காகித பேட்டரிகள் சாத்தியமா?
காகித பேட்டரிகள் இனி சாத்தியம்!
காகிதம் மற்றும் பாலிமர் ஆகியவற்றை கலந்து எளிதில் மட்கும்
வகையில் பேட்டரிகளை தயாரிக்க முடியும் என நிரூபித்துள்ளனர் அமெரிக்காவைச் சேர்ந்த பிங்காம்டன்
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
"எலக்ட்ரானிக் கழிவுகள் அதிகரித்து வரும் சூழலில் காகித பேட்டரிகள் இப்பிரச்னையை
தீர்க்கும்" என்கிறார் பிங்காம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சியோகியுன்
சோய். pyromellitic dianhydride-p-phenylenediamine என்னும் மூலப்பொருள் காகித பேட்டரியை சாத்தியப்படுத்துவதோடு
இதனை எளிதில் மட்கவும் வைக்கிறது. குறைந்த எடை, மலிவு விலை, நீரில் கரையும் தன்மை என பிற நுண்ணுயிரிகளைக் கொண்ட பேட்டரியைவிட
இது பாதுகாப்பான பேட்டரி.
2
ஆறு வயசு பணக்காரர்!
அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ரியான், பொம்மைகளை யூட்யூபில் விமர்சனம் செய்து கோடீஸ்வரராகியதோடு தனக்கான பொம்மை பிராண்டையும்
உருவாக்கி விற்று சாதனை செய்துள்ளார்.
15 கோடி பார்வையாளர்களைக் கொண்டுள்ள சிறுவன் ரியான், தனது டாய்ஸ்ரிவ்யூ யூட்யூப் சேனல் மூலம் பெருமளவு பணம் சம்பாதித்து கடந்தாண்டு
யூட்யூபின் அதிகளவு வருமானம் ஈட்டிய பட்டியலில் எட்டாவது இடம் பிடித்துள்ளார். தனது ஆறு யூட்யூப் சேனல்கள் மூலம் குழந்தை விளையாட்டுப்பொருட்களை விமர்சனம் செய்து
அதனுடன் விளையாடி இவர் பதிவிடும் வீடியோக்களை மாதத்திற்கு 1 பில்லியன் மக்கள் உலகெங்கும் கண்டு ரசித்து வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரியான் தன் மூன்றுவயதில் லீகோ
விளையாட்டுப்பொருட்களோடு முதல் வீடியோவை பதிவிட்டார். தற்போது R என்ற பிராண்டில் விளையாட்டுப் பொருட்கள் அமெரிக்க கடைகளிலும், இணையத்திலும் தனது பிராண்டில் பொருட்களை விற்கத் தொடங்கியுள்ளார் ரியான்.
3
நவீன ஷிரவண்குமார்!
புராணக்கதையில் பெற்றோர்களை சுமந்து செல்லும் ஷிரவண்குமார்
கதாபாத்திரத்தை அப்படியே நிஜமாக்கியுள்ளனர் ஹரியானாவைச் சேர்ந்த சகோதரர்கள்.
ஹரியானாவின் பல்வால் பகுதியைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள்
தம் பெற்றோரை ஹரித்துவார் உள்ளிட்ட புனித இடங்களுக்கு யாத்திரையாக தோளில் சுமந்துசெல்லும்
காட்சி பெற்றோர் மேல் இவ்வளவு பாசமா? என அனைவரையும் நெகிழ வைத்துள்ளது."புராணகால ஷிரவண்குமார் பெற்றோர் போல எங்களுடைய பெற்றோருக்கு
பிரச்னை ஏதுமில்லை. பெற்றோர்களை மதிக்காத பிள்ளைகளுக்கு
நாங்கள் எங்கள் செயலையே செய்தியாக்கியுள்ளோம்" என்கிறார் நான்கு சகோதரர்களில் ஒருவரான மகேந்திரன்.