இடுகைகள்

உலகம்-ஹங்கேரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அகதிகளுக்கு உதவினால் தண்டனை!

படம்
அகதிகளுக்கு உதவினால் தண்டனை ! முறையான ஆவணங்களில்லாத அகதிகளுக்கு தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட யார் உதவினாலும் சிறைதண்டனை என்ற மசோதாவை ஹங்கேரி அரசு கொண்டு வந்துள்ளது . இதை எதிர்த்த ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐ . நா அமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டுநிறுவனங்களின் வழக்குகளை தடைசெய்துள்ளது ஹங்கேரி நீதிமன்றம் . 'Stop Soros' என்ற அகதிகளின் குடியேற்றத்தை தடுக்கும் மசோதா , இவர்களுக்கு உதவி செய்யும் அமைப்பினரை கைது செய்யவும் அங்கீகாரத்தை ரத்துசெய்யவும் உதவுகிறது . " ஹங்கேரி அரசின் நடவடிக்கை அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான ஒன்று ." என்கிறார் ஐரோப்பாவின் ஆம்னஸ்டி அமைப்பு இயக்குநர் கௌரிவான் குலிக் . ஏப்ரல் தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ள பிரதமர் விக்டர் ஆர்பனின் ஃபிடெஸ் கட்சி கொண்டு வந்த சட்டத்திற்கு ஆதரவு வாக்குகள் 160. அகதிகள் விஷயத்தில் சமரசத்திற்கு இடமேயில்லை என்று பிரதமர் விக்டர் கூறிவிட்டார் . மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தை உருவாக்கிய ஜார்ஜஸ் சோரோஸ் பெயரை இதற்கு சூட்டி மனிதநேயமற்ற விதிகளை ஹங்கேரி அரசு உருவாக்கியுள்ளது என ஐரோப்பிய கவுன்சில் மற்று