இடுகைகள்

உலகம்- இரான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உரிமைக்கு போராடுவது தேச துரோகமா?

படம்
போராடுவது தேச துரோகம் ! இரானிலுள்ள கட்டாய ஹைஜப் தடையை எதிர்த்து அமைதி போராட்டம் நடத்திய பெண்களை பற்றிய பேசி குற்றத்திற்காக மனித உரிமை வழக்குரைஞர் நஸ்‌ரின் சோட்யூடெ கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் . கைதுக்கான காரணத்தை கூறாமல் நஸ்‌ரின் வீட்டில் அவரை கைது செய்த காவல்துறை , அவர்மீது தேசதுரோக குற்றச்சாட்டை பதிந்துள்ளது . டெஹ்ரான் எவின் சிறையில் 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டவருக்கு அதுகுறித்த தகவலே தெரிவிக்கப்படவில்லை . டிச . 2017 பெண்கள் ஹைஜப் அணிய அவசியமில்லை என்று கட்டாய சட்டத்தை எதிர்த்து நடந்த அமைதிப்போராட்டம் நஸ்‌ரின் மீதான தண்டனைக்கு முக்கிய காரணம் . ஹைஜப்பை கழற்றி எறிந்து நடந்த அப்போராட்டத்தின் தலைவரான நஸ்‌ரின் செயலை புகழ்ந்து பத்திரிகைகள் புரட்சிகர மாற்றம் என எழுத மீது அரசின் பார்வை திரும்பியது . இரான் சட்டம் 638 படி , பொதுஇடங்களில் ஹைஜப் அணியாமல் இருந்தால் இருமாத சிறைதண்டனை அல்லது 50 ஆயிரம் ரியால்வரை அபராதம் விதிக்கலாம் . அரசு போராட்டக்கார பெண்கள் மீது அரசு தொடர்ந்த வழக்கில் பெண்களுக்கான வழக்குரைஞராக தண்டனையிலிருந்து மீட்க நஸ்‌ரின் போராடிவந்தார் .