மக்களின் மனதைப் புரிந்துகொள்ள முயலும் தொழிலதிபர் - ஆனந்த் மகிந்திரா
இந்தியாவில் தற்போது பொதுமக்களோடு அதிகம் உரையாடிக் கொண்டிருக்கும் தலைவர் யாரென நினைக்கிறீர்கள்? அமெரிக்காவில் இதுபோல இயங்கும் சர்ச்சை கிளப்பும் தலைவர் ஒருவருண்டு. அவர் எலன் ம|ஸ்க் என அனைரும் தெரிந்துகொண்டிருப்பீர்கள். இந்தியாவில் எலன் ம|ஸ்கையொத்த பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்துகொண்டிருப்பவர் இவர் ஒருவரே…. அவர்தான் ஆனந்த் மகிந்திரா. இந்தியாவைப் பொறுத்தவரை தொழிலதிபர்கள் யாரும் வெளிப்படையாக தங்கள் கருத்தை எங்கும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். என்ன காரணம்? அரசியல் கட்சிகள் அதை வைத்து அவர்களது தொழிலை நசித்து விடுவார்கள் என்பதுதான் முக்கியமான காரணம். ஆனந்த் மகிந்திரா இந்தவகையில் அரசியல் என்பதைப் பற்றி கவலைப்படாமல் நம்பிக்கையான மனிதர்கள், அவர்களைப் பற்றிய வீடியோ என பகிர்ந்துகொண்டு ட்விட்டரில் இயங்கி வருகிறார். ஆனந்த் நாள்தோறும் ட்விட்டரில் பகிரும் வீடியோக்களைப் பார்க்க பகிரவே நிறைய மனிதர்கள் ட்விட்டரில் அவரைப் பின்தொடர்கிறாரகள். மகிந்திரா நிறுவனம் 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2022ஆம் ஆண்டோடு 77 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 2020ஆம் ஆண...