இடுகைகள்

தலைவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டைம் 100 - கண்டுபிடிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் அணிவரிசை

படம்
  டைம் 100 கண்டுபிடிப்பாளர்கள் வரிசை காட்டுதீயைக் கட்டுப்படுத்துவோம் கிறிஸ்டினா தாஹ்ல் 45 அமெரிக்காவில் காட்டுத்தீ ஏற்படுவது புதிதல்ல. ஆனால் அதற்கு காரணம் என்ன என்று ஆராய்வதை விட்டுவிடுகின்றனர். தீயை அணைக்கவேண்டும். தீ பற்றாமலிருக்க முயலவேண்டும் என ஊடகங்கள் நாசூக்காக கூறி, தம் விளம்பர வருமானத்தை காப்பாற்றிக்கொள்கின்றன. அரசியல்வாதிகளும் தேர்தல் பிரசாரத்திற்கு பெருநிறுவனங்களை நம்பியுள்ளதால் அவர்களின் செயல்பாட்டை குறைகூறுவதில்லை. ஆனால் முப்பத்தேழு சதவீத காட்டுத்தீ சம்பவங்களுக்கு கரிம எரிபொருட்களைப் பயன்படுத்தும் பெரு நிறுவனங்களும், சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்களும்தான் காரணம் என கிறிஸ்டினா தைரியமாக கூறுகிறார். தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதோடு, காலநிலை மாற்றத்தின் இயல்புகளையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இதன்மூலம் நமது நடவடிக்கைகளை சற்று முன்னதாக திட்டமிட்டுக்கொள்ளலாம். மாசுபாட்டிற்கு கட்டுப்பாடு அனஸ்டாசியா வால்கோவா 32 காலநிலை மாற்றத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதோடு, உணவு உற்பத்தி தடுமாறுகிறது. ரீகுரோ ஏஜி என்ற நிறுவனம், வேளாண்மைத்துறையில் உள்ள பெருநிறுவனங

நம்பிக்கை ஊட்டும் எதிர்கால தொழில்துறை தலைவர்கள் - ஃபோர்ப்ஸ் 500 இதழ்

படம்
  சாரா பாண்ட், எக்ஸ்பாக்ஸ் பிரிவு தலைவர்.  எதிர்கால தலைவர்கள் ஃபோர்ப்ஸ் 500 இதழ்   சாரா பாண்ட் சாரா பாண்ட் Sara bond நிறுவன துணைத்தலைவர் எக்ஸ்பாக்ஸ், மைக்ரோசாஃப்ட்   யேல் பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஹார்வர்ட்டில் எம்பிஏ படிப்பு. மெக்கின்சி நிறுவனத்தில் ஆலோசகர். டி மொபைல் நிறுவனத்தில் திட்ட வல்லுநராக பணியாற்றினார். பிறகு, 2017ஆம் ஆண்டு, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இணைந்தார். இப்போது எக்ஸ்பாக்ஸின் விளையாட்டுகளை, தயாரிப்புகளை வணிகப்படுத்தும் பிரிவில் பணியாற்றி வருகிறார். உலகில் எந்த இடத்தில் என்ன கருவிகளை வைத்திருந்தாலும் எக்ஸ் பாக்ஸ் விளையாட்டுகளை விளையாட முடியும் சூழலை உருவாக்கியது சாராவின் சாதனை. ஜூவோரா, செக் என பட்டியலிடப்பட்ட இரண்டு பொது நிறுவனங்களின் போர்டில் உறுப்பினராக இருக்கிறார். ஊக்கமூட்டும் தலைவராக உயர்ந்து வந்துகொண்டிருக்கிறார் சாரா என நிறுவனத்தை கவனிப்பவர்கள் கூறிவருகிறார்கள். பிராடி ப்ரூவர் பிராடி ப்ரூவர் Brady brewer முதன்மை சந்தை அதிகாரி ஸ்டார்பக்ஸ் ஸ்டார்பக்ஸின் வெற்றிக்கு முக்கியமான காரணம் அதன் டிஜிட்டல் லாயல்டி திட்டம் மற்றும் டிஜிட்டல் பணப்பரிம

ஜெசிந்தா ஆர்டன் சிறந்த தலைவரா?

