வேலைவாய்ப்பு, மேம்பாடு ஆகிய நேர்மறை விஷயங்களை தேஜஸ்வி யாதவ் பேசி வாக்குகளைப் பெற்றார்!
சஞ்சய் குமார்
பேராசிரியர்
சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டிஸ்
காங்கிரஸ் கட்சி தான் நினைத்த இலக்கை எட்ட முடியவில்லை. கூட்டணிக் கட்சியாக இருந்தும் இந்த நிலை. மாநில கட்சிகள் வலுப்பெற்று வருவதை இந்த நகிழவுகள் காட்டுகின்ற்ன என்று கூறலாமா?
பீகாரில் 70 இடங்களை வாங்கி 19இல் மட்டும் வென்ற காங்கிரஸ், தனது அந்தஸ்தை இழந்துவிட்டது என்றுதான் கூறமுடியும். மாநிலங்களில் வலுவாக உள்ள கட்சிகளோடு காங்கிரஸ் கூட்டணி வைத்துத்தான் சில மாநிலங்களை ஆண்டு வருகிறது. அந்த மாநில கட்சிகள் பலம் பொருந்தியவையாக மாறுகின்றன. காங்கிரஸ் அப்படி வலுவாக மாறவில்லை. இதனை பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் நிலையைப் பார்த்தாலே புரிந்துகொள்ளமுடியும்.
லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சிராஜ் பாஸ்வான் மகாபந்தன் கூட்டணியை வெற்றிபெறச்செய்திருப்பாரா?
அப்படி முழுமையாக கூறிவிட முடியாது. நிதிஷூக்கு எதிரான ஓட்டுகளை சிராஜ் பாஸ்வான் பெற்றிருக்கிறார். ஆனால் இது எப்படி ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்கு உத
வும். அவர்கள் சிராஜின் வாக்குகளைப் பெற முடியாது.
பாஜகவின் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்?
அவர்களுக்கு இனி நிதிஷ் தேவைப்படமாட்டார். அதாவது அந்தக்கூட்டணி இன்றியே பாஜக இனி பீகாரில் ஜெயிக்க முடியும். அதற்கான சான்றுதான் பாஜகவின் மிகப்பெரிய வெற்றி. பீகாரில் நிதிஷை விரும்பாதவர்கள் கூட பாஜக கூட்டணியில் அவர் இருக்கிறார் என்ற காரணத்திற்காக வாக்களித்து மிகப்பெரும் வெற்றி பெற காரணமாக இருந்திருக்கிறார்கள்.
தேஜஸ்வியின் வெற்றியையும் எழுச்சியையும் எப்படி பார்க்கிறீர்கள்?
ஆர்ஜேடி கட்சிக்கு பாரம்பரியமாக வாக்களிக்கும் மக்கள் பீகாரில் உண்டு. அவர்களில் யாதவும் உண்டு. முஸ்லீம்களும் உண்டு. அவர் அதிகளவு வாக்குகளைப் பெற்றதற்கு காரணம் அவர் தாக்குதலில் ஈடுபடவில்லை. பிற கட்சிகள் அவரை காட்டரசு என்று விமர்சித்தபோதும், நேர்மறையான வாக்குகுறுதிகளை அவர் பீகார் மக்களுக்கு அளித்தார். பீகாரின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகிய இரண்டு விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பேசினார். இந்த அணுகுமுறை அவரை பிற கட்சியினரிடையே வேறுபடுத்தி காட்டியது. ஆனால் இதனால் அவரை பீகாரில் முதல்வர் ஆகமுடியவில்லை. ஆனால் வென்ற கட்சிக்கும் அவருக்கும் வாக்கு எண்ணிக்கையில் பெரிய வேறுபாடுகள் கிடையாது.
லிவ் மின்ட்
கியான் வர்மா -அனுஜா
கருத்துகள்
கருத்துரையிடுக