காமெடி கல்யாணம்!- விநோத வெட்டிங் செய்திகள்!
கல்யாண கலகலப்பு!
அண்மையில் பிரபல ஹாலிவுட் நடிகை
வினோனா ரைடர், “1992 ஆம் ஆண்டு நானும் கீனு ரீவ்சும் டிராகுலா படத்தில் தம்பதிகளாக இணைந்து நடித்தோம்.
அப்போதே அவரை திருமணம் செய்திருக்கலாம்” என பேட்டியளித்திருக்கிறார். அதுபோல ஜாலி கல்யாண
தகராறுகள் இதோ!..
2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் லண்டனைச்
சேர்ந்தவர் குறுஞ்செய்தியை வாட்ஸ்அப் வழியே தவறான எண்ணுக்கு அனுப்பிவிட்டார். தவறுக்கு
சாரி கேட்டு பெண்ணிடம் பழகியவர், அப்பெண்ணுடன் டேட்டிங் சென்று மூன்று மாதத்திற்கு
பிறகு கெட்டிமேளம் கொட்டியிருக்கிறார்.
இவ்வாண்டின் மே மாதம், பிரேசிலில்
வின்ஹெடோவில் கல்யாண ரிசப்ஷன் நடைபெற்றது. பிரமாண்டத்திற்காக கல்யாண ஜோடி, ஹெலிகாப்டரில்
வந்திறங்கியது. லேண்டாகும்போது ஹெலிகாப்டர் நொறுங்கி தீப்பற்றியது. டேக் இட் ஈஸியாக
அதிலிருந்து தப்பித்து ரிசப்ஷனில் பங்கேற்று போஸ் கொடுத்தது புதுமையான கல்யாண ஜோடி.
கடந்த ஜூனில் நியூ மெக்சிகோவின்
சான்டியா மலைத்தொடருக்கு ஜாலி சுற்றுலா வந்தார் இளைஞர். அங்கு காதல் பரவசத்திலிருந்த
ஜோடி, போட்டோ எடுக்க இம்சை கொடுத்தது. இளைஞரும் கேமராவை கிளிக் செய்த எடுத்த போட்டோக்களில்
இளைஞரின் ஹேப்பி பாவனைகள் மட்டுமே இருந்தன.