இடுகைகள்

முகவாதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முகத்தில் ஏற்படும் வாதம், டைபாய்டை பரப்பிய சமையல்கார பெண்மணி - மிஸ்டர் ரோனி

படம்
        அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி டைபாய்ட் மேரி என்று அழைக்கப்படுபவர் யார்? அமெரிக்காவில் வாழ்ந்த சமையல்காரர் மேரி மலோன், டைபாய்ட் மேரி என அழைக்கப்பட்டார். இவர் உடலில் டைபாய்ட் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருந்தன. அந்த நோயால் அவர் பெரியளவு பாதிக்கப்படவில்லை. ஆனால், அவர் சமையல் செய்த இடங்களில் நிறையப்பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 51பேர் டைபாய்ட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் மூன்றுபேர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்கள். எனவே, அரசு மேரியை 1907-1910, 1914-1938 ஆண்டுகளில் நார்த் பிரதர் தீவில் அடைத்து வைத்திருந்தது. நியூயார்க் சுகாதாரத்துறை, இனி சமையல் பணிகளில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து விடுதலை செய்தது. ஆனால், மேரிக்கு சமையல் வேலை மட்டுமே தெரியும் என்பதால் அதே வேலையை பிடிவாதமாக செய்தார். அவர் உடலில் இருந்த நுண்ணுயிரிகள் பலருக்கும் பரவி டைபாய்ட் நோயாளிகள் அதிகமானார்கள். எனவே, அரசு சுகாதாரத்துறை மேரியை பிடித்து நார்த் பிரதர் தீவில் அவர் வாதம் வந்து சாகும்வரை 1938ஆம் ஆண்டு வரை சிறையில் அடைத்து வைத்தது. குடல்புண் உருவாக காரணம் என்ன? மன...