இடுகைகள்

மெல்வின் லெர்னர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கி தப்பிக்கும் சமூக மனநிலை - மெல்வின் லெர்னர்

படம்
  மனிதர்கள் தங்களுடைய பாதுகாப்பை அதிகம் விரும்புபவர்கள். அவர்களுடைய சொகுசு குறையாமல் இருக்கவேண்டுமென நினைப்பவர்கள். இதன் எதிரொலியாக, அவர்கள் எதை நம்புகிறார்கள். எதை மறுக்கிறார்கள் என்று பார்த்தாலே விஷயம் புரிந்துவிடும். ஒருவருக்கு தனது வாழ்க்கை மீது கட்டுப்பாடு இருந்தாலே, மனதில் நிம்மதியை உணர்வார். கெட்டவர்களுக்குச் செய்த தவறான செயல்களின் அடிப்படையில், தண்டனை கிடைக்கும். நல்லவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் என பலரும் நம்புகிறார்கள். இப்படி நடக்கிறதோ இல்லையோ நம்புவதன் மூலம் தன்னைச் சுற்றி நடைபெறும் செயல்பாடுகளின் மேல் கட்டுப்பாடு உள்ளதாக ஒருவர் நம்புகிறார்.  இதை 'ஜஸ்ட் வேர்ல்ட்' எனும் கருத்தாக உளவியலாளர் மெல்வின் லெர்னர் வரையறுக்கிறார். மக்கள், தங்கள் வாழ்க்கையை கட்டுப்பாட்டுடன் வாழ்வதாக நினைத்து, மக்களுக்கு அவர்களின் தகுதியைப் பொறுத்தே அனைத்தும் கிடைக்கும் எனும் இடத்திற்கு வந்து சேர்கிறார்கள். மெல்வின், மக்கள் இப்படி தவறான நம்பிக்கையை உறுதியாக நம்புவதால், உண்மையான தகவல்களை புறக்கணிக்கிறார்கள் என்று கூறினார். ஒருவர் தனது சுயநலனுக்காக உண்மையை புறக்கணிப்பது என்று கூறலாம்.  ஒருவர