6 ஜி இந்தியா! - இந்தியா தொலைத்தொடர்பு ஆய்வுகளில் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியம் என்ன?

 

 

 


 

 

6 ஜி இந்தியா!




தொலைத்தொடர்பு துறை நாள்தோறும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் வளர்ந்து வருகிறது. இதன்மூலம் அத்துறை மட்டுமன்றி, எளிய மனிதர்களின் வாழ்க்கையும் காலப்போக்கில் வளர்ச்சியடைகின்றன. வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதை தொண்ணூறுகளில் யாரும் நினைத்து பார்த்திருக்கமுடியாது. ஆனால் பெருந்தொற்று காலத்தில் வளர்ந்துள்ள நவீனத் தொழில்நுட்பம் அதனை சாத்தியப்படுத்தியுள்ளது.


தொண்ணூறுகளில் 2ஜி தொழில்நுட்பத்தை மக்கள் பயன்படுத்த தொடங்கினர். அந்த வளர்ச்சி, மெல்ல வளர்ந்து 5ஜி, 6ஜிக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேலைநாடுகளில் அமைத்து வருகிறார்கள். 5ஜியின் வேகம் 1 Gbps (1000 Mbps) என இருக்கும் என டெக் வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். 6ஜி வேகம் 1 Tbps (1000 Gbps) ஆக இருக்கும். எரிக்ஸன், சாம்சங், ஹூவெய் ஆகிய நிறுவனங்கள் இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகி்ன்றனர்.


இந்த அதிவேக இணைய ஆற்றலை எப்படி எதற்கு பயன்படுத்தலாம்? அலுவலகம் சார்ந்த சந்திப்புகளுக்கு ஒரே நாளில் பல்வேறு இடங்களுக்கு ஒருவர் அலைவது கடினம். எனவே 5 ஜி, 6ஜி தொழில்நுட்பம் மூலம் ஒரு இடத்தில் பேசுவதை ஹோலோகிராம் வடிவில் அவரின் உருவம் பேசுவதாகவே உலகின் பல்வேறு இடங்களில் காட்ட முடியும். மருத்துவ வசதி எட்டாத இடத்தில் கூட மருத்துவர் கர்ப்பிணி பெண்களுக்கு, நோயுற்றவர்களுக்கு வீடியோ வசதி மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கமுடியும். நோயாளியின் அருகில் உள்ள செவிலியர் இதனை புரிந்துகொண்டு செயலாற்ற முடியும். இவை சிறிய எடுத்துக்காட்டுகள்தான். உங்கள் மனதில் தோன்றும் விஷயங்களை பெரும்பாலும் சாத்தியப்படுத்தும் தொழில்நுட்பம் எனலாம். இதனூடே க்ளவுட் சேமிப்பு, செயற்கை நுண்ணறிவு ஆகியவையும் வேகமாக மேம்படும். 6ஜி மூலம் ஒரு சதுர கிலோமீட்டரில் லட்சக்கணக்கான டிஜிட்டல் சாதனங்களை குறைந்த செலவில் இணைக்க முடியும்.


தொலைத்தொடர்பு துறை கொரானா நோய்த்தொற்று காலத்திலும் பாதிப்பின்றி முதலீடுகளை பெருமளவில் பெற்று வருகிறது. 6ஜி தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியில் இந்தியா முதலீடு செய்யும்போது, பொதுத்துறை- தனியார் பங்களிப்பு முறையில் செயல்படலாம். இதன்மூலம் கிடைக்கும் முதலீடுகளின் மூலம் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கண்டுபிடிப்புகளை உருவாக்கலாம்.


6ஜி போன் மூலம் கனரக தொழிற்சாலை முதல் விவசாயம் வரையில் பல்வேறு துறைகளும் மாற்றங்களைச் சந்திக்கவிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு, ரேடியோ அலைவரிசை, தொலைத்தொடர்பு, உயிரி அறிவியல், கணினி அறிவியல் ஆகிய துறைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தினால் 6ஜி பந்தயத்தில் வெல்லலாம். குறைந்தவிதிகள், பெருமளவு முதலீடு, பல்லாண்டுத் திட்டம் என திட்டமிட்டு பிரதமர் தலைமையின் கீழ் 6ஜி ஆதார கட்டமைப்பு அமைவது அவசியம். திறமை, தொழில்நுட்பம், நம்பிக்கை ஆகியவற்றை நம்பி உழைத்தால், இந்தியாவின் 100வது சுதந்திர தினமான 2047ஆம் ஆண்டு, ஆசியாவின் சக்திவாய்ந்த நாடாக நாம் மாறியிருப்பது உறுதி.


தகவல்

FE, TI


கருத்துகள்