இடுகைகள்

நோவே டு ஸ்டூமர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடும்ப வறுமையைத் தீர்க்க கள்ளநோட்டு அடிக்கும் புற்றுநோய்க்குள்ளான ஏழை அச்சகத் தொழிலாளி!

படம்
  நோ வே ஃபார் ஸ்டூமர் சீன டிராமா 24 எபிசோடுகள் ஐக்யூயி ஆப் இந்த தொடருக்கு எட்டு பாய்ண்டுகள்தான் ரேட்டிங்காக கிடைத்திருந்தது. ஆனால் தொடரின் போஸ்டர் ஈர்ப்பாக தெரிந்தது. மோசமில்லை. மெதுவாக நகரும் சாகச வகை தொடர். பாத்திரங்கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. இது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான படம்தான். ஆனால் கதையின் போக்கில் நாடு, தேசியவாதம், நன்மை, தீமை என்பதெல்லாம் அடிபட்டு போய்விடுகிறது. இறுதியாக தொடர் முடியும்போது நமக்கு எஞ்சுவது, கும்பலாக ஆயுதங்களை வைத்து ஒரு கூட்டம் செய்வது நியாயம், அவர்கள் கூறுவது நீதி. ஆயுதம் இல்லாமல், பிறரை கொல்ல மனமில்லாதவன் பலவீனமாக உள்ளான். அவன் தன்னை மிரட்டும் கொள்ளைக்கார, பேராசைக்கார கூட்டத்திற்கு பயப்படுகிறான். வலி பொறுக்கமுடியாமல் எதிர்த்து அடிக்கும்போது அவனை அதிகார வர்க்கம் கண்டிக்கிறது. ஆனால் முன்னர் அநீதியாக அவன் தண்டிக்கப்படும்போது அமைதியாக இருக்கிறது. ஏன்? அந்த கேள்விதான் தொடரைப் பார்த்து முடிக்கும்போது ஒருவருக்கு தோன்றுகிறது.  எந்த பதிலும் இல்லை.  லிஷான் என்ற நகரம் உள்ளது. அங்கு கள்ளநோட்டு புழக்கத்தில் உள்ளது. அதை யார் அச்சிடுகிறார்கள். புழக்கத்தில் விடுகி