இந்தியாவில் பல் தடயவியல்!
டென்டல் துப்பறிவாளர்!
2012 ஆம் ஆண்டு வல்லுறவு செய்யப்பட்டு
இறந்த மாணவியை ஆய்வு செய்த தடயவியல் மருத்துவர்களில் மரு.ஆஷித் ஆச்சார்யாவும் ஒருவர்.
தசைகளை போல சிதைவடையாத பற்கள் மூலம் வல்லுறவு
நிகழ்வுகளை எளிதில் அடையாளம் காண முடியும்.
ஆண்டுக்கு இந்தியாவில் 26 ஆயிரம்
பல் மருத்துவர்கள் உருவாகின்றனர். அதில் முதுகலை எட்டுபவர்களின் எண்ணிக்க 3 ஆயிரம்.
அதிலும் பாரன்சிக் படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் மிக சொற்பம். பற்களை ஆராய்வதற்கு
அங்கீகாரம் பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை 10 என தடயவியல் சங்கத்தலைவர் சாம்ராஜ்
கூறுகிறார்.
குற்றவாளியைக் கண்டறிய பற்களின்
கடி தடயங்கள், அடையாளம் தெரியாத பிணங்களைப் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றுக்கும் பற்களை
ஆராய்வது அவசியம். இவை பின்னாளில் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும்போது வரும் தகவல்களுடன்
ஒத்துப்போகும் ஆச்சர்யங்களையும் டாக்டர் ஹேமலதா பாண்டே சந்தித்துள்ளதாக கூறுகிறார்.
இவர் இங்கிலாந்தில் தடயவியல் தொடர்பான படிப்பை படித்துவிட்டு தனியார் மருத்துவமனையில்
பணிபுரிந்துவருகிறார். “வெளிநாடுகளில் பற்களை ஆராய்வது பரவலானது என்றாலும் இந்தியாவுக்கு
அது புதியது” எனும் மரு.ஆஷித் பாண்டே இதுதொடர்பான விழிப்புணர்வு பணிகளை செய்துவருகிறார்.