இந்தியர்களுக்கு முதல் முன்னுரிமை சாதி, துணைச்சாதிகள்தான், பிறகுதான் நாடு!
பிரிட்டிஷார் இந்தியாவை ஆளும்போது, ஒரே அரசாக மக்களை ஒன்றாக வைத்திருந்தனர். அவர்கள் 1947ஆம் ஆண்டு வெளியேறியவுடன் நாடு இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாக பிரிந்துவிட்டது. நாகா பழங்குடிகளுக்கு தனி மாநிலம் வழங்கப்பட்டது. தனி மாநில கோரிக்கையை பலரும் கேட்டு வருகிறார்கள். சீக்கியர்கள், காலிஸ்தான் எனும் தனி நாட்டுக்காக போராடி வருகிறார்கள். இந்துமதம், இந்தியர்களுக்கு இடையே பிரிவினையை உருவாக்குகிறது. எனவே நாடு, பல்வேறு பிரிவு, துணைப்பிரிவுகளாக பிரிந்து வருகிறது. இந்தியாவில் இப்போது இந்தியர்கள் என யாருமே இல்லை. இந்தியர்களுக்கு முதல் முன்னுரிமை சாதி, துணைச்சாதிதான். இதற்கெல்லாம் பிறகுதான் நாடு வருகிறது. இந்தியாவுக்கும் வெளிநாட்டினர் இதை எளிதாக அறிந்துகொள்ள முடியும். அமெரிக்காவில் உள்ள இந்துகள் கூட தீண்டாமை, சாதி விதிகள், பிரிவினைகளை கடைபிடிக்கிறார்கள். இந்துகள் அவர்கள் போகும் இடங்களிலெல்லாம் அவர்களது சாதியை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தவர்களுக்கு நடக்கும் அநீதி, ஆரியர்கள் தீண்டத்தகாதவர்களுக்கு செய்வதை ஒத்தது. 1947ஆம் ஆண்டுக்குப் பிறகு முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்க...