அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்ட நாஜி!
கடைசி நாஜி!
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்த
நாஜி வீரர் ஜாகிவ் பாலிஜ், அமெரிக்காவிலிருந்து ஜெர்மனிக்கு மக்கள் போராட்டத்தின் மூலம்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பத்தாண்டுகளுக்கு மேலாக நடந்த சட்டப்போராட்டத்தின் விளைவாக
நாஜி வதைமுகாமின் காவலராக பணிபுரிந்த பாலிஜ் தன் 95 வயதில் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.”இவர்தான்
கடைசி நாஜி. நாட்டைவிட்டு வெளியேற்றிவிட்டதால் பிரச்னை முடிந்தது” என உற்சாகமாக பேசுகிறார்
நாடாளுமன்ற உறுப்பினரான டோவ் ஹைகைண்ட்.
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு போலந்து
விவசாயி என்று சொல்லி அமெரிக்காவில் நுழைந்த பாலிஜ், போலந்திலுள்ள ட்ரானிகி வதைமுகாமின்
காவலராக பணியாற்றியவரும் நாஜிக்கட்சியின் எஸ்எஸ் படை உறுப்பினருமாக செயல்பட்டவர் காவல்துறை
பின்னர் கண்டறிந்தது. 1957 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்ட குடியுரிமை 2003 ஆம் ஆண்டு
திரும்ப பெறப்பட்ட அடுத்த ஆண்டு அவரை வெளியேற்ற கோர்ட் உத்தரவிட்டது. பாலிஜ்ஜின் ஆரோக்கியம்
கெட்டதாலும் பிற நாடுகள் அவரை ஏற்க மறுத்ததாலும் அமெரிக்க அவரை வெளியேற்ற முடியாமல்
தவித்தது. நியூயார்க் நகரமே போராட்டம் கையெழுத்து இயக்கம் நடத்த பாலிஜ்ஜை அரசு வெளியேற்றியுள்ளது.