இடுகைகள்

உக்கிரபுத்தன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தலித் சொல்லை நீக்கிய இந்திய அரசு!

படம்
ஆஃப்கன் காதல்! காதலர்களுக்கு உலகிலுள்ள எந்த தடைகளும் பிரச்னையில்லை. ஆனால் உறவுகள், சொந்தங்கள் ஆட்சேபித்தால் திருமணம் எப்படி சிதறும் என்பதற்கு ஆஃப்கன் காதலே சாட்சி. ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஃபரீதுல் ரஃப்தாய், ஃபேஸ்புக் மூலமாக வலைவீசி உ.பியின் கலிலாபாத் நகரைச் சேர்ந்த பெண்ணுடன் நட்பானார். பின் சாட்டிங்கில் போனை தேய்த்து பேசி காதல் வளர்த்தவர்கள் கல்யாணத்திற்கும் ரெடி. காதல் விவகாரம் தெரிய வந்த இருதரப்பு பெற்றோர்களும் கூட ஓகே சொல்லிவிட்டனர். திருமணவிழா உ.பியிலுள்ள பெண் வீட்டில் தடபுடலாக ஏற்பாடானது. பங்கேற்ற உறவுகள், சொந்தங்கள் திடீரென கல்யாணம் நடக்ககூடாது. நம் பெண்ணை இன்னொரு நாட்டிற்கு அனுப்புவது சரியல்ல என்று குழந்தையாக அடம்பிடித்து போராடி அதையே சாக்காக வைத்து கல்யாணத்தை நிறுத்திவிட்டனர். ஆஃப்கன் மாப்பிள்ளை ரஃப்தாய், நெதர்லாந்திலிருந்து வந்திருந்த அவரது உறவினர்கள் அனைவரும் சமாதானம் பேசினர். ஆனால் பெண்ணின் தந்தை மகளை படிக்கவைக்கப்போகிறேன் என்று கூற ஆஃப்கன் மாப்பிள்ளை விரக்தியுடன் ஊர் திரும்பியுள்ளார். 2 தலித்துன்னு சொல்லாதீங்க! இந்தியாவிலுள்ள செய்தி சேன

சல்லீசு ரேட்டில் குழந்தைகள் விற்பனைக்கு!

படம்
பயணிக்கும் பெண்கள் ! இந்தியாவில் வேலைசெய்யும் பெண்கள் தங்களின் பொருளாதார பலம் கூடியதால் தனியே சுற்றுலாத்தளங்களுக்கு பயணிக்கத் தொடங்கியுள்ளனர் . கடந்தாண்டுகளில் பெண் சுற்றுலா பயணிகளின் சதவிகிதம் 75 சதவிகிதமாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சிக்குரிய தகவல் .   டெல்லி , மும்பை , பெங்களூரு , சென்னை ஆகிய நகரங்களைச் சேர்ந்த பெண்கள் சுற்றுலா செல்லும் ஆர்வத்தில் டாப் இடங்களை பிடித்துள்ளனர் . " கொல்கத்தா , புனே , குவகாத்தி , ஜெய்ப்பூர் , விசாகபட்டினம் உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் சுற்றுலா செல்லும் பெண்கள் அதிகரித்துள்ளனர் " என்கிறார் தனியார் சுற்றுலா முகவர் ஒருவர் . பெண்கள் குழுவாக இணைந்து பயணம் சென்றாலும் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக உள்ளனர் . வெளிநாடுகளில் லண்டன் , சிங்கப்பூர் , துபாய் , மலேசியா ஆகிய நாடுகள் பெண்களை பெருமளவு ஈர்த்துள்ளன . இவ்வாண்டில் 22 சதவிகித பெண்கள் தனியே சுற்றுலா சென்று வந்துள்ளனர் . 2 ரூ.45 லட்சத்துக்கு குழந்தைகள் சேல்ஸ் !  குஜராத்தைச் சேர்ந்த குழந்தை கடத்தல் தொழிலதிபரை மும்பை போலீஸ் அதிரடியாக கைது செய்துள்ளது . இவர் 300 க்கும் மேற்பட

குப்பைலாரியில் சுதந்திரதின வாழ்த்து!

படம்
அமெரிக்காவின் பிடிவாதம்! அமெரிக்கா உலகெங்கும் தனது அகதிகொள்கைக்காக கண்டனங்களைப் பெற்றாலும் பெற்றோர்களையும், குழந்தைகளையும் பிரிக்கும் பிடிவாதத்தை இன்னும் கைவிடவில்லை. இரண்டாயிரத்து 500 க்கும் அதிகமான குழந்தைகளை சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி   பெற்றோர்களிடமிருந்து பிரித்து தனித்தனி முகாம்களில் தங்கவைத்திருந்தது அமெரிக்காவின் குடியுரிமைத்துறை.   இச்செயல்பாடு, உலகநாடுகளின் தலைவர்களாலும் மக்களாலும் விமர்சிக்கப்பட குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட தொடங்கினர். ஆனாலும் 565 குழந்தைகளை அரசு இன்னும் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கவில்லை என தகவல் கசிந்துள்ளது. பெற்றோர்களால் குழந்தைக்கு ஆபத்து என 180 குழந்தைகளையும், அமெரிக்காவுக்கு வெளியே உள்ளனர் என்று கூறி 366 குழந்தைகளையும் குடியுரிமைத்துறை அலுவலகம் வெளியே விடாமல் வைத்துள்ளது. குழந்தைகளை பெற்றோர்களிடம் விரைவாக சேர்க்க பல்வேறு மனித உரிமை அமைப்புகள் அமெரிக்காவில் பொதுநல வழக்கு தொடர்ந்து போராடி வருகின்றன. அமெரிக்கா வாழ்வதே அகதிகள்தானே!   2 குப்பைலாரியில் இனிப்பு ! மத்தியப்பிரதேசத்தின் ஜோபத் நகரில்

காகித பேட்டரிகள் சாத்தியமா?

