பெமினா - சாதித்த பெண்கள்! எளிய மக்களின் பிரச்னைகளை டிவியில் பேசிய தொகுப்பாளர்
ஷானாஸ் ஹூசைன்
ஆயுர்வேத அழகு கலைஞர்
இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆயுர்வேத அழகுக்கலைஞர் இவர். தனது தந்தையிடம் கடன் வாங்கி மும்பை பிளாட்டில் தனது மருத்துவமனையைத் தொடங்கினார். முதலீடு 35 ஆயிரம் ரூபாய். வெளிநாட்டு முக அழகு கலைஞர்களிடம் பல்வேறு விஷயங்களை கற்றவர்தான்.ஆனால் ஆயுர்வேதம் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். செயற்கையான வேதிப்பொருட்கள் வேண்டாமே என்று யோசித்ததால் நேர்ந்த மாற்றம் இது. முதன்முதலில் ரோஸ் சார்ந்த ஸ்கின் டோனர் ஒன்றை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து ஏற்றம்தான். இன்று சந்தையில் இவரது நிறுவனத்தின் 375 பொருட்கள் பரபர விற்பனையில் உள்ளன. ஹார்வர்டு பல்கலையில் தனது பிராண்ட் பற்றி மாணவர்களுக்கு உரையாற்றியுள்ளார். அவர்களின் ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றிலும் ஹூசைன் பற்றி எழுதப்பட்டுள்ளது.
ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என 40 ஆயிரம் பேர்களுக்கு அழகுசிகிச்சை சார்ந்த பயிற்சியை வழங்கியுள்ளார் ஹூசைன். இவரது போர்ட்ரைட் ஓவியர் ஒன்றை ஓவியர் எஃப் ஹூசைன் வரைந்தார். அதனை லண்டன் கிரிஸ்டி நிறுவனம் ஏலத்தில் விற்றது. ஆயுர்வேத அழகு சிகிச்சையை உலகம் முழுக்க கொண்டுபோய் சேர்த்தியவர். இவரே.
2
ஃபாயே டி சூசா
பத்திரிகையாளர்
பெண்ணியவாதியா? பெண் குலத்திற்கே இன்சார்ஜா? ஃபாயே டி சூசா வெறும் செய்தியை மட்டும் தொகுத்து வழங்கவில்லை. இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று கனவு கண்டிருப்பார்களோ அதைத்தான் செய்தியில் சொல்ல முயன்றார். சமூக வலைத்தளங்கள் மூலம் போலிச்செய்திகளை வெளியில் கொண்டு வந்தார். செய்திகள் மூலம் தன்னை பின்பற்றுபவர்களுக்கு பல்வேறு செய்திகளை சொல்லித் தந்தார்.
கேள்விகள் கேட்பதற்கு ஃபாயே என்றும் தயங்கியதில்லை. தடுமாறியதில்லை. தினசரி மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளைப் பற்றி பேசி ரெட்இங்க் விருது வாங்கிய பத்திரிகையாளர்.
3
டாக்டர் மாலினி சபா
சபா, இருபது நாடுகளில் 5 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டு 15 நிறுவனங்களை உருவாக்கி பணிபுரிகிறார். ரியல் எஸ்டேட், பொழுதுபோக்கு, தங்க சுரங்கம், மருந்து நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என பல்வேறு துறை நிறுவனங்களை நிர்வாகம் செய்து வருகிறார்.
சபா குழும நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 50 சதவீதத்தை கல்வி, சுகாதாரம், கலை, கலாசாரம், மனித உரிமை என செலவழித்திருக்கிறார். தென்கிழக்கு ஆசியாவில் ஏழை பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார். அதாவது, மருத்துவம், கல்வி போன்றவை இதற்காக டாக்டர் சபாவை பற்றி நாம் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறோம்.
4
நடாஷா பூனாவாலா
சீரம் இன்ஸ்டிடியூட் குடும்பத்தைச் சேர்ந்தவர். லண்டனில் பொருளாதாரம் படித்தவர். வில்லூ பூனாவாலா பவுண்டேஷனின் தலைவர். இந்த நிறுவனத்தின் மூலம் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். சீரம் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர்களில் இவரும் ஒருவர். அழகு, அறிவு என இரண்டு விஷயங்களிலும் நடாஷா துணிச்சலாக போட்டியிட்டு வருகிறார்.
5
த்வானி பானுஷாலி
சாகோ படத்தில் காதல் சைக்கோ பாடலை பாடிய பாப்ஸ்டார். 22 வயதில் பில்போர்டு, பிபிசி மியூசிக் பட்டியலில் இடம்பெற்ற இந்திய பிரபலம். பாடல், நடனம், பிட்னெஸ் என முழு என்டர்டெய்னராக தயாராகி வருகிறார். வாஸ்தே, லே ஜா ரே என்ற பாடல்கள் இன்றும் அவரை முன்னணியில் வைத்துள்ளது. இப்போது பேபி கேர்ள் என்ற பாடலுக்கு குருராந்தவாவுடன் இணைந்துள்ளார். இப்பாடல் 50 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
துபா லிபா, கேட்டி பெர்ரி என்ற உலகளவில் பிரபலமான இசைக்கலைஞர்களோடு இணைந்து பாடியிருக்கிறார். இதனை தனது இளம் வயதிலேயே சாதித்து விட்டார் என்பதுதான் முக்கியமானது.
6
ஷபனா ஆஸ்மி
கம்யூனிஸ்ட் குடும்பத்தில் பிறந்தவர். ஜாவேத் அக்தரை விரும்பியபோது அவருக்கு திருமணமாகி குடும்பம் இருந்தது. அவர் விவாகரத்து பெற்றபிறகு காத்திருந்து திருமணம் செய்தார். தனது காதலை உலகம் கொச்சைப்படுத்தியபோதும் அதை விரும்பியே செய்தார். எதற்கும் தடுமாறவில்லை. தனது நடிப்பிற்காக ஐந்துமுறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். மிஜ்வான் சமூகநல சங்கத்தின் மூலம் வறுமையில் உள்ள பெண்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக