தொழில்துறையில் முன்னிலை வகிக்கும் தலைமைத்துவ பெண்கள் ! - தலைவி
ஆர்த்தி சுப்பிரமணியன் |
தலைவி
ஆர்த்தி சுப்பிரமணியன்
டாடா குழுமம்
சீப் டிஜிட்டல் ஆபீசர்
டாடா குழும தலைவர் கே.சந்திரசேகரனைக்கும் ஆர்த்திக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவை படிப்பு, வேலை செய்து வந்த நிறுவனம் என சொல்லிக்கொண்டே போகலாம். தற்போது ஒட்டுமொத்த டாடா குழுமத்தையும் டிஜிட்டல் உலகிற்கு கொண்டு செல்லும் பணியை ஆர்த்தி ஒருங்கிணைத்து செய்து வருகிறார்.
டாடா குழுமம், டாடா டிஜிட்டல் என்ற பெயரில் தனது அனைத்து சேவைகளையும் ஒரே ஒரு சூப்பர் ஆப் மூலம் செய்ய திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. இதன்மூலம் காய்கறிகள், மளிகை, நகை, எலக்ட்ரானிக்ஸ், ஒளிபரப்பு சேவை, அரசு நிறுவனங்களுக்கு பில் கட்டுவது ஆகியவற்றையும் இதிலேயே செய்யமுடியும். 1989ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்த ஆர்த்தி, தனது திறமை மூலம் டாடா குழுமத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்த வாய்ப்புள்ளது.
அபந்தி சங்கர நாராயணன்
டியாஜியோ கொள்கை, மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை தலைவர்
பல்வேறு புள்ளிகளில் இணைந்துள்ள வணிகத்திற்கு இணையாக ஏதுமில்லை என்கிறார் அபந்தி. இவர் டியாஜியோ எனும் மதுபான நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கொரானோ காலத்திலும் வீட்டுக்கு மதுபானங்களை கொண்டு சென்று கொடுக்கும் அனுமதி பெற்றதில் வருமான வளர்ச்சி பெற்றுள்ளார். சில மாநிலங்கள் இதற்கு தடை விதித்துள்ளன.
உலக மதுபான அமைப்பின் துணைத்தலைவராக அபந்தி தேர்வாகியுள்ளார். ஆறு மாநிலங்களில் மதுபானங்களை வீட்டுக்கு கொண்டு வரும் சட்டம் அமலாகியுள்ளது. கொரானோ பொதுமுடக்கம் காரணமாக, மதுபானத் தயாரிப்போடு கைகளை சுத்தம் செய்வதற்கான சானிடைசர்களை தயாரித்து அரசுக்கு இலவசமாக வழங்கியுள்ளது டியாஜியோ நிறுவனம்்.
அனுராதா ரஷ்தான்
கூடுதல் இயக்குநர், மனிதவளத்துறை, இந்துஸ்தான் யுனிலீவர்
கொரானோ பொதுமுடக்கத்தில் கற்றுக்கொண்ட பாடத்தை அனுராதா இன்னும் மறக்கவில்லை. நம்மைப்போலவே நம்மைச் சுற்றியுள்ளவர்கள் திறனுடன் இருப்பார்கள் என்று நினைக்க கூடாது என்பதை தெரிந்துகொண்டேன்.. பிறரின் பிரச்னைகளையும் புரிந்துகொள்ளும் மனப்பக்குவது ஏற்பட்டுள்ளது என்றார்.
1999இல் லீவரில் நிர்வாக பயிற்சியாளராக சேர்ந்து தற்போது நிறுவனத்தின் மனிதவளத்துறையில் கூடுதல் இயக்குநராக உயர்ந்துள்ளார். ஹார்லிக்ஸ் நிறுவனத்தை 31,400 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது இவரது முயற்சியால் சாத்தியமானது. இதன்மூலம் கிளாஸ்மோஸ்மித்கிளைன் கன்ஸ்யூமர் என்று நிறுவனத்தின் 4 ஆயிரம் ஊழியர்களை லீவரில் இணைத்துள்ளார்.
பல்வேறு புதிய திட்டங்களின் மூலம் நிறுவனத்தில் 400 பெண் ஊழியர்களை உருவாக்கியுள்ளார். தனது திட்டங்கள் மூலம் நிறு்வனத்திற்கு பெருமையும் ஊழியர்களுக்கு ஊக்கமும் கிடைக்கும்படி செயலாற்றியுள்ளது முக்கியமானது.
அபர்ணா புரோகித்
தலைவர்,
அமேசான் இந்தியா,
இந்தியா ஒரிஜினல்ஸ்
அபர்ணா ஒருமுறை விமானநிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவரைக் கவனித்த பெண்மணி ஒருவர், அமேசானின் புதிய நிகழ்ச்சி போஸ்டர்களைப் பார்த்தார். பார்த்துவிட்டு அதைப்பற்றி விவாதித்துள்ளார். இதுபோல நிறைய முறை நடந்துள்ளது. நிகழ்ச்சிகளைப் பற்றியும் குறிப்பிட்ட நிகழ்ச்சியின் முக்கிய பாத்திரம் பற்றியும் மக்கள் அறிந்துகொள்ள நினைக்கிறார்கள் என்றார் அபர்ணா.
பாதாள்லோக், மேட் இன் ஹெவன், காமிக்ஸ்தான் என பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் அமேசான் கவனம் ஈர்த்து வருகிறது. பெரும்பாலும் நாங்கள் உள்ளூர் சார்ந்த நிகழ்ச்சிகளை தயாரிக்கவே முயன்று வருகிறோம். இதனை எளிதாக உலகளவில் மார்க்கெட்டிங் செய்து மக்களை பார்க்க வைக்க முடியும். இப்போது தமிழிலும் தெலுங்கிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறோம். என்றார் அபர்ணா புரோகித்.
அமேசான் பிரைம் இந்தியா, தற்போது இருநூறு நாடுகளில் தனது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.
டெய்சி சிட்டிலாபில்லி
நிர்வாக தலைவர், சிஸ்கோ இந்தியா, சார்க்
நான் கலந்துரையாடல்கள் பெரும்பாலும் உண்மையான புள்ளிவிவரங்களை நான் பேசும் தரப்பில் முழுமையாக முன்வைப்பேன். வேறு ஏதும் செய்வதில்லை என்றார். டெய்ஸி. இவர் சிஸ்கோ அமைப்பில் நிர்வாகத்தலைவராக பொறுப்பேற்ற பிறகு, நிறுவனத்திற்கு 20 சதவீத வருமானத்தை தேடித் தந்துள்ளார். பல்வேறு மாநிலங்களிலுள்ள அரசு சேவைகளை டிஜிட்டல்மயமாக்கியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக