மத்திய அரசு மாநில அரசுகளுக்கான நிதியை உடனே அளிக்க வேண்டும்! - பிரனாப் சென், பொருளாதார நிலைக்குழு புள்ளியலாளர்
நேர்காணல்
பிரனாப் சென்
பொருளாதார புள்ளிவிவர நிலைக்குழு தலைவர்.
அரசு மூன்றாவது முறையாக நிதி ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது? இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
இந்திய பொருளாதாரம் ஏற்கெனவே கடுமையான பாதிப்பில் உள்ளது. கடந்தாண்டு மட்டும் 18 முதல் 20 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது. வரி வருவாயில் 8 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது என தோராயமாக மதிப்பிடலாம். பிற இழப்பு தொழில்துறை, நிறுவனங்கள் சார்ந்த இழப்பாக கூறலாம். இயல்பு நிலைக்கு திரும்ப இழந்த இழப்புகளை சரி செய்யவேண்டியது அவசியம். தற்போது மெல்ல நிலை மீண்டு வருகிறது கடந்த மூன்று மாதங்களாக சில்லறை விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது. காரணம், மக்கள் கடந்த சில மாதங்களாக எதையும் செலவு செய்ய அனுமதிக்கப்படவில்லை. திருவிழாக்கள் நடைபெறும் காலம் வேறு. எனவே மெல்ல நிலை மாறி வருகிறது. ஆனால் இதன் பொருள் நாம் முன்னர் இழந்த அத்ததனையும் திரும்ப பெற்றுவிடமுடியும் என்று உறுதியாக கூறமுடியாது என்பதுதான். இரண்டாவது மூன்றாவது காலாண்டில் விற்பனை சரிந்தாலும் கூட அடுத்த காலாண்டில் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இப்பொது மக்கள் அவசியமானவற்றுக்கு தவிர வேறெதற்கும் செலவு செய்யவில்லை. எனவே விற்பனை சரிந்துவருகிறது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக காணப்படுகிறது.
மக்கள் பொருட்களை வாங்க செலவு செய்யாதபோது, விற்பனை தேக்கமாகும். நிறுவனங்கள் மூடப்படும். ஆர்பிஐ, மத்திய அரசு என்ன செய்யவேண்டுமோ அதனை செய்துவிட்டார்கள். தேவை தொடர்ச்சியாக குறைந்துகொண்டிருந்தால் அடுத்த ஆண்டு பொருளாதாரம் மிகவும் கீழே சென்றுவிடும்.
தேவையும் நுகர்வும் குறைந்தால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்கிறீர்கள். அப்போது அடுத்த இதேநிலைதான் இருக்குமா?
அப்படித்தான் மோசமாக இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. நாம் இப்போது கவனிக்க வேண்டியது. மூன்றாவது, நான்காவது காலாண்டு முடிவுகள் எப்படி இருக்கு்ம என்பதைத்தான். பட்ஜெட்டில் அரசு என்ன அறிவிக்கப்போகிறது என்பதும் இதில் முக்கியமானது. நடப்பு ஆண்டில் அரசு விதிமுறைகளை மீறித்தான் ஆகவேண்டும் அதற்கு வேறெந்த வாய்ப்புகளும் இல்லை. அரசு செய்யும் முடிவுகளை நல்ல நோக்கம் என்று மட்டும் இனி கூறி தப்பிவிடமுடியாது. மத்திய அரசின் வழிகளிலேயே மாநில அரசும் பணமதிப்புக்கொள்கையின் பின்னால் நிற்பது பல்வேறு விளைவுகளை தொழில்துறையில் ஏற்படுத்தும்.
பட்ஜெட் அடுத்த ஆண்டில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறுகிறீர்கள். அரசு என்னென்ன விஷயத்திற்கு செலவு செயவேண்டும் என நினைக்கிறீர்கள்?
சுயசார்பு பாரதம் திட்டத்திற்கு அரசு முன்னமே நிதி ஒதுக்கி செயல்பாடுகளை தொடங்கிவிட்டது. அது அடிப்படை கட்டமைப்புக்களுக்கான நிதியை கூடுதலாக்குவது முக்கியம். காந்தி கிராம வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மேலும் 10 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கவேண்டும். இதில் மாநில அரசுகள் வேகமாக செயலாற்ற வேண்டும். மத்திய அரசுக்கு செயல்வேகம் கொண்ட கட்டமைப்புகள் இல்லை. மாநில அரசுகள் மத்திய அரசின் நிதியைக் கொண்டு திட்டங்களை மேம்படுத்தவேண்டும். காந்தி வேலைவாய்ப்புத்திட்டம் அல்லது ரோஜ்கர் பிராட்சகான் யோஜனா ஆகிய திட்டங்களுக்கான நிதி முதலீடு மாநில அரசுகளை மலைக்க வைக்கும். இதன் காரணமாக மாநில அரசுகள் செலவழிக்க தயங்கினால், திட்டங்கள் நின்றுவிடும். எனவே மத்திய அரசு திட்டங்களுக்கு செலவழிக்க வேண்டிய நிதியை மாநில அரசுகளுக்கு வழங்குவது அவசியம்.
மீண்டும் கோவிட் -19 பரவல் அதிகரிக்கிறது மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படலாம் என நினைக்கிறீர்களா?
அதனை மக்களின் பயம், அரசுக்கு உள்ள அழுத்தம் ஆகியவைதான் தீர்மானிக்கும். எனக்கு தெரிந்து தேசிய அளவிலான பொதுமுடக்கம் மீண்டும் வராது என்று நினைக்கிறேன். சில நகரங்களில் மட்டும்தான் பரவல் அதிகரிக்கிறது. அனைத்து இடங்களிலும் அல்ல. சிறு நகரங்களில் அதிகளவு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டால், பாதிப்பு கடுமையாக இருக்கும். விநியோகம் தொடர்பான விஷ்யங்கள் அனைத்தும் முடங்கிவிடும்.
indian express
கருத்துகள்
கருத்துரையிடுக