இந்தியா தனது நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைகளை உணரவேண்டும்! - வெரோனிகா ஸ்காட்

 

 

 

 

 

Veronica Scotti - Women's World Banking

 


வெரோனிகா ஸ்காட்

ஸ்விஸ் ரே குழுமம்


ஸ்விஸ் ரே குழுமம், உலக நாடுகளில் காப்பீடு சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.


இந்தியா பல்வேறு பேரிடர்களை இப்போது சந்தித்து வருகிறது. எப்படி காப்பீட்டுத்துறை இதற்கு உதவி செய்யும்?


நடக்கும் பேரிடர்களில் இந்தியா மட்டும் பாதிக்கப்படவில்லை. உலகம் முழுக்கவே இதன் பாதிப்புகள் உள்ளன. பல நாடுகள் இதனை எதிர்பார்க்கவில்லை என்பது உண்மைதான். முதலில் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை நாம் உணரவேண்டும். பாதிப்பை பல்வேறு கலாசாரங்களும் ஏற்றுக்கொள்வது கடினமாகவே இருக்கும். கிடைக்கும் செய்தியும் கூட நேர்மறையாக இருக்காது. எனவே அதனைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப அரசும் தனியாரும் இயங்குவதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும்.


தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு , நாடு முழுக்க பேரிடர் பணிகளை செய்கிறது. இதில் மாநில, மாவட்ட, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முக்கியமான பங்கு உள்ளது. நிதி அமைச்சகம், உள்ளூர் அளவில் நிதியை வழங்கவேண்டும் என்று கூறியது முக்கியமானது. உலகில் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலும் கூட இதேபோன்ற அமைப்புமுறைகள்தான் செயல்பாட்டில் உள்ளன.


அரசு அமைப்புகள் எப்படி செயல்பட வேண்டும் என நினைக்கிறீர்கள்?


அரசு அமைப்புகள் அனைத்து மட்டங்களிலும் ஒத்திசைவாக செயல்படவேண்டும். அப்போதுதான் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேரும். பொருளாதார வளர்ச்சியும் அரசு நினைத்தபடி அமைய இதுவே வாய்ப்பாக அமையும். 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிச்செல்லும் இந்தியா போன்ற நாட்டுக்கு பேரிடர் சார்ந்த பாதுகாப்பு அவசியம். இந்தியாவில் நிலப்பரப்பு ரீதியான பாதிப்பு அதிகம் நேரும் வாய்ப்பு உள்ளது. இந்த பாதிப்பு ஏற்படும்.


வல்லரசு, வளரும் நாடுகள் என இரண்டு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பற்றி கூறுங்கள். இரண்டுக்கும் என்ன வேறுபாடு?


நான் இதற்கான பதிலைக் கூறினால் ஆச்சரியப்படுவீர்கள். வளர்ந்த மேம்பட்ட பொருளாதாரம் கொண்ட நாடுகளில் கூட பேரிடர் மேலாண்மை என்பது மிகவும் பின்தங்கிய வளர்ச்சியடையாததாகவே உள்ளது. மெக்சிகோ நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் பேரிடர் மேலாண்மையை இன்னும் உள்ளூர் அளவில் எடுத்துக்கொள்ளவில்லை. இதற்காக ஒதுக்கும் நிதி கூட உள்நாட்டு உற்பத்தி அளவில் சிறியதுதான். அரசியலமைப்பில் இதற்கான வசதியை செய்துவைத்துள்ளனர். அங்கு பேரிடர்கள் நடக்கும்போதெல்லாம் உள்நாட்டு உற்பத்தி கொஞ்சம் சரியும், இந்த வகையில் ஓஇசிடி நாடுகளில் இப்படி ஏற்படும் பொருளாதார பாதிப்பு 13 சதவீதமாகும்.


இந்த வகையில் ஆசிய நாடுகளுக்கு 2050இல் 33 சதவீத பொருளாதார இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாம் முதலிலேயே நாட்டின் நிலையை உணர்ந்தால் இதுபோன்ற பொருளாதார அதிர்ச்சி ஏற்படாது. அதனை தவிர்த்து விட முடியும்.


உங்கள் நிறுவனத்திற்கு இதில் என்ன வாய்ப்புகள் உள்ளன'?


இந்தியாவில் பாதுகாப்பு தொடர்பான சந்தை இடைவெளி 83 சதவீதமாக உள்ளது. இதில் பலரும் தனிநபர் வருமானம் சார்ந்தும் இதனை கவனிக்கவில்லை. இந்த வகையில் 72 சதவீதம் என எங்களது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசு இந்த வகையில் சமூக திட்டங்கள் சார்ந்து மக்களை காப்பாற்றும் விதமாக கொள்கைகளை வகுப்பது முக்கியம். இந்தியாவைப் பொறுத்தவரை சம்பாதிப்பவர் இறந்துபோனால் குடும்பம் கடுமையான பொருளாதார பாதிப்பை சந்திக்கும்படிதான் சூழல் உள்ளது. இதனை எங்கள் திட்டம் மாற்றும்.


timesofindia

கருத்துகள்