எத்தனை ஜூல் ஆற்றல் மனிதனைக் கொல்லும்? - பதில் சொல்லுங்க ப்ரோ?
எத்தனை ஜூல் ஆற்றல் மனிதனைக் கொல்லும்?
ஒரு ஜூல் என்பது ஆற்றலின் ஒரு யூனிட் அளவு. இங்கிலாந்தைச் சேர்ந்த பிரஸ்காட் ஜூல் என்பவர் இதனை கண்டுபிடித்தார். நீரை வெப்பப்படுத்த தேவையான ஆற்றல் அளவை ஜூல் என கணக்கிடுகிறார்கள். ஒரு கிராம் நீரை ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு கொண்டு செல்லும் ஆற்றல் அளவு ஒரு ஜூல் எனலாம். மின்சார அளவில் ஒரு நொடியில் செலவாகும் ஒருவாட். ஆப்பிளை ஒரு மீட்டருக்கு உயர்த்தும் அளவு ஆற்றல், என குறிப்பிடலாம். பத்து ஜூல் அளவு ஆற்றல் ஒருமனிதரைக் கொல்ல போதுமானது என்று கூறுகிறார்கள்.
விமானநிலையம், பள்ளிகளில் இதயம் திடீரென நின்றுபோனால் அதனை துடிக்க வைக்க ஏஇடி எனும் கருவியைப் பயன்படுத்துவார்கள். இதில் 360 முதல் 400 ஜூல் மின்சாரம் உருவாகிறது. இவை முதலில் பயன்படுத்தியபோது நிறைய நோயாளிகளுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் இதன் அளவு 120 ஜூல்களாக குறைக்கப்பட்டது.
image -pxhere
கருத்துகள்
கருத்துரையிடுக