புயல்களின் வரலாறு! - அமெரிக்காவை பாதித்த புயல்களை அறிவோமா?
புயல்களின் வரலாறு!
ஒக்கிசோபீ
1928ஆம் ஆண்டு 6-21 செப்டம்பர்
பலி- 4 ஆயிரம்
புளோரிடாவில் இந்த புயல் ஏற்படுத்திய நிலச்சரிவு பாதிப்பு அதிகம். இதனால் பால்ம் பீச் அருகே குடியிருப்புகளில் வாழ்ந்த மனிதர்கள் இறந்துபோனார்கள். கரீபியன் பகுதியில் இதன் காரணமாக 1500 பேர் பலியான செய்தியை முன்னமே கிடைத்தும் மக்களின் இறப்பைத் தடுக்க முடியவில்லை. விவசாயம் செய்யப்பட்டு வந்த ஏரி ஒக்கிசோபீதான் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி. 225 கி.மீ வேகத்தில் அடித்த புயல் காற்று அனைத்தையும் சர்வநாசம் செய்துவிட்டது. பல தொழிலாளர்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டனர்.
லேபர் டே புயல்
1935ஆம் ஆண்டு 29 ஆக. 10 செப்டம்பர்
பலி 485
இந்த புயலை சரியாக அதிகாரிகள் கணிக்கவில்லை. எனவே 485பேர் பலியாகும்படி சூழல் உருவாகிவிட்டது. புளோரிடாவை 2ஆம் தேதி புயல் தாக்கியது. சீர்குலைந்த சாலைகளை சரிசெய்ய முதல் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீர ர்கள் அனுப்பினர். இவர்களில் 250பேர் வேலை செய்த இடத்திலேயே பலியானார்கள். காரணம் ஒருங்கிணைப்பாளர் புயலின் பலத்தை முன்னமே அறிந்திருக்கவில்லை. கடற்பகுதியில் மனிதர்கள் உருவாக்கிய எந்த கட்டுமானமும் உடையாமல், நொறுங்காமல் இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். புயல் எப்படிப்பட்டதென்று....
போலா புயல்
1970 நவம்பர் 3-13
சூறாவளி
பலி 5 லட்சத்திற்கும் அதிகம்.
தெற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உருவாகி வந்த சூறாவளிப் புயல். போலா வங்கதேசம் மற்றும் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மணிக்கு 225கி.மீ வேகம் மற்றும் ஆறு மீட்டர் உயரத்திற்கு அலைகளை ஏற்படுத்திய சூறாவளிப்புயல் இது. பலரும் நினைத்து பார்த்து பயப்படும் சூறாவளிப் புயல்களில் போலாவுக்கும் முக்கிய இடமுண்டு.
கத்ரினா
2005ஆம் ஆண்டு ஆக. 23-31
பலி 1800
லூசியானாவுக்கு கத்ரீனா வந்தபோது இருந்ததை விட மெக்சிகோ வளைகுடா பகுதிக்கு சென்றபோது இன்னும் வலிமையான புயலாக மாறி விட்டது. இதைப்பற்றி பராக் ஒபாமா, இயற்கை பேரிடராக இருந்தாலும் இதனை மனிதர்கள் உருவாக்கிய பேரிடர் போலத்தான் பார்க்கவேண்டும் அரசு மக்களைக் காக்க தவறிவிட்டது என ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்தார் என்றால் பாருங்கள். சேதமும் பலியும் அந்தளவு அதிகமாக இருந்தது.
வில்மா
2005 அக்டோபர் 15-27
பலி 87
ஜமைக்கா அருகே உருவாக அமெரிக்கா வந்த புயல் இது. புளோரிடாவை தாக்கியபோது அங்கு 60 லட்சம் மக்கள் இரண்டு வாரங்களுக்கு மின்சாரம் இன்றி கஷ்டப்படும் படி சூழல் மாறியது. கரும்பு பயிரை நாசம் செய்து பேரிழப்பை ஏற்படுத்தியது வெள்ள நீர் பெருகியதில் பிற பயிர்களும் நாசமானது.
புயலால் நடந்த இறப்புகளில் 90 சதவீதம் வெள்ளநீரினால் ஏற்பட்டவையே.
ஜான் என்ற புயல் 13,228 கி.மீ தூரம் பயணித்து பல்வேறு நாடுகளை தாக்கியது. இத்தொலைவு பூமியின் சுற்றுவட்டத்தை விட அதிகம்.
2005ஆம் ஆண்டுதான் அதிகளவு புயல்கள் உருவாகி நாடுகளைத் தாக்கின. மொத்தம் 27 புயல்கள் உருவாயின.
இதே ஆண்டு உருவான கத்ரீனா புயல், அமெரிக்காவில் 160 பில்லியன் டாலர்கள் சேதம் ஏற்படுத்தியது. அதிக சேதம் ஏற்படுத்திய புயல்களில் கத்ரீனாவுக்கு முக்கிய இடமுண்டு.
கருத்துகள்
கருத்துரையிடுக