இடுகைகள்

விவசாயம்- தாதாஜி ராம்ஜி கோப்ரகடே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒன்பது அரிசி ரகங்களை உருவாக்கிய தன்னிகரற்ற விவசாயி!

படம்
தாதாஜி எனும் தற்சார்பு விவசாயி ! விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரியும் , தண்ணீர் விடக்கோரியும் பேரணி நடத்தி அரசிடம் கெஞ்சியபடி மனம் வெந்து தற்கொலை செய்து இறப்பது தினசரி செய்தியாகிவிட்டது . மகாராஷ்டிராவைச் சேர்ந்த தாதாஜியும் பயிர்க்கடனை அடுத்த தலைமுறைக்கு சொத்தாக்கிவிட்டு காலமானார் . மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த தாதாஜி , வேளாண்மை ஆராய்ச்சியாளர்களுக்கே சவால்விடும்படி ஒன்பது பாரம்பரிய அரிசி ரகங்களை கண்டறிந்து பயிரிட்டு   விதர்பா விவசாயிகள் பலரையும் காப்பாற்றிய சாதனை அவரை விவசாயிகளின் ஹீரோவாக்கியுள்ளது . விவசாய விஞ்ஞானி ! மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்திலுள்ள நண்டெட் கிராமத்தைச் சேர்ந்த தாதாஜி ராமாஜி கோப்ரகாடே , வறுமையால் 7 வயதிலிருந்து விவசாய கூலிவேலைக்கு செல்லத் தொடங்கிவிட்டார் . எண்பது வயதுவரை பல்வேறு பாரம்பரிய அரிசிவகைகளை பயிரிட்டு நோயாளி மகன் மித்ரஜித்தின் குடும்பபாரத்தை தன் தோளில் சுமந்தவர் , தன் விவசாய ஆராய்ச்சி சாதனைகளுக்காக ' மகாராஷ்டிரா கிரிஷி புரஷ்கார் ' விருது வென்றவரும் கூட . படேல் 3 என்ற பாரம்பரிய அரிசியிலிருந்து தாதா