உலகப்போரை தடுத்து நிறுத்தும் அசாதாரண படை! - டிசி காமிக்ஸின் கொஞ்சம் கிளாசிக் அவெஞ்சர்! லீக் ஆப் எக்ஸ்ட்ராடினரி ஜென்டில்மேன்
லீக்
ஆஃப் எக்ஸ்ட்ராடினரி
ஜென்டில்ஸ்மேன் 2003
Music by | Trevor Jones |
---|---|
Cinematography | Dan Laustsen |
1899ஆம் ஆண்டு நடைபெறும் கதை. சீன் கானரிதான் படையின் தலைவர். படம் இன்றைய மார்வெல்லின் அவெஞ்சர் படத்தின் கதைதான்.
அதற்காக கென்யாவுக்கு ஆட்களை அனுப்பி சீன்கானரியை கூட்டி வரசொல்லுகிறார்கள். இவர்களுக்கு முன்னரே பேன்டமின் ஆட்கள் அங்கு வந்து கோர்ட்மனை தாக்குகிறார்கள். கோர்ட்மன் எனும் துப்பாக்கி சுடுவதில் கில்லியான அரசுப்படை அதிகாரியாகி ஓய்வுபெற்றவர்தான் சீன் கானரி. இவர் தலைமையில் உடல் மறைந்துள்ள ஸ்கின்னர், சீக்கிய கொள்ளைக்காரர், ரத்த காட்டேறிப் பெண், அமெரிக்க உளவுத்துறை ஆள் ஒருவர், இறப்பே ஏற்படாத மனிதர், மருந்தைக் குடித்தால் பெரிய சைஸ் ஹல்காக மாறும் பேராசிரியர் ஆகியோரைத் திரட்டுகிறார்கள்.
இந்தப்படை உலகப்போரை தடுத்து நிறுத்தியதா, அல்லது எதிரிக்கு பணிந்து உயிரைக் கொடுத்துவிட்டதா என்பதை இறுதிக்காட்சி சொல்லுகிறது.
படம் சீன்கானரி, இந்தி நடிகர் நஸ்ரூதின் ஷாவுக்கானது. இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். உலகநாடுகளின் அரசியல், ஆயுத வியாபாரம் ஆகியவற்றை பற்றி முடிந்தவரை பேசியிருக்கிறார்கள். படத்தில் வேண்டுமென்றோ, வேண்டாமென்றோ ஏராளமான இந்தியத்தன்மைகளை கொண்டு வந்திருக்கிறார்கள். சீக்கியரின் கப்பல்தான் அனைத்து வீரர்களுக்கும் உதவுகிறது. இதிலும் உச்சியில் சிவலிங்கத்தை இருத்தியிருக்கிறார்கள். ஏகப்பட்ட சிஜி காட்சிகளை வைத்திருக்கிறார்கள்.
சாகசம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக