அதிகாரமும், பணபலமும் கொண்ட இனக்குழுக்களை தூக்கிப்போட்டு மிதிக்கும் தொன்மை தற்காப்புக்கலை ஆன்மாவைக் கொண்ட இளைஞன்!
தி ஆன்சியன்ட் சோவரின் ஆப் எடர்னிட்டி காமிக்ஸ் ஃபெய் குய்ஃபெங் என்பவர் ரிஃபைனர் எனும் மருந்து மாத்திரைகளை தயாரிக்கும் திறமை பெற்றவர். இவரின் ரேங்க் ஒன்பது. இந்த நிலைக்கு ஒருவர் செல்வது கடினம். இப்படி புகழ்பெற்றவராக இருந்தவர், ஒரு பெண்ணின் ஒருதலைக்காதலால் ஏற்பட்ட தகராறில் சிக்குண்டு காணாமல் போகிறார். தற்காப்புக்கலை, மாத்திரைகளை தயாரிப்பது சார்ந்து நிறைய கண்டுபிடிப்புகளை செய்தவர். அவரின் சீடர் யாங் டி அந்தளவு திறமையானவர் அல்ல. குய்ஃபெங்கின் ஆன்மா, திடீரென லீ குடும்ப வாரிசு ஒருவரின் உடலுக்குள் செல்கிறது. அவர்தான் கதையின் நாயகன். இவருக்கு உடலில் தற்காப்புக்கலையைக் கற்க முடியாதபடி பிரச்னைகள் இருக்கின்றன. அதை ஃபெங் குய்ஃபெங்கின் ஆன்மா உணர்ந்து சரி செய்கிறது. நாயகன் லீ படிக்கும் தற்காப்புக்கலை பள்ளியில், குய்ஃபெங்கின் நினைவாக பெரிய சிலை ஒன்றை வைத்திருக்கிறார்கள். இப்போது நாயகன் லீக்கு உள்ள பொறுப்பு, தன்னை வலிமையாக்கிக்கொள்வது மட்டும்தான். அதற்காக அவன் மாத்திரைகளை தயாரிக்கும் சங்கத்திற்கு செல்கிறார். அங்கு ஒருவரைப் பார்க்கிறான். அவன், தரக்குறைவாக பேசுகிறான். அவனிடம் லீ சொல்வ...