படம்
காகித பேட்டரிகள் இனி   சாத்தியம் ! காகிதம் மற்றும் பாலிமர் ஆகியவற்றை கலந்து எளிதில் மட்கும் வகையில் பேட்டரிகளை தயாரிக்க முடியும் என நிரூபித்துள்ளனர் அமெரிக்காவைச் சேர்ந்த பிங்காம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் . " எலக்ட்ரானிக் கழிவுகள் அதிகரித்து வரும் சூழலில் காகித பேட்டரிகள் இப்பிரச்னையை தீர்க்கும் " என்கிறார் பிங்காம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சியோகியுன் சோய் . pyromellitic dianhydride-p-phenylenediamine என்னும் மூலப்பொருள் காகித பேட்டரியை சாத்தியப்படுத்துவதோடு இதனை எளிதில் மட்கவும் வைக்கிறது . குறைந்த எடை , மலிவு விலை , நீரில் கரையும் தன்மை என பிற நுண்ணுயிரிகளைக் கொண்ட பேட்டரியைவிட இது பாதுகாப்பான பேட்டரி . 2 ஆறு வயசு பணக்காரர் ! அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ரியான் , பொம்மைகளை யூட்யூபில் விமர்சனம் செய்து கோடீஸ்வரராகியதோடு தனக்கான பொம்மை பிராண்டையும் உருவாக்கி விற்று சாதனை செய்துள்ளார் . 15 கோடி பார்வையாளர்களைக் கொண்டுள்ள சிறுவன் ரியான் , தனது டாய்ஸ்ரிவ்யூ யூட்யூப் சேனல் மூலம் பெருமளவு பணம் சம்பாதித்து கடந்தாண்

காதலர்களுக்கு சிறுநீர் தண்டனை!

படம்
காஷ்மீரி கஃபே ! ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான  நகரில் , மேவிஷ் என்ற இளம்பெண் , கஃபே ஒன்றை திறந்து பிரபலமாகியுள்ளார் . ஏனெனில் காஷ்மீரில் பெண் ஒருவர் தனி தொழில்நிறுவனத்தை தொடங்கி நடத்துவது இதுவே முதல் முறை . மேவிஷின் தந்தை புற்றுநோயால் திடீரென இறந்துவிட குடும்பத்தைக் காப்பாற்ற மேவிஷ் கஃபேயை தொடங்கி நடத்திவருகிறார் . " கஃபேயை தொடங்கியபோது பல்வேறு விமர்சனங்கள் , சிரமங்கள் ஏற்பட்டன . ஆனால் இதனை தொடர்ச்சியாக நடத்தமுடியும் என்ற நம்பிக்கை குறையவில்லை " எனும் மேவிஷுக்கு உதவியாக அவரின் தாய் மற்றும் சகோதரிகள் உதவிவருகின்றனர் . சட்டபட்டதாரியான மேவிஷ் தன் கனவை நோக்கிச்செல்ல தன் உழைப்பை மட்டுமே நம்புகிறார் . " பெண் , தனக்கு தேவையான விஷயங்களை யாரையும் சாராமல் தானே பெறமுடியும் என்பதை நம்பாதவர்கள் என்னை விமர்சனம் செய்கிறார்கள் . அவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை " என துணிச்சலாக பேசுகிறார் மேவிஷ் . கம்பீர ராசாத்தி ! 2 மக்களை பிரிக்கும் சதி ! அசாமில் அமுல்படுத்தப்பட்டுள்ள மக்கள் தொகை பதிவேடு பிரச்னையால் 40 லட்சம் மக்களின் வாழ்க்கை நிர்க்கத

பெண்களால் புனிதம் கெடுகிறதா?

படம்
விசா பெற சோஷியல் பதிவுகள் முக்கியம் ! அமெரிக்கா , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல விசா அப்ளை செய்தவர்கள் , சோஷியல் தளங்களில் உஷாராக கருத்துக்களை பதிவிட்டால் மட்டுமே அந்நாடுகளை எட்டிப்பார்க்க முடியும் . என்னாச்சு ? அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளிலுள்ள குடியேற்ற அதிகாரிகள் தற்போது விசாவுக்கு விண்ணப்பிப்பவரின் சமூக வலைதளங்களையும் கண்காணித்து தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இல்லை என உறுதிப்படுத்தியபிறகே விசா வழங்குவது என முடிவெடுத்துள்ளனர் . மேலும் உங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் ஸ்மார்ட்போன் , லேப்டாப் ஆகியவற்றையும் திறந்து பார்க்க அவர்களது நாட்டு சட்டப்படி அனுமதி உண்டு . அமெரிக்க குடியேற்றத்துறை இதுவரை சந்தேகவலையில் மாட்டியவர்களின் இருநூறு எலக்ட்ரானிக் பொருட்களை சோதித்துள்ளதை பெர்ரி ஆப்பிள்மேன் அண்ட் லெய்டன் எனும் சட்ட அமைப்பின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது . எனவே வெறுப்பு வாதம் , பிரிவினை என கருத்துகளை பதிவிட்டால் உங்கள் பேரன்களுக்கு கூட அமெரிக்கா செல்லும் பாக்கியம் கிடைக்காது உஷார் ! 2 சூழலுக்கு உதவும் பேப்பர் பேனா ! உத்தரப்பிரதேசத்தில