இடுகைகள்

முத்தாரம் கதம்பம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிட்ஸ் செய்திகள்

படம்
இந்தியாவின் சுதேசி ஜிபிஎஸ் ! இந்தியா விரைவில் தனித்துவமான சுதேசி ஜிபிஎஸ் சாட்டிலைட் நாடு பெருமையை நெஞ்சில் தாங்கப்போகிறது . இஸ்‌ரோ IRNSS-1H எனும் புதிய சாட்டிலைட்டை விண்வெளியில் நிலைநிறுத்துவதற்கான கவுண்டிங்கை தொடங்கிவிட்டது .    ஹரிகோட்டாவிலுள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட உள்ள இந்த செயற்கைக்கோள் , முன்னர் ஏவி செயலிழந்த IRNSS-1A எனும் செயற்கைகோளுக்கு மாற்று . இதில் மூன்று துல்லிய அணுக்கடிகாரங்களும் உள்ளன . பிஎஸ்எல்வி - சி 39 ராக்கெட் மூலம் 1,425 கி . கி எடையுள்ள செயற்கைக்கோள் செலுத்தப்படவிருக்கிறது .   சரி , எதற்கு இந்த சாட்டிலைட் ? ரயில்வே , ஆய்வுப்பணிகளுக்கும் , இடம் சார்ந்த பணிகளுக்கும் இவை மிகவும் பயன்படும் . அதோடு பேரழிவு மேலாண்மை , வாகனங்களை கண்டறிவது உள்ளிட்ட ராணுவ பணிகளுக்கும் அவசியமான சேட்டிலைட் இது . இந்த சீரிஸில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் அடுத்த சேட்டிலைட் ரிலீஸ் .  ஆபீசில் தூங்க உதவும் கேப்சூல் ! ஒரு நிறுவனம் தன் பணியாளர்களுக்கு என்னென்ன வசதிகளை செய்து தரும் ? பஸ் வசதி , கேன்ட்டீன் , இன்க்ரிமென்ட் , போனஸ் ஆகியவை இதில் அடங்கும்

முத்தாரம் கதம்பம் - விக்டர் காமெஸி

நிறங்களின் வரலாறு ! நெதர்லாந்து இந்நாட்டின் கொடி அங்கீகரிக்கப்பட்டது 1937 ஆம் ஆண்டு பிப் .19. இக்கொடியில் ஆரஞ்சு , வெள்ளை , ப்ளூ இருந்தது . ஆரஞ்சு மன்னர் வில்லியமுக்காக . ஆனால் வெயில் பட்டால் ஆரஞ்சு சிவப்பானதால் , கொடியிலிருந்த ஆரஞ்சு , சிவப்பு நிறமாக மாற்றப்பட்டது . பெல்ஜியம் 1831 ஜன .23 அன்று ஏற்கப்பட்ட இந்நாட்டின் கொடியிலுள்ள மஞ்சள் சிங்கத்தையும் , சிவப்பு சிங்கத்தின் நகம் , நாக்கையும் கருப்பு கவசத்தையும் குறிக்கிறது . மேலிருந்து கீழான டிசைன் ப்ரெஞ்ச் கொடியிலிருந்து ரீமேக்கானது . அயர்லாந்து கொடியிலுள்ளவை அனைத்தும் மதங்கள்தான் . பச்சை கத்தோலிக்கையும் , ஆரஞ்சு புரோடெஸ்டன்டையும் குறிக்கிறது . வெள்ளை இவ்விரு மதங்களும் ஒற்றுமையாக இருப்பதை சொல்கிறது . இத்தாலி 1919 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட இக்கொடியின் டிசைனர் மன்னர் நெப்போலியன் . நிறங்களுக்கு என்ன அர்த்தம் என்று ம்ஹூம் மூச் .. பச்சை நெப்போலியனுக்கு பிடித்த நிறம் எனவே கிடைத்தது கொடியில் இடம் .   இந்தியாவை மாற்றிய மந்திரச்சொல் ! Hum do Hamare do 1950 ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாட்டை இந்தியா

அறிவியல் கதம்பம் - ச.அன்பரசு

படம்
  மகளுக்காக கட்டிய தீம்பார்க் !- அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த தந்தை ஒருவர் தன் மகளுக்காக என்ன செய்திருக்கிறார் தெரியுமா ? பிரமாண்ட தீம் பார்க்கையே உருவாக்கியிருக்கிறார் . தன் மகள் மோர்கனை லீவில் தீம்பார்க் ஒன்றுக்கு கார்டன் ஹர்ட்மன் அழைத்துச் சென்றார் . அங்குள்ள குழந்தைகளுடன் நீந்தி விளையாட மோர்கன் விரும்பினாலும் , அவளது ஆட்டிச இயல்பினால் பலரும் விலகிச்செல்ல தவித்துப்போனார் கார்டன் . 2010 ஆண்டு தன் செல்லமகளுக்காக அவர் உருவாக்கியதுதான் கார்டன் வொண்டர்லா தீம்பார்க் . செலவு 34 மில்லியன் டாலர்கள் . உடல் குறைபாடுள்ளவர்களுக்கான விசேஷ வசதிகள் இதன் ஸ்பெஷல் . மாற்றுத்திறனாளிகளுக்கு தீம்பார்க்கில் இலவச என்ட்ரி உண்டு . ஆண்டுதோறும் இந்த தீம்பார்க்கால் 1 மில்லியன் டாலர்கள் நஷ்டம்தான் . எனினும் அதனை சமாளிக்க நண்பர்கள் , அமைப்புகள் உதவுகின்றனர் என்கிறார் கார்டன் . 67 நாடுகளிலிருந்தும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதனை சுற்றிப்பார்த்துள்ளனர் .   மிரட்டும் நாஸி சோதனைகள் ! - ப . அனுஷா உயிர்களைக் கொன்ற ரஷ்யபனி ! நெப்போலியனை ரஷ்யா மண்ணை கவ்வ வைத்தது அதன