மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது சக்கரம் என்று கூறுபவர்களது கருத்து தவறு! - பாபாசாகேப் தோரத், காங்கிரஸ்

 

 

 

 

Balasaheb Thorat appointed as the leader of the Congress ...

 

 

 


நேர்காணல்


பாலசாகேப் தோரத்


மகாராஷ்டிரா காங்கிரஸ்


சிவசேனா கட்சி காங்கிரஸ் முன்வைத்த நியாய் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது. ஆனால் சிவ போஜன் எனும் திட்டத்தை அவர்கள் மேம்படுத்தி நடைமுறைப்படுத்தியுள்ளனரே?


அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர்ந்துதான் சிவபோஜன் திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. ஒற்றை கட்சியாக இப்படி அடையாளப்படுத்துவது சரியல்ல. நாங்கள் மூன்று கட்சிகளும் திட்டங்கள் பற்றி ஆலோசித்து்த்தான் செயல்படுத்தியுள்ளன. ராகுல்காந்தி அறிமுகப்படுத்திய நியாய் திட்டம் பொருளாதார அறிஞர்களால் வடிவமைக்கப்பட்டது. ஆனால் மாநிலத்தில் பொருளாதார பிரச்னைகள் இருப்பதால் அத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அத்திட்டத்தை நாடுமுழுக்க மத்திய அரசு செயல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை கொண்டுள்ளது.



உங்கள் கட்சியில் ஒருங்கிணைப்பு ரீதியான பல்வேறு பிரச்னைகள் வருகின்றனவே. கேபினட் சந்திப்பிற்கு முன்னதாக நிதின் ராவத் அறிவித்த மின்சார கட்டண மானியம் என்பதை அசோக் சவான் தவறு என்று கூறியுள்ளாரே?



மின்சார கட்டண மானியம் பற்றி கேபினட்டில் முன்னரே விவாதிக்கப்பட்டது. அசோக் சவான் இதுபற்றி அறியாமல் உள்ளார். பெருந்தொற்று காரணமாக உருவான பொதுமுடக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடுமையான சிக்கலில் உள்ளனர். நாங்கள் இந்த அறிவிப்புக்கான நிதித்தொகை பற்றிக்கூட விவாதித்துள்ளோம். இதுபற்றி விவாதித்து பலரும் நம்பிக்கை அளித்ததபிறகே அமைச்சர் மக்களுக்கு இத்திட்டம் பற்றி அறிவித்தார்.


இதற்குப் பிறகுதான் வெள்ளபாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாநிலமெங்கும் பயிர்கள் இழப்பு ஏற்பட்டது. இதற்காக விவசாயிகளுக்கு பத்து கோடி நிவாரண உதவிகளை வழங்கினோம். மத்திய அரசில் இதற்கான நிதித்தொகை உள்ளது. ஆனால் அவர்களின் குழு மாநிலத்திற்கு வந்து பார்வையிடவில்லை. எங்கள் மாநிலத்திற்கு இன்னும் ஜிஎஸ்டி நிலுவையை வழங்கவில்லை. மத்திய அரசு இன்னும் கொரோனா வைரஸ் கிட் தேவை என்பதைக் கூட கருத்தில் கொண்டு எங்களுக்கு உதவ முன்வரவில்லை. நாங்கள் மூன்று கட்சிகளும் ஒன்றாக சேர்ந்துதான் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளோம். எளிய மனிதருக்கு என்னவிதமான உதவிகளை வழங்கமுடியும் என்பதுதான் எங்கள் ஆலோசனையாக இருந்தது.


காங்கிரசிற்கு மகாராஷ்டிராவில் என்ன விதமான உத்தி பயன்படுத்தப்படுகிறதுழ


நாங்கள் இம்மாநிலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகளை குறிவைத்து செயல்படுகிறோம். நாங்கள் விரைவில் மாநிலங்கள் அளவில் உறுப்பினர்களை சேர்க்கவுள்ளோம். தொண்டர்களுக்கான பயிற்சிப்பட்டறைகளையும் உருவாக்கி நடத்தவுள்ளோ்ம்.


மகாராஷ்டிராவில் ஓராண்டு கழிந்துவிட்டது. காங்கிரசின் சாதனைகள் என்று எதனைச் சொல்லுவீர்கள்?


பாஜகவை ஆட்சி அமைக்க முடியாமல் தடுத்து மூன்று கட்சிகள் இணைந்து வெற்றிகரமாக ஆட்சி அமைத்துள்ளதை மிகப்பெரிய வெற்றியாக சொல்ல வேண்டும். அவர்களின் ஆ்ட்சிமுறையும் கருத்தியலும் நாட்டை பல்லாண்டுகள் பின்தள்ளிவிடும் ஆபத்தைக் கொண்டவை. அவர்களுடைய வெற்றி பார்முலா மக்கள் சமூகத்தை பிரித்து வெறுப்பை விதைத்து அதை வாக்குகளாக அறுவடை செய்வதுதான். அதில் அவர்கள் எளிதாக வெற்றி பெற்றுவிடுவார்கள். நாங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமவாய்ப்பு உரிமைகளை கொடுக்க நினைக்கிறோம். இதனையே நாங்கள் எங்கள் திட்டங்களில் செயல்படுத்தி வருகிறோம்.



ஓராண்டு காலம் முடிந்துவிட்ட நிலையில் நிதியை சரியான படி பகிர்ந்து அளிப்பதில் தடுமாற்றம் உள்ளதே, காங்கிரஸ் கட்சி அமைச்சர்களே கடுமையான அதிருப்தியில் உள்ளனர் என்று கூறப்படுகிறதே?


எங்களை மூன்றாவது சக்கரம் என்று சிலர் கூறி வருகிறார்கள். அது தவறு நாங்கள் மூன்று கட்சிக்களாக ஒன்றாக இணைந்து ஆட்சி செய்து வருகிறோம். அனைத்துகட்சிகளும் ஒன்றாக சேர்ந்து இணைந்து விவாதித்துத்தான் ஆட்சி செய்து வருகிறோம். பல்வேறு முடிவுகளை எடுக்கிறோம். ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டும் அவர்களுடைய கட்சியில் பிரச்னைகள் இல்லையா?


நிதியுதவி விவகாரத்தில் பெருந்தொற்று காரணமாக மாநிலத்தில் நிதிச்செலவுகளுக்கு கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னுரிமை அடிப்படையில் குறிப்பிட்ட பணிகளுக்கு அதிக நிதி அளிக்கவேண்டிய நிலை உள்ளது. அமைச்சர்கள் தம் திறமையை நிரூபிக்க அதிக அளவு நிதியை கேட்பது இயல்பானதுதான்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்




கருத்துகள்