இஸ்ரோவின் துணைநிறுவனமான ஆன்ட்ரிக்ஸின் லட்சியம்!
முத்தாரம் Mini
விண்வெளி சந்தையில் ஆன்ட்ரிக்ஸின் பங்கு என்ன?
உலகளவில் ராக்கெட்டுகளை ஏவும்சந்தை
மதிப்பு 6 பில்லியன் டாலர்கள். இதில் ஆன்ட்ரிக்ஸின் பங்கு 7%. சிறியரக செயற்கைக்கோள்
சந்தையில் எங்களது பங்கு விரைவில் பத்து சதவிகிதமாக உயர்த்து முயற்சித்து வருகிறோம்.
ஜிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஆகிய திட்டங்கள் இதற்கு கைகொடுக்கும்.
ஆன்ட்ரிக்ஸின் எதிர்கால திட்டம்
என்ன?
ராக்கெட்டுகளை குறைவான கட்டணத்தில்
ஏவுவதற்கு உலகெங்கும் பெரும் கிராக்கி நிலவுகிறது. இதனை நிறைவு செய்வதே ஆன்ட்ரிக்ஸின்
திட்டம். இஸ்ரோ தனது பிஎஸ்எல்வி தொழில்நுட்பம் மற்றும் சிறிய ராக்கெட்டுகளை தொழில்துறைக்கு
அளித்துள்ளது.
வணிகரீதியான ஏவுதல்களிலும் ஆன்ட்ரிக்ஸ் பங்கு குறைவாக உள்ளதே?
அடுத்த பத்து ஆண்டுகளில் சிறிய
ராக்கெட்டுகளை ஏவும் சந்தையில் 18 பில்லியன் டாலர்களை பெறுவது எங்களது லட்சியம். எங்களது
வருவாயையும் சந்தையையும் விரிவாக்க முயற்சித்து வருகிறோம்.
-டி.இ.நரசிம்மன், ஆன்ட்ரிக்ஸ்(இஸ்ரோ)