி வெல்லவேண்டும் என்று கூறுவது முன்னோர் வாக்கு. ஆனால் ஆட்சி அமைத்து நிர்வாகத்தில் பங்கேற்ற பசுமைக்கட்சியினர், பல்வேறு நாடுகளில் சூழல் மீதான கவனத்தைக் கொண்டு வந்தாலும் பெரும்பான்மை பலமில்லாத நிலையில் அடிப்படை கருத்துகளை முழுக்க செயல்பாட்டிற்கு கொண்டுவரமுடியவில்லை. பசுமைக்கட்சியினருக்கு மாற்றம் என்பது எளிதாக நடைபெறக்கூடியது அல்ல, எளிதாகவும் நிறைவேறாது என்று தெரிந்திருக்கிறது. மாறுதலுக்கு காலமும் குறைந்துகொண்டிருக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் செயல்ளை மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொள்ளாவிட்டால் எதையும் மாற்றிக்கொள்ளமுடியாது என்ற நிலை கூட வரலாம். வன்முறையைப் பயன்படுத்தி, லஞ்சம் கொடுத்து எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வருவது அசாத்தியம். அதை நிலைக்கும் என்று கூட கூறமுடியாது. கட்சி தொடங்கி, கொள்கைகளை பிரசாரம் செய்து மக்களை ஈர்த்து அரசியல் அதிகாரத்தைப் பெற்று தேர்தலில் வென்று மக்களின் பிரதிநிதிகளாகி கொள்கை