முத்தாரம் கதம்பம் - விக்டர் காமெஸி

நிறங்களின் வரலாறு!

நெதர்லாந்து

இந்நாட்டின் கொடி அங்கீகரிக்கப்பட்டது 1937 ஆம் ஆண்டு பிப்.19. இக்கொடியில் ஆரஞ்சு, வெள்ளை, ப்ளூ இருந்தது. ஆரஞ்சு மன்னர் வில்லியமுக்காக. ஆனால் வெயில் பட்டால் ஆரஞ்சு சிவப்பானதால், கொடியிலிருந்த ஆரஞ்சு, சிவப்பு நிறமாக மாற்றப்பட்டது.

பெல்ஜியம்

1831 ஜன.23 அன்று ஏற்கப்பட்ட இந்நாட்டின் கொடியிலுள்ள மஞ்சள் சிங்கத்தையும், சிவப்பு சிங்கத்தின் நகம், நாக்கையும் கருப்பு கவசத்தையும் குறிக்கிறது. மேலிருந்து கீழான டிசைன் ப்ரெஞ்ச் கொடியிலிருந்து ரீமேக்கானது.

அயர்லாந்து

கொடியிலுள்ளவை அனைத்தும் மதங்கள்தான். பச்சை கத்தோலிக்கையும், ஆரஞ்சு புரோடெஸ்டன்டையும் குறிக்கிறது. வெள்ளை இவ்விரு மதங்களும் ஒற்றுமையாக இருப்பதை சொல்கிறது.

இத்தாலி

1919 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட இக்கொடியின் டிசைனர் மன்னர் நெப்போலியன். நிறங்களுக்கு என்ன அர்த்தம் என்று ம்ஹூம் மூச்.. பச்சை நெப்போலியனுக்கு பிடித்த நிறம் எனவே கிடைத்தது கொடியில் இடம்.

 இந்தியாவை மாற்றிய மந்திரச்சொல்!

Hum do Hamare do

1950 ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாட்டை இந்தியாவின் சந்துபொந்தெங்கும் கொண்டு சென்ற நாம் இருவர் நமக்கிருவர் ஸ்லோகன் இது.

Jai Jawan Jai Kisan

1965 ஆம் ஆண்டு ராம்லீலா மைதானத்தில் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி உத்வேகமான சொன்ன ஸ்லோகன் இது. பஞ்சம், பாகிஸ்தானின் துரோக போர் ஆகியவற்றிலிருந்து மீள போர்வீரர்களையும் விவசாயிகளையும் வாழ்த்துங்கள் என்று கேட்டுக்கொண்டார் சாஸ்திரி.

Garibi Hatao Desh bacho

1971 ஆம் ஆண்டு தேர்தல் முழக்கமாக இந்திராகாந்தி முழங்கிய மந்திரச்சொல் இது. வறுமையை ஒழிப்போம் நாட்டைக் காப்போம் என்ற வார்த்தையில் வறுமை என்ற இடத்தில் இந்திரா என்று மாற்றி சிம்பிளாக எதிர்கட்சிகள் ஸ்கோர் செய்தன.

Saugandh ram ki Khatein Hain,Mandir Wahin Banayenge

இன்றைய பா..கவின் ஆட்சிக்கு அடித்தளமான ஸ்லோகன் இது. 1990 செப்.25 அன்று அத்வானி குஜராத்தின் சோமநாதர் கோயிலில் தன் ரத யாத்திரை தொடங்கும் முன் ஆற்றிய உரையின் கடைசி வார்த்தை இது.


விலங்குகளுக்கு நிறமறியும் திறன் உண்டா?

விலங்குகள் நிறத்துடன்தான் வாழ்கின்றன. எதிரிகளிடமிருந்து தப்ப நிறமாற்றும் மீன்கள், நிறத்தை நொடிக்கொருமுறை மாற்றும் பச்சோந்தி உள்ளிட்டவை குறித்த ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கடந்த நூற்றாண்டு வரை மனிதர்களின் நிறமறியும் திறன் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வந்தன. மின்காந்த ஸ்கேனர் முறையில் பறவைகளின் தலையில் பொருத்தப்பட்டன.

பாறையில், தாவரங்களில், விலங்குகளில் உள்ள போட்டோன்களை, போட்டோன்களை ஈர்ப்பதோடு சிலவற்றை எதிரொலிக்கின்றன. விலங்குகளின் கண்களிலுள்ள மூளையில் தொடர்புகொண்டுள்ள போட்டோன்கள் நிறத்தையும், வடிவத்தையும் மூளைக்கு உணர்த்துகின்றன. "கண்ணில் பார்க்கும் நிறத்தையுடைய பொருள் உணவா, எதிரியா, தன் இணையா என்பதில் நிறைய சிக்கல்கள் உண்டு" என்கிறார் யேல் பல்கலையைச் சேர்ந்த ரிச்சர்டு ப்ரூம். மீன்களால் சிவப்பு, ப்ளூ, பச்சை, புற ஊதாக்கதிர்களை அடையாளமறியும் டெட்ராகுரோமஸி திறனுண்டு. இத்திறன் பறவைகளுக்கும் உண்டு.

