தாய்நாட்டிற்கு ஏதும் நிகரல்ல! - காலெட் ஹூசைனி




Image result for sea prayer






 நேர்காணல்

“சொர்க்கம் கூட தாய்நாட்டிலுள்ள வீட்டிற்கு நிகராகாது”

காலெட் ஹூசைனி, ஆஃப்கன் எழுத்தாளர்.


Image result for sea prayer






பதினொரு வயதிலேயே ஆஃப்கானிஸ்தானை விட்டு பிரிந்துவிட்ட உங்களுக்கு கனவாக இருந்த வீடு, பிரிவு எழுதுவதற்கான தூண்டுதலா?

நான் எழுதியுள்ள நான்கு புத்தகங்களிலும் வீடு, தாய்நிலத்தை பிரிவது என்பதுதான் மையம். தாய்நிலத்தை பிரிவது எனக்கு மட்டுமல்ல மத்திம வயதிலிருந்து என் குடும்பத்திற்கே அதிர்ச்சிதான். வேர்களை இழந்து அமெரிக்காவில் மீண்டும் வாழ்வை தொடங்குவது எளிதானதாக இல்லை.
புதிய நூலான சீ பிரேயரை நாவலாக அல்லானல் நெடுங்கவிதையாக எழுதியது ஏன்?

கடந்தாண்டு அகதிகளுக்கான நன்கொடை விழாவில் சீ பிரேயர் சிந்தனை தோன்றியது. 2015 ஆம் ஆண்டு இறந்த ஆலன் குர்தி என்ற சிரிய சிறுவனே இந்நூலின் கரு. எளியமக்களின் வாழ்வில் போர் திணிக்கப்பட கடத்தல்காரர்களின் அகப்பட்டு குழந்தைகளை பாதுகாக்க போராடும் தந்தைகளின் கதை என்னை நெடுங்கவிதையாக இந்நூலை எழுத தூண்டியது.
சோவியத் ஆக்கிரப்பின்போது ஆஃப்கனிலேயே தங்கியிருந்தால் என்னவாகியிருப்பேன் என யோசித்ததுண்டா?

ராணுவ வீரர் (அ) அகதி ஆகியிருப்பேன். ஆனால் அதிர்ஷ்டத்தால் மறுகுடியமர்வுக்கான ஸ்குவாலிட் முகாம்களில் கூட வசிக்கும் நிலை ஏற்படவில்லை. ஐ.நா அகதிகளுக்கான நல்லெண்ண தூதராக என்னை நியமிக்க கேட்டபோது, அதனை உடனே ஏற்க எனது தாய்நிலத்திற்கு இனி எப்போது செல்லமுடியாது என்பதும் முக்கியமான காரணம்.
உங்களுடைய தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ஆஃப்கானிஸ்தானை புனரமைக்க உதவி வருகிறீர்கள். அங்கு திரும்ப சென்று வாழும் ஆசை இருக்கிறதா?

அண்மையில் லெபனான் நாட்டில் வாழும் சிரிய மனிதரை சந்தித்தபோது, “சொர்க்கம் கூட வீட்டிற்கு இணையாகாது” என நெகிழ்ச்சியுடன் கூறினார். தாய்நாட்டை விட்டு நிர்பந்தத்தால் வெளியேறிய அனைவரின் விருப்பமும், வீடு திரும்புவதுதான். கடவுள் என் முன் வந்தால் அவரை நான் கேட்பது இன்னும் எத்தனை நாட்களுக்கு நான் அகதியாக வாழ்வேன் என்பதுதான்.

ஆஃப்கன் பெண்ணை நேஷனல் ஜியோகிராபிக் இதழுக்கான புகைப்படக்காரர் ஸ்டீவ் மெக்கரி எடுத்த படமும், மத்திய தரைக்கடலில் இறந்த ஆலன் குர்தி படமும் உலகம் முழுக்க பார்க்கப்பட்டது. இது குறித்து தங்கள் கருத்தென்ன?
கதைகள், ஒலிகள் உள்ளிட்டவற்றால் மனிதர்கள் தூண்டப்படும் தன்மை கொண்டவர்கள். எழுத்து வடிவிலான தகவல்கள் ஒருவிதம் என்றால் புகைப்பட செய்தி மிக நேரடியாக இன, மொழி பேதமின்றி ஒருவரின் மனதை சென்றடையும். இதன் காரணமாகவே, அப்புகைப்படங்கள் பிரபலமாயின.

 இத்தாலியின் சிசிலியிலுள்ள கடானியாவில் இத்தாலி பெண்ணின் உணவகத்திற்கு சென்றிருந்தேன். அகதிகள் ஐரோப்பாவை அடையும் வழித்தடங்களிலுள்ள உணவுகள்தான் மெனு. “நாம் அனுமதிக்கும் அளவு நம் குடும்பம் விரிவாகும்” என்பவர் தன் சமையலறையில் அகதிகளை பணியமர்த்தியிருந்தார். எதற்கு அகதிகளுக்கு உதவுகிறீர்கள் என்ற கேள்வி என் முன்வைக்கப்படும் ஒவ்வொருமுறையும் இத்தாலிப்பெண்ணை நினைத்துக்கொண்டே பதில் கூறுகிறேன்.


-வைஷ்னா ராய், தி இந்து ஆங்கிலம்.  
தமிழில்: ச.அன்பரசு 
தொகுப்பு: ரிச்சர்ட் கெய்ன் 


பிரபலமான இடுகைகள்