இடுகைகள்

அனாதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கள்ளக்கடத்தல் செய்யும் நாயகன் திருந்தி வாழ நினைக்கும்போது ஏற்படும் விளைவுகள்!

படம்
  உள்ளத்தில் நல்ல உள்ளம்  விஜயகாந்த், ராதா, ராதாரவி, வினுசக்ரவர்த்தி இயக்கம் மணிவண்ணன் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து நைனாவின் உதவியால் கள்ளக்கடத்தல் தொழிலுக்குள் நுழையும் ஒருவன், காதல்வயப்பட்டு தனது தொழிலை கைவிட முயன்றால் என்ன நடக்கும் என்பதே கதை.  சுபமாக முடியும் கதை கிடையாது. அதை முதலிலேயே கூறிவிடுகிறேன். படத்தில் அந்தமோசமான முடிவுக்கு நைனா பாத்திரம் மூலம் ஏற்கெனவே நம்மை தயார்படுத்திவிடுகிறார்கள். அதனால் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை, மைக்கேல்ராஜ் என்பவர், கடலை ஒட்டியுள்ள ஊரில் கள்ளக்கடத்தல் செய்கிறார். அதில் கிடைக்கும் பணத்தை காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கிறார். இதனால் அவர் செய்வதை காவல்துறை கண்டுகொள்வதில்லை. அங்கு புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் ஷீலா இதை தடுக்க நினைக்கிறார். இவரை மைக்கேல்ராஜ் பெரிதாக தடுக்கநினைப்பதில்லை. கல்யாணம் செய்துகொள்ள நினைக்கிறார். உண்மையில் அவர் யார் என்பது சற்று சுவாரசியமாக உள்ளது.  நைனாவிடம் தொழில் கற்றவரான மைக்கேல் ராஜ், தான்செய்யும் தொழிலை நியாயப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.இறுதியாக அவரோடு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த, இப்போதைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள ஷீலா சொல்

அனாதைப் பிணங்களை சேகரித்து நல்லடக்கம் செய்த பெண்மணி!

படம்
                    பிணங்களை எரியூட்டிய பெண்மணி ! பொதுமுடக்கத்தின்போது நெருங்கிய உறவினர்கள் கூட நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற பயத்தில் காலமானவர்களை பார்க்க வரவில்லை . துக்கம் கொண்டாட முடியாதபடி பீதி மனத்தில் நிறைந்திருந்தது . அதற்காக இறந்துபோனவர்களை அப்படியே கைவிட்டுவிட முடியுமா ? இறந்துபோனவர்களின் உடல்களை தகனமூட்டும் வேலைகளை சில நல்லிதயங்கள் செய்தனர் . அவர்களில் ஒருவர் வர்ஷா வர்மா . இத்தனைக்கும் இவருக்கும் குடும்பம் உண்டு . மகள்கள் உண்டு . நாம் அனைவரும் பொதுமுடக்க காலத்தில் பாதுகாப்பாக இருந்த சூழ்நிலையில் வர்ஷா பிணங்களை நல்லடக்கம் செய்வதற்கான முயற்சிகளை செய்துகொண்டிருந்தார் . லக்னோவைச் சேர்ந்தவரான வர்ஷா , திவ்ய பிராயா எனும் அமைப்பின் உதவியுடன் யாரும் உரிமை கோராத பிணங்களைப் பெற்று நல்லடக்கம் செய்துள்ளார் . இதற்கு தீபக் மகாஜன் எனும் பெண்மணி உதவியுள்ளார் . வர்ஷா கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உதவி வந்துள்ளார் . பெருந்தொற்று காலத்தில் பிணங்களை எரிப்பது கடினமாக இருந்துள்ளது . அறுபது வயதான ஒருவர் விபத்துக்குள்ளாகி கிங் ஜார்ஜ் மருத்

சுற்றிலும் உறவுகள், நடுவில் நாம் இருக்கவேண்டும் என்று நினைப்பவனால் அப்படி வாழ முடிந்ததா? - நெலா டிக்கெட் - ரவி தேஜா

படம்
                      நெலா டிக்கெட் சுட்டு ஜனம் மத்தியில் மனம் என வாழத் தலைப்படும் நாயகன் . அவன் தந்தை போல மதித்து பாசம் காட்டிய ஆதரவற்றோர் இல்லப்புரவலர் திடீரென இறந்துபோகிறார் . அந்த இறப்பிற்கு காரணமானவர்களை அவர் எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் படம் . ரவிதேஜாவுக்காகத்தான் படம் பார்க்கவேண்டும் . வேறு ஆட்கள் யாரும் நடிக்க வாய்ப்பில்லை . கதையில் நடிக்கவும் ஏதுமில்லை . மாளவிகா சர்மாவுக்கு படத்தில் பாட்டுக்கு ஆட மட்டுமே வாய்ப்பு தந்திருக்கிறார்கள் . லூசுப் பெண் பாத்திரம்தான் . படத்தின் நோக்கம் , ஆதரவற்றோர் இல்லம் கட்ட நினைத்தவரை அவரது தத்துபிள்ளை வஞ்சித்து கொன்றுவிட அவரை எப்படி ரவிதேஜா பழிவாங்குகிறார் என்பதுதான் . ஆனால் இடையில் வரும் காதல் காட்சிகள் படத்தின் போக்கை திசைமாற்றுகிறது . எரிச்சலூட்டுகிறது . உள்துறை அமைச்சராக இருப்பவரை எந்த அதிகாரமும் இல்லாத ஒருவர் எப்படி எதிர்க்க முடியும் ? நீதிமன்றத்தில் பொய்சாட்சி சொல்லி வாழ்பவர் , மருத்துவர் என்று சொல்லி மருத்துவக் கல்லூரிக்கு சென்று காதல் செய்கிறார் . உள்துறை அமைச்சரின் பணத்தை கடத்துகிறார் என இயல்பாக வந்திருக