"மனிதர்களை விட பறவைகள், மீன்கள், பல்லிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு நிறமறியும் திறன் அதிகம். அதற்கு காரணம் நம் முன்னோர்களின் லைஃப்ஸ்டைல்தான் காரணம்" என்கிறார் ஆராய்ச்சியாளர் ப்ரூம். மனிதகுரங்குகளுக்கும், குரங்குகளுக்கும் சிவப்பு கூடிய கிரே கலரில்தான் உலகம் தெரியும். வண்டுகளை ஈர்க்கும் பூக்களின் நிறம் என்பதே அதன் மகரந்த சேர்க்கைக்கான அழைப்பு என்பதை அறிவீர்கள். ராணுவத்தினரின் உடைநிறம் அவர்களின் பணிக்கு ஏற்பட கலவையான நிறங்களாகவும், வண்ணத்துப்பூச்சி கலர்ஃபுல்லாக இருந்தாலும் அதன் உண்ண விரும்பும் பூச்சிகளுக்கு உனக்கு டேஞ்சர் என சேதி சொல்வதாகவே அந்நிறங்கள் உள்ளன.

விலங்குகள் இருமுறையில் நிறத்தை அறிகின்றன. ஒன்று, பிக்மெண்ட்ஸ், நானோஸ்கேல் என்பது இரண்டாவது முறை. ஊர்வன், மீன்கள் ஆகியவைகளின் நிறமறியும் திறன்களுக்கு காரணம் குரோமடோபோர்ஸ் என்ற செல்கள். பாலூட்டிகள், பறவைகள் ஆகியவைகளின் நிறமறியும் திறனுக்கு மெலனோசைட்ஸ் என்ற செல்களே காரணம். விலங்குகளுக்கு சிவப்புநிறத்தை உருவாக்கும் தன்மை இல்லை. அவை கரோட்டினாய்டு எனும் தாவரவேதிப்பொருள் மூலம் சிவப்பு நிறத்தை உருவாக்கும் தன்மை பெறுகின்றன. பூச்சிகளுக்கு உள்ள நானோஸ்கேல் முறை மிகவும் துல்லியமானது. "மயிலின் வால்பகுதி பெண் இணையை கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் பெண் இணை சரண்டராவது ஆணின் இறகு அழகில்தான். ஆனால் இதற்கு என்ன காரணம் என்று இதுவரையிலும் தெரியவில்லை" என்கிறார் ஆராய்ச்சியாளர் கரோஉயிரியலாளர்கள், நரம்பியலாளர்கள், மானுடவியலாளர்கள் என அனைவரும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வடகொரியாவால் முடியுமா? -.அனுஷா

கடந்த ஜூலை 28 இல் வடகொரியா நடத்தியது இரண்டாவது ஏவுகணைச்சோதனை.Hwasong-14 ஏவுகணையின் அச்சுஅசல் டிசைனைக்கொண்டது இது. அமெரிக்காவை தாக்க முடியும் முடியாது இருபிரிவு வாதங்கள் எழுந்தாலும் முடியும் என்பதுதான் உண்மை. 2006 ஆம் ஆண்டிலிருந்து வடகொரியா அணுஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. கப்பலிலிருந்து ஏவும் ஏவுகணைகள், நடுத்தர ஏவுகணைகள், கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் என தீயாய் வேலை செய்து வருகிறது வடகொரியா.

ஏவுகணை வரலாறு!

இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தை V-2 ராக்கெட்டுகளை ஏவி மிரட்டிய ஜெர்மனியை மறக்க முடியுமா? கட்டிடங்களை மட்டுமல்ல, நகரத்தையே அடித்தளம் இன்றி இவற்றால் அழிக்கமுடியும். V2 ராக்கெட்டுகளில் தாக்குதல் ரேஞ்ச் 322 கி.மீ. ICBM ஏவுகணை ரேஞ்ச் 5472 கி.மீ. 1957 இல் ஸ்புட்னிக் விண்கலத்தை வட்டப்பாதையில் நிறுத்திய ரஷ்யாவின் பலம் ஆயுதங்களை தயாரிப்பதிலும் பிரதிபலித்தது. அமெரிக்காவுக்கு அட்லஸ் ஏவுகணை(1959) எனில், ரஷ்யாவுக்கு R-7A ஏவுகணை. சீனாவும் அபீஷியலாக சொல்லாமல் மெல்ல ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. 2026 க்குள் 100 கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகள் என்ற ப்ராஜெக்ட் டிசைன் செய்து வேலை பார்க்கிறது சீன தேசம். இதில் இந்தியா, பிரான்ஸ், இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகியவையும் அடங்கும்.

ஏவுகணைகள் எவ்வளவு?

