விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் முக்கியமான கண்டுபிடிப்புகள்
விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் முக்கியமான கண்டுபிடிப்புகள்
எட்வின் ஹப்பிள்
இவர் 1927ஆம் ஆண்டு பிரபஞ்சத்தில் தொலைதூரத்தில் உள்ள விண்மீன்களை கண்டுபிடித்து அதுபற்றிய ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டார். ஆனால் அப்போது அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.
ரால்ப் ஆல்பர், ராபர்ட் ஹெர்மன்
ஆகிய இருவரும் 1948ஆம் ஆண்டு பிரபஞ்சத்தில் வெளியாகும் கதிர்வீச்சு, அதன் வெப்பநிலை பற்றி கண்டுபிடித்தனர். -268 டிகிரி செல்சியஸ் என உறுதி செய்தனர்.
1964 ஆம் ஆண்டு அர்னோ பென்ஸியாஸ், ராபர்ட் ஆகியோர் பலவீனமான ரேடியோ ஒலி ஒன்றை பதிவு செய்தனர். பின்னர் அது பெருவெடிப்பில் உருவான கதிர்வீச்சில் உருவானது என விளக்கப்பட்டது.
1989ஆம் ஆண்டு கோப் காஸ்மிக் பேக்கிரவுண்ட் எக்ஸ்ப்ளோரர் சாட்டிலைட் , பிரபஞ்சத்தில் உள்ள கதிர்வீச்சை கண்டுபிடித்தது. பெருவெடிப்பு சார்ந்த கதிர்வீச்சு இதற்கு காரணம் எனவும், அதன் துல்லியத்தன்மையும் பின்னர் கண்டறியப்பட்டது.
2001ஆம் ஆண்டு வில்கின்சன் மைக்ரோவேவ் புரோப் விண்வெளியில் ஏவப்பட்டது. இதன்மூலம் பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள் என கணிக்கப்பட்டது.
பிபிசி
கருத்துகள்
கருத்துரையிடுக