இடுகைகள்

மலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆபத்து நாமிருக்கும் சூழல்களால் ஏற்படுகிறதே ஒழிய விலங்குகளால் அல்ல! - காட்டுயிர் ஒளிப்பதிவாளர் கார்டன் புச்சனன்

படம்
  கார்டன் புச்சனன் காட்டுயிர் திரைப்படக்கலைஞரான கார்டன் புச்சனன், கடந்த முப்பது ஆண்டுகளாக உலகின் பல்வேறு கண்டங்களில் அலைந்து திரிந்துள்ளார். சைபீரியாவில் பனிக்கரடிகளை தேடிச்செல்வது, கலாஹரி பாலைவனத்தில் சீட்டாக்களை பின்தொடர்வது என அவரது பணிகளுக்கு எப்போதும் குறைவில்லை. மலையில் ஏறுவது, காடுகளில் நடப்பது என பல இடங்களுக்கு செல்வதில் நிறைய திட்டமிடல்கள் இருந்தாலும் எவையும் நினைத்தது போல நடக்காது. விலங்குகளை படமாக்குவது என்பது எளிதல்ல. அதற்கு காத்திருக்கவேண்டும். மனமும், உடலும் ஒருவருக்கு ஒத்துழைத்தால் மட்டுமே இப்பணி சாத்தியமாகும். பணம் முக்கியம் தேசியப்பூங்காவிற்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், செலவழிப்பதில் கவனம் வேண்டும். தேசியப்பூங்காவிற்கு காசு கட்டியபிறகு உள்ளே செல்லவேண்டும். ஒளிப்படக்கருவிகளை எடுத்துச்செல்லவேண்டும். விலங்குகளை சரியான கோணத்தில் படம்பிடிக்க வாய்ப்பு கிடைக்கவேண்டும். நீங்கள் பணம் செலவழிக்கும் நேரத்தில், விலங்குகளை சரியாக படம்பிடிக்க முடியும் என்று உறுதியாக கூற முடியாது. எனது திட்டங்களில் பெரும்பாலும் அதிர்ஷ்டவசமாக நன்றாக நிறைவேறியுள்ளன. உடற்பயிற்சி காட்டுக்

ஸ்விட்சர்லாந்தின் அழகான இடம் - ஜங்க்ஃபிராவு அலெட்ஸ்ச்

படம்
  ஜங்க்ஃபிராவு அலெட்ஸ்ச் அமைந்துள்ள இடம் – ஸ்விட்சர்லாந்து யுனெஸ்கோ அங்கீகாரம் 2001 டிப்ஸ் மலையேற்றம் செய்ய நினைத்துள்ளவர்கள், அனென்ஹட் எனும் இடத்திற்கு செல்லலாம். இங்கு நல்ல உணவும், மலைகளை பார்க்கும் கோணமும் சிறப்பாக அமைந்துள்ளது.     ஸ்விட்சர்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது இந்த மலைப்பகுதி. அரசால் பாதுகாக்கப்பட்டபகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியின் பரப்பு 823 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு பார்க்க வேண்டிய சிகரங்கள் என இரண்டைக் கூறலாம். ஒன்று, ஜங்க்ஃபிராவு மலைச்சிகரம். இதன் உயரம், 4,158 மீட்டர் ஆகும். ஃபின்ஸ்டெரா ஹார்ன் என்ற மலைச்சிகரம் இதை விட உயரமானது இங்கேயே அமைந்துள்ளது. ஆலெட்ஸ் மலைத்தொடர் இருபத்து மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டுள்ளது. பெரும்பாலும் இங்குள்ள மலைத்தொடர்களுக்கு வருபவர்கள் சாதாரண சுற்றுலா பயணிகள் அல்ல. பெரும்பாலும் மலையேற்ற வீரர்கள்தான் வருகிறார்கள். ஸ்விட்சர்லாந்து நாட்டின் இந்த மலைப்பகுதி மிகவும் பன்மைத்தன்மை கொண்டது. பசுமையான புல்வெளி, பனி சூழ்ந்த மலைகள், மலையில் உள்ள ஏரிகள் என பார்த்து ரசிக்க ஏராளமான இடங்கள் உள்ளன. மலையேற்

செஞ்சி கோட்டை ஏறிய வரலாற்று நிகழ்ச்சி! - கடிதங்கள்- கதிரவன்

படம்
  6.1.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? வானிலை ஆய்வு மையம் அண்மையில் சரியானபடி அறிக்கைகளை வழங்கமுடியாமல் தடுமாறியது. இதற்கான காரணங்கள் என்னவென இந்து தமிழ் திசையில் ஆதி வள்ளியப்பன் எழுதி இருந்தார்.  ஆனந்தவிகடன் நிருபர்களும் இந்த விவகாரத்தை விளக்கி எழுதியிருந்தனர்.  இதை இரண்டு வாரங்களுக்கு முன்னரே அலுவலகத்தின் லெஜண்ட் ஓவியரிடம் பேசினேன். அரசுக்கு நிறைய விதிமுறைகள் உண்டு. தனிநபர்களுக்கு கிடையாது. அரசு நிறுவனங்களுக்கு பொறுப்பு உள்ளது என விரிவாகப் பேசினார். உண்மையில் ரேடார், சென்சார் பழுதாகிவிட்டதே உண்மை.  ஆ.வியில் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய தமிழ் நெடுஞ்சாலை தொடர் இந்த வாரத்தோடு முடிகிறது. தொடரை முழுவதுமாக படித்துவிட்டேன். ஒடிஷாவில் வேலை செய்யும் தமிழ் தெரிந்த அதிகாரியின் பணி அனுபவங்கள்தான் தொடரின் மையம். தொடர் சிறப்பாக இருந்தது. தொடரில் ஏராளமான நூல்களை பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார். இவர் எழுதிய இரண்டாம் சுற்று என்ற நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன்.  இந்த ஆண்டு உருப்படியாக ஏதேனும் ஒரு நூலை எழுத முயல வேண்டும். எங்கள் நாளிதழ் இனி எப்போது வெளிவரும் என்