படம்
  ஜெசிந்தா ஆர்டென் நியூசிலாந்தின் ஜெசிந்தா ஆர்டென் அந்நாட்டின் பிரதமர், அங்கு செயல்படும் தொழிலாளர் கட்சியில் தலைவராகவும் உள்ளார். 2008ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.  2017ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று, நியூசிலாந்தின் பிரதமராக பதவியேற்றார். அப்போது அவரின் வயது 37. இந்த வயதில் அங்கு பிரதமராவது பெரிய விஷயம். இப்படி ஆனது இவர் ஒருவர்தான். இதற்காக நாம் இவரைப் பற்றி இங்கு எழுதவில்லை.  சிறுபான்மையினரை கட்டியணைத்து ஆறுதல் சொல்லும் காட்சி 2019இல் கொரோனா ஏற்பட்டபோது, நியூசிலாந்தில் ஏற்பட்ட பாதிப்பை எளிதில் சமாளித்தார். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் முக்கி முனகிக்கொண்டு இருந்தன. ஆனால் நாம் வித்தியாசமானவர்கள் அல்லவா?  நம்நாட்டில் விளக்கு பூசை, சாப்பாட்டு தட்டை தட்டுவது போன்ற கோமாளித்தனங்கள் நடந்துகொண்டிருந்தன.  ஜெசிந்தா, தனது நாட்டில் நோயைக் குறைக்கும் செயல்பாடுகளை செய்துகொண்டிருந்தார். விரைவிலேயே பாதிப்பைக் குறைத்து கோவிட் இல்லாத  நாடு என்ற பெயரை சம்பாதித்தார். இதனால்தான் அவரை சிறந்த தலைவர் என்று அனைவருமே பேசிக்கொண்டிருந்தனர். மேலும் அவரது நாட்ட

இரண்டாவதாக ஓடி ரேசில் வென்ற ஸ்டீவ் ஜாப்ஸ் - சூப்பர் பிஸினஸ்மேன்

படம்
                சூப்பர் பிஸினஸ்மேன் அமெரிக்காவின் சிலிக்கன் வேலியில் சூப்பர் பிஸினஸ்மேன் என்று யாரையாவது கூற வேண்டுமெனில் யாரைக் கூறலாம் ? பில்கேட்ஸ் அல்ல . பில் ஹியூலெட் , டேவிட் பெக்கார்டு ஆண்டி குரோவ் , கூகுளின் இரட்டையர்களை கூறலாம் . ஆனால் பலருக்கும் மனதில் வரும் ஒரே பதில் ஆப்பிளை மக்களுக்கான எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான மாற்றிய ஸ்டீவ் ஜாப்ஸ்தான் . இப்போது டிம் குக் , நிறுவனத்தின் லகானைப் பிடித்து செலுத்தினாலும் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துவது , அதனை எளிமைப்படுத்துவது ஆகியவற்றில் மாஸ்டர் ஸ்டீவ்தான் . வாடிக்கையாளர் பயன்படுத்தும் ஆப்பிள் பொருட்கள் , எளிதாக இருக்கவேண்டும் . அதன் பயனர் கையேட்டை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட எளிதாக புரிந்துகொள்ளவேண்டும் என மெனக்கெட்டார் . ஆப்பிளின் பொருட்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி விழாவைப் போல நடத்தப்படும் . எப்படி பொருளை மார்க்கெட்டிங் செய்வது என்பதை ஸ்டீவ் தனது அனுபவங்கள் வழியாக கற்றிருந்தார் . அதனால்தான் ஆப்பிள் என்றால் ஸ்டீவ் , ஸ்டீவ் என்றால் ஆப்பிள் என்று இன்றுமே கூறப்படுகிறது . 1955 ஆம் ஆண்டு தனது அம்மாவின்

தொழில்துறையில் முன்னிலை வகிக்கும் தலைமைத்துவ பெண்கள் ! - தலைவி

படம்
        ஆர்த்தி சுப்பிரமணியன்     தலைவி ஆர்த்தி சுப்பிரமணியன் டாடா குழுமம் சீப் டிஜிட்டல் ஆபீசர் டாடா குழும தலைவர் கே . சந்திரசேகரனைக்கும் ஆர்த்திக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன . அவை படிப்பு , வேலை செய்து வந்த நிறுவனம் என சொல்லிக்கொண்டே போகலாம் . தற்போது ஒட்டுமொத்த டாடா குழுமத்தையும் டிஜிட்டல் உலகிற்கு கொண்டு செல்லும் பணியை ஆர்த்தி ஒருங்கிணைத்து செய்து வருகிறார் . டாடா குழுமம் , டாடா டிஜிட்டல் என்ற பெயரில் தனது அனைத்து சேவைகளையும் ஒரே ஒரு சூப்பர் ஆப் மூலம் செய்ய திட்டமிட்டு பணியாற்றி வருகிறது . இதன்மூலம் காய்கறிகள் , மளிகை , நகை , எலக்ட்ரானிக்ஸ் , ஒளிபரப்பு சேவை , அரசு நிறுவனங்களுக்கு பில் கட்டுவது ஆகியவற்றையும் இதிலேயே செய்யமுடியும் . 1989 ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்த ஆர்த்தி , தனது திறமை மூலம் டாடா குழுமத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்த வாய்ப்புள்ளது . அபந்தி சங்கர நாராயணன் டியாஜியோ கொள்கை , மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை தலைவர் பல்வேறு புள்ளிகளில் இணைந்துள்ள வணிகத்திற்கு இணையாக ஏதுமில்லை என்கிறார் அபந்தி . இவர் டியாஜியோ எனும் மதுபான நிறுவ

