இடுகைகள்

இணையம் - சமூகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விஸ்வரூபமெடுக்கும் போலிச்செய்தி பூதம்! - அலசல் ரிப்போர்ட்

படம்
போலிச்செய்திகள் - விஸ்வரூப வில்லன் ! - ச . அன்பரசு மகாபாரத கதையில் துரோணரை வீழ்த்த தர்மர் , தன் வாழ்நாளில் முதல்முதலாக பொய் சொல்ல ஒப்புக்கொள்வார் . ஆம் ! அஸ்வத்தாமன் என்ற யானை இறந்தது என்று சொல்லாமல் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என கூறி , தந்திரமாக துரோணரை வீழ்த்துவார்கள் . இன்று ட்விட்டர் வழியே போலிச்செய்திகள் இப்படித்தான் காட்டுத்தீயாக பரவி உலகெங்கும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகின்றன . அண்மையில் முன்னாள் நிதியமைச்சர் ப . சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் ஊடக நிறுவனத்தின் வழக்கில் சிக்கிக் கொள்ள அவ்வழக்கு விசாரணைக்கு வந்தது .  அப்போது ட்விட்டரில் " கார்த்தி மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதி ப . சியின் ஜூனியர் வக்கீலாமே ?" என்ற தொனியில் கேள்வி கேட்டிருந்தார் துக்ளக் ஆசிரியர் எஸ் . குருமூர்த்தி . பொய்யான இத்தகவலை பின்னர் இவர் அழித்துவிட்டாலும் அதற்குள்ளாகவே இந்த ட்வீட் இரண்டு லட்சம் பேர்களுக்கு மேல் சென்றடைந்து நீதிபதி மீதான சந்தேகத்தை தூண்டும் விவாதம் உருவாகிவிட்டது .  உண்மையில் குருமூர்த்தியின் நோக்கம் ஜெயித்துவிட்டது . அடுத்து கல்வி