இடுகைகள்

போஷான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசித்த வயிற்றின் மீது எதற்கு கோபம்? - உணவு அரசியலால் தவிக்கும் குழந்தைகள்

படம்
  உணவை மக்களுக்கு விநியோகிப்பவர்கள் அதன் மீதான ஆதிக்கத்தை செலுத்துகின்றனர். எந்த உணவை மக்கள் சாப்பிடவேண்டுமென அறிவியல் பூர்வமான ஆய்வுகளை புறக்கணித்து தங்கள் மனதில் உள்ள நம்பிக்கையை புகுத்த தொடங்கிவிடுகின்றனர். இலவசமாக கொடுக்கும் உணவுகள் பெரும்பாலும் சைவமாகவே இருப்பது தற்செயலானது அல்ல.  கடந்த ஆண்டு, கர்நாடகத்தில் எம்என்எம் மகளிர் பள்ளியில் மதிய உணவுத்திட்டத்தில் இருந்து முட்டை திடீரென நீக்கப்பட்டது. இதற்கு உள்ளூரைச்சேர்ந்த அரசியல்வாதிகளே காரணம் என மாணவிகள் அறிந்தனர். கர்நாடகத்தில் கொப்பல் மாவட்டத்தில் அமைந்துள்ள அப்பள்ளியின் சுற்றுவட்டாரத்தில் ஊட்டச்சத்து சார்ந்த பிரச்னை நீங்காமல் இருக்கிறது. இந்த நிலையில் மதிய உணவுத்திட்டத்தில் இருந்து முட்டையை நீக்கினால் எப்படி? இதை அங்குள்ள மாணவி அஞ்சலி தீவிரமாக எதிரொலித்தார்.  தற்போது மத்திய அரசின் மதிய உணவுத்திட்டத்திற்கு பிஎம் போஷான் என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதை பெருமைப்படுத்தும் விதமாக இதுவரை உணவில் இருந்த முட்டையை நீக்கிவிட்டனர். இப்போது மதிய உணவில் சமைத்த காய்கறிகள் சேர்த்த உணவு மட்டுமே வழங்கப்படுகிறது.  நாங்கள் என்ன சாப்பிடவேண்டும் என