தலைவராக அதிகரிக்கும் வரவேற்பு! - ஸ்டாலினோடு துணை நிற்கலாமா?

படம்
                      அதிமுகவும் , திமுகவும் ஜெயலலிதா , 2016 ஆம் ஆண்டு மகத்தான தேர்தல் வெற்றியைப் பெற்றார் . இதன்மூலம் 32 ஆண்டுகளாக இருந்த சாதனையை தகர்த்தார் . ஒரே கட்சி இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெறுவது பற்றியதுதான் அது . எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கி தோல்வியை சந்திக்காத முதல்வராக இருந்தார் . அவர் 1987 இல் இறந்துபோனார் . அதற்குப்பிறகுதான் 1989 இல் திமுக வெற்றி பெறமுடிந்தது . 2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது . ஆனாலும் கூட தமிழக முதல் அமைச்சராக வாய்ப்பளிக்கும் 2021 ஆம் ஆண்டு தேர்தல் திமுகவின் தலைவரான ஸ்டாலினுக்கு அக்னி பரிட்சைதான் . கட்சிக்காக கலைஞர் காலத்திலிருந்து களப்பணி ஆற்றிவரும் அவருக்கு முதல்வர் பதவி கிடைப்பது என்பது உழைப்பிற்கான பரிசாக அமையக்கூடும் . தற்போதைய முதல்வரான பழனிசாமியைப் பொறுத்தவரை முதல்வர் பதவி என்பது அதிர்ஷ்டவசமாக கிடைத்தது . ஆனால் கட்சி எம்எல்ஏக்களை கட்டிக்காப்பாற்றியதில் அவரது சாமர்த்தியம் உள்ளது . தவிக்கும் மதவாத சக்திகள் பாஜக கட்சி உள்ளே நுழைய முடியாமல் தவிக்கும் மாநிலங்களில் தமிழ்நா

உங்கள் உரிமைக்காக கல்வி பெறுங்கள்! - மிஸ் மேஜர் கிரேசி!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் மிஸ் மேஜர் கிரிஃபின் கிரேசி அமெரிக்காவில் பிறந்த மனித உரிமைப் போராளி. ஸ்டோன்வால் கலவரம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஆர்வமாக கலந்துகொண்டவர். மாற்றுப்பாலினவருக்கான அங்கீகாரத்திற்காக பல்வேறு பேரணிகளை நடத்தியிருக்கிறார். நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். சிகாகோவின் தெற்குப்பகுதியில் 1940 ஆம் ஆண்டு பிறந்தார். பிறப்பால் ஆணாக இருந்தவர், இளம் வயதிலேயே தன்னை பெண்ணாக உணரத்தொடங்கினார். 1950களில் அவரின் பாலினத்தை அறிவிப்பதை நினைத்துப் பாருங்கள். அமெரிக்காவில் தன் கருத்துகளை வெளியிட்டு கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தார். மேலும் பல சம்பவங்களில் மாற்றுக்கருத்து கொண்டவர்களால் தாக்கவும் பட்டிருக்கிறார். தன் உடலை பெண்ணாக மாற்ற ஹார்மோன் மருந்துகள் தேவை என்பதை உணர்ந்தார். அதற்கு காசு சேர்க்க, விபசாரத்தை நாடினார். திருட்டுகளில் ஈடுபட்டார். பிற சட்டவிரோத செயல்களையும் செய்தார். ஏனெனில் வாழ அப்போது வேறுவழி இருக்கவில்லை.  நாம் நம்மைப் பற்றிய விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டிருக்க வேண்டாம். நமக்கென இருக்கும் இடத்திற்கு செல்லலாம் என்று தன் மனதில் தோன்றிய கர