இடுகைகள்

வேலையிழப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாங்கள் மக்களிடம் முதலீடு செய்கிறோம்! - ஶ்ரீதர் வேம்பு, இயக்குநர், ஜோஹோ

படம்
  ஶ்ரீதர்வேம்பு, ஜோஹோ நிறுவன இயக்குநர் ஶ்ரீதர் வேம்பு படம் - மனிகண்ட்ரோல் ஶ்ரீதர் வேம்பு நேர்காணல்   உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டங்களைப் பெற்றவர்கள் அல்ல. தொழில்நுட்பத் துறையில் வேலை இல்லாமல் தவிக்கும் பட்டதாரிகளைப் பார்க்க முடிகிறது. ஒருவர், இரண்டு வேலைகள் செய்து வாழவேண்டியிருக்கிறது. திறமையானவர்களுக்கு தட்டுப்பாடு ஏறபட்டிருக்கிறதா? இந்த பிரச்னையை எப்படி பார்க்கிறீர்கள்? சந்தையில் நிறைய நிறுவனங்கள் திறமைசாலிகளை தேடுகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை திறமைசாலிகள் இருந்தாலும் அவர்களை வழிகாட்டி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல யாரும் முயல்வது இல்லை. நாங்கள் அந்த பணியை செய்கிறோம். இதன் மூலம் ஊழியர்களின் திறன் உயர்கிறது. அவர்கள் எங்களோடு விசுவாசமாக பணியாற்றுகிறார்கள். இவர்கள் மூலமே எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியும் உயர்கிறது. நாங்கள் தொழிலில் முதலீடு செய்வதை விட மக்களின் மீது முதலீடு   செய்கிறோம். மூன்லைட்டிங் (இரு நிறுவனங்களில் பணிகளை செய்வது) பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பொறியாளர் ஒருவர் ஒரு நிறுவனத்தில் இருந்துகொண்டு

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் மனநிலை குறைபாட்டு சிகிச்சை கட்டணம்- சமாளிக்க முடியாத கட்டண உயர்வு!

படம்
  மனநிலை குறைபாடுகளுக்கான சிகிச்சைக் கட்டணம் உயர்வு – அதிகரிக்கும் பொருளாதார சுமை உடல்ரீதியான நோய்களுக்கு ஏற்படும் செலவுகள், குடும்பத்திற்கு பொருளாதாரச் சுமை களை ஏறபடுத்திய காலம் என்று செய்திகளை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது, மனநிலை குறைபாடுள் காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுபற்றி, ஆய்வுகள் இப்போதுதான் வெளிவரத் தொடங்கியுள்ளன.   அண்மையில் கோவையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர், மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இறுதியாக அதை சிகிச்சை மூலம் தீர்த்துக்கொள்ள நினைத்தார்.   ஆனால் வாரம் ரூ.3 ஆயிரம் செலவு என கட்டணம் உறுதியானது. நல்ல செழிப்பான ஆள் என்றாலும் குடும்பஸ்தரான அவரால் செலவுகளை சமாளித்து செய்ய முடியவில்லை.   சிகிச்சைக்கான செலவுகள் கூடுவதோடு, குடும்பத்திற்கும் பொருளாதார சுமைகளை ஏற்படுத்துவதாக மென்பொருள் பொறியியலாளர் நினைக்கத் தொடங்கிவிட்டார். மேலே கூறியுள்ளது   ஆயிரக்கணக்கான மனநிலை குறைபாடுகளை கொண்டவர்களில் ஒருவரின் கதைதான். ஏராளமானவர்கள் வேலை காரணமாக ஏற்படும் மன அழுத்த பாதிப்பை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறார்கள். அதற்கு செலவு செய்யவும் பணம

உலகை மெல்ல வளைக்கும் செயற்கை நுண்ணறிவு! - கோவிட் -19 ஏற்படுத்திய மாற்றம்

படம்
              கொரோனா தொடங்கிய ஏ . ஐ புரட்சி ! தானியங்கி எந்திரங்கள் முன்னர் தொழி்ற்சாலைகளில் இயக்கப்பட்டாலும் , அதன் பரவலை கோவிட் -19 காலம் வேகப்படுத்தியுள்ளது . பல்வேறு நாடுகளில் நோய்த்தொற்றுக்கான தளர்வுகளில் வணிக வளாகங்கள் மெல்ல திறக்கப்பட்டு வருகி்ன்றன . சிங்கப்பூரில் தூய்மை செய்யும் பணிகளுக்கு கூட புற ஊதாக்கதிர்களைக் கொண்ட எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன . ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவது கூட நேரடி தொடர்புகளை தவிர்த்து , முழுக்க செயலி வசம் அனைத்து செயல்பாடுகளும் வந்துவிட்டன . உணவு , மருத்துவ சேவைகளுக்கும் கூட பாட் வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன . ’’ பெருந்தொற்று காலம் , சுகாதாரமாக வாழவும் , மனிதர்களை நேரடித்தொடர்பு இல்லாமல் சமூக இடைவெளியோடு பல்வேறு விஷயங்களையும் செய்ய வைத்துவிட்டது . செயற்கை நுண்ணறிவின் வேகமான பரவல் நமக்கு நன்மையும் கூடத்தான்’’ என்கிறார் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பாக் . நான்காவது தொழிற்புரட்சியின் பாகங்களாக செயற்கை நுண்ணறிவை கூறுகின்றனர் . இதன் வருகையால் , வேலையிழப்பு பாதிப்பும் இப்போது

ஓடிடி திரைப்படங்களை மக்கள் பார்ப்பது தியேட்டர்கள் இல்லாத காரணத்தால்தான்!

