இடுகைகள்

யுவபரிவர்த்தன்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செகண்ட் சான்ஸ் கொடுக்கும் யுவ பரிவர்த்தன் அமைப்பு!

படம்
இளைஞர்களுக்கு கைகொடுக்கும் மும்பை தம்பதி! பக்கோடா தயாரித்து விற்பதும் தொழில்தான் என பிரதமர் கருத்து தெரிவிக்கும் விதமாக இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தை தவித்து வருவது உண்மை. "தொழில்நுட்பத் திறன்களை கற்றுள்ள இளைஞர்கள் வேலைக்கும் பொருளாதாரத்திற்கும் பயந்து தவிக்கும் அவசியமேயில்லை" என்று அழுத்தமாக சொல்கின்றனர் மும்பையைச் சேர்ந்த கிஷோர்-மிரினாளினி தம்பதியினர். டெல்லியைச் சேர்ந்த மகாவீர் போஜரியா, பத்தாவது தேர்வில் தோற்றுப்போனார். ஊர், உறவுகள், வீடு என தோல்விக்காக திட்ட மனமுடைந்த மகாவீர், மூன்று ஆண்டுகளாக வீட்டில் முடங்கிப்போனார். பின்னர், யுவ பரிவர்த்தன் அகாடமியில் எலக்ட்ரீஷியன் பயிற்சிக்கு விண்ணப்பித்தார்." என்மேல் எனக்கு நம்பிக்கை வரக்காரணமே, இங்குள்ள பயிற்சிதான். தொழில்பயிற்சியோடு எனக்குள்ளிருந்த மனத்தடைகளை முதலில் உடைத்தெறிந்து வென்றேன்" என்னும் மகாவீர் தற்போது எலக்ட்ரீஷியனாக துணிச்சலுடன் பணிபுரிந்து வருகிறார். இவர் மட்டுமல்ல; பள்ளி இடைவிட்டு நின்ற கிராமத்து இளைஞர்கள் ஏழு லட்சம் பேர்களுக்கு தொழில்பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தி க