இடுகைகள்

பாரிஸ்டர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தியின் அடிப்படை சிந்தனைகளை உருவாக்கிய நகரம்!

படம்
  காந்தி படிக்கச்சென்ற இங்கிலாந்தின் லண்டன் நகரம் . அந்த நகரம்தான் ஆங்கில தேசத்தின் சட்டங்களோடு அவரின் மனவலிமையையும் திடமாக உருவாக்கிய இடம் . இங்கு அவர் படித்த மத ரீதியான நன்னெறி நூல்களும் , சந்தித்த நூல்களும் காந்தி என்ற அடையாளத்தை வலிமையாக்கின . அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம் . வைஷ்ணவ குலத்தில் பிறந்த காந்தி இந்து , சமணம் ஆகிய மதத்தினரின் பல்வேறு சடங்குகளை அறிந்துகொள்ள அவரது அம்மாவே காரணம் . லண்டன் நகரில் வழக்குரைஞர் படிப்பிற்காக தங்கியிருந்த காலகட்டம் அவரை சிந்தனையாளராக மாற்றியது . வாழ்க்கை முழுமைக்குமான லட்சியவாத கருத்துகளை அவர் லண்டனில்தான் பெற்றார் . 1888-1891 ஆண்டில் லண்டனில் சட்டம் படிக்க வழக்குரைஞராக காந்தி சென்றார் . பிறகு , 1906-1931 காலகட்டத்தில் , அரசியல் காரணங்களுக்காகவும் பணிக்காகவும் நான்கு முறை காந்தி பயணித்தார் . இந்தியா காலனி தேசமாக இருந்தது . இ்ங்கிலாந்து அதனை ஆண்டு வந்த பேரரசு . இதனால் லண்டன் நகரம் பல்வேறு முக்கியமான தலைவர்கள் வந்து செல்லும் இடமாக புகழ் பெற்றிருந்தது . காந்தி முதல்முறையாக லண்டனுக்கு வந்தபோது தன்னோடு டைரி ஒன்றை வைத்திருந்தார் . அதில் பல்வேறு குறிப்