படம்
        கௌதம் தத்தா இயக்குநர், பிவிஆர் சினிமாஸ்       கௌதம் தத்தா இயக்குநர், பிவிஆர் சினிமாஸ் சினிமா துறை இப்போது எப்படி இருக்கிறது? வருமானம் பூஜ்ஜியமாகிவிட்டது. 4500 பணியாளர்கள் வரை வேலையிலிருந்து நீக்கிவிடும் இக்கட்டு நேர்ந்துள்ளது. பாதுகாப்பு, சுத்தம் செய்வது ஆகிய பணிகளைச் செய்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது மால்கள் மெல்ல திறக்கப்பட்டு வருகின்றன. தியேட்டர்களை திறக்க அரசு உத்தரவிடும் என காத்திருக்கிறோம். தியேட்டர்களை திறக்க ஏன் இவ்வளவு தாமதமாகிறது? அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கச்சொல்லி தியேட்டர்களை அனுமதிக்கலாம். நாங்கள் சிரமப்படுகிறோம் என்பதை அரசு உணர்ந்திருக்கும் என நினைக்கிறேன். கடந்த ஆறு மாதங்களில் இத்துறை சார்ந்தவர்கள் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். உங்கள் நிறுவனம் எப்படி நிலையை சமாளித்தது? மிகவும் கடினமான சூழ்நிலைதான். எங்கள் நிர்வாக குழு முதலில் சம்பள வெட்டு நடவடிக்கையை தொடங்கி இருமாதங்களுக்கு அமல் படுத்தியது. பின்னாளில் சம்பளவெட்டு கடுமையாக இருந்தது. தியேட்டர்கள் தொடங்கப்பட்டால என்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறீர்கள் டிஜிட்டல் வழியில் ட

கொரோ்னா ஏற்படுத்திய பொருளாதார இழப்பு!

படம்
SCMP கொரோனா பாதிப்பால் சென்னை மாவட்டத்தை விட்டு பிழைக்க வந்த அத்தனை பேரும் உயிர்பயத்துடன் ஊரைப்பார்த்து ஓடி வருகின்றனர். இதில் தொழிலாளர்கள்தான் அதிகம். வட இந்தியர்களுக்கு இருக்கும் ஒரே வழி, ரயில்தான். அவர்கள் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்து கிடக்கிறார்கள். நூறு பேர் போகமுடியும் பதிவு செய்யப்படாத பெட்டியில் முன்னூறு பேர்களை அடைத்து பெருமைப்படுகிறது இந்திய ரயில்வே. தொழிலாளர்கள் உயிர்ப்பயத்துடன் ஓடினாலும், முதலாளிகள் ஓட முடியாது. பலரும் கொரோனாவினால் சரிந்தி தொழிலை தடுமாற்றத்துடன் நடத்தி வருகின்றனர். கொரோனா பீதியால் மால்கள், சினிமா தியேட்டர்கள், புகழ்பெற்ற உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் விடுமுறை தினத்திற்கு சம்பளம் கொடுக்க முடியாமல் பலரும் ஆட்களை நீக்கி வருகின்றனர். பிரதமரே சொன்னாலும் வேலை இல்லாதபோது ஆட்களுக்கு சம்பளத்தைக் கொடுப்பது சாத்தியம் கிடையாது என்பதே உண்மை. தேசிய புள்ளியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த சதவீதம் கடந்த பதினொரு ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவாகும். 2016ஆம் ஆண்டு

தடுமாறும் தொழிற்சாலைகள்!- வழி என்ன?

படம்
இந்தியாவில் மாருதி, டாடா, மஹிந்திரா ஆகியோர் தமது வேலைநாட்களை குறைக்கலாமா என யோசித்து வருகின்றனர். காரணம் உலகம் முழுக்க ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கம். இது அமெரிக்காவில் 2007 ஆம் ஆண்டு ஏற்பட்டது போலத்தான். இதன் தாக்கத்தை சீனா, இந்தியா விரைவில் உணரும். ஜெர்மனி மற்றும் சீனாவில் ஏற்கனவே பாதிப்பின் தாக்கம் தொடங்கிவிட்டது. அங்கு உற்பத்தியாகும் பொருட்களை பெருமளவு வாங்குபவர்கள் அமெரிக்கர்கள்தான். இப்போது வர்த்தகப்போர் பிரச்னைகள் தலைதூக்கத் தொடங்கிவிட்டன. சீனா உடனடியாக தன் பொருட்களுக்கான சந்தையைத் தேடாதபோது, அதன் உற்பத்தி முடங்கி தொழிலாளர்கள் வேலையிழக்க வேண்டி வரும். அமெரிக்காவில் தேக்கநிலை முன்பிருந்தே இருப்பதால், இப்போது பெரியளவு பாதிக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால் சீனா அப்படியல்ல. 17 ஆண்டுகளில் இல்லாத அளவு தொழிற்சாலை உற்பத்தி குறைந்துள்ளது. பிரேசில், தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் இருக்கும் சூழலில் வேலையைக் காப்பாற்றிக்கொள்ளவே போராடி வருகின்றனர். இந்தியாவில் வாகனத்துறை 19 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இந்தியாவிலுள்ள நிசான் நிறுவனம்  ஆயி