அமெரிக்காவிடம் 440, ரஷ்யாவிடம் 400 என இருநாடுகளும் போட்டி போட்டு ஆயுதங்களை உருவாக்கி வருகின்றன. அமெரிக்கா ரஷ்யா இருநாடுகளிலும் 1500 அணுஆயுதங்கள் பனிப்போர் காலத்திலேயே இருந்தன. இன்றைய ட்ரெண்டில் இவை பலமடங்கு எகிறியிருக்கும். இதில் வடகொரியா புதுரகம். அந்நாடு கையில் ப்ளூட்டோனியம் எவ்வளவு உள்ளது, அதில் எத்தனை ஆயுதங்களை உருவாக்கியுள்ளது என்பது தெரியவில்லை. தோராயமாக 30 இருக்கலாம். "வடகொரியா விஷயங்கள் பொதுவாக கூறப்படாததால் அதன் ராணுவபலம் குறித்து புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவர்களின் ஏவுகணை ஏவும் கருவிகள் குறித்து சிறிது கணிக்கமுடியும். ஏப்ரல் மாத பேரணியை கவனித்ததில் ஏவுகணைகளை ஏவும் 200 சீனா லான்ஞ்சர்கள் உள்ளன" என்கிறார் ஆய்வுபடிப்புகளுக்கான ஜேம்ஸ் மார்ட்டின் சென்டரைச் சேர்ந்த மெலிஸா ஹான்கம். குறைந்தபட்சம் இந்த ஏவுகணைகள் செல்லும் தூரம் என்பது குறைந்தபட்சம் 10 ஆயிரம் கி.மீ. வடகொரியா தாக்குதல் நடத்தினால் ப்ளோரிடா தாக்கப்படக்கூடும்.

2001 ஆம் ஆண்டே அதிகாரப்பூர்வமாக வடகொரியா அணுஆயுத கைவிட்டது. அதன் பின்னர் அமெரிக்காவுடன் ஏற்பட்ட பொருளாதாரத் தடை உள்ளிட்ட முரண்பாடுகள் காரணமாக தன் அணுஆயுத தயாரிப்பை வடகொரியா  தொடங்கியது. எனவே வடகொரியா மீது ராணுவ தாக்குதல் பயனிக்காது. அமைதி பேச்சுவார்த்தையே இப்பிரச்னைக்கு தீர்வு.

உலகின் மிகப்பெரிய தகவல் வங்கி!

தகவல் வங்கியை சமர்த்தாய் நடத்த ஏராளமான மின்சாரமும், குளிர்சாதன வசதியும் கன்ஃபார்மாக தேவை. நார்வேயில் ஆர்க்டிக் குளிரைப் பயன்படுத்தி, புதுப்பிக்கும் ஆற்றல் மூலம் இயங்கும் தகவல்கள் விரைவில் உருவாகவிருக்கிறது. கோலோஸ் என்ற நிறுவனத்தின் முயற்சியால் இந்த தகவல் வங்கி அமையவிருக்கிறது. இதற்கு முன்னர் மைக்ரோசாஃப்ட் ஆர்க்டிக் பகுதியில் கடலுக்கு அடியில் குளுகுளுவென தகவல் வங்கியை அமைக்க முயற்சித்தது. பல்லான்கன் என்ற நார்வே நகரிலுள்ள ஏரிக்கு அருகிலுள்ள நிலம் இதற்கு செலக்ட் ஆகி உள்ளது.

காற்றாலை மற்றும் நீர் வழியில் மின்சாரம் தயாரிக்கப்படவிருக்கிறது. இவ்வகையில் ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உருவாக்கப்படுவது உலகசாதனை. இது மின்சார செலவில் 60% ஆகும். கோலோஸ் நிறுவனத்துடன் HDR எனும் கட்டுமான நிறுவனமும் சேர்ந்து இத்திட்டத்தை உருவாக்கி வருகின்றன.

காஸினியின் இறுதி நாட்கள்!

நாசா, காஸினி விண்கலத்தை சனியை ஆராய அனுப்பி 20 ஆண்டுகள் ஆகின்றன. ஏறத்தாழ தன் இறுதிக்கட்டத்தை காஸின் எட்டியுள்ள நிலையில் அதன் மூலம் நாம் அறிந்தவை என்ன?

சூரிய சக்தியில் இயங்கும் காஸினி, 2004 ஆம் ஆண்டு சனியின் வட்டப்பாதையில் நுழைந்தது. டைட்டன் மற்றும் என்செலடஸ் என்ற சனியின் இரு முக்கிய துணைக்கோள்களை உலகிற்கு சொன்னது காஸினிதான். என்செலடஸ் பல்வேறு பிளவுகளைக் கொண்ட கோள், டைட்டன் திரவ வடிவில் மீத்தேன் ஆறுகளைக்கொண்ட கோள். 3.26 பில்லியன் டாலர் செலவில் உருவான காஸினி, என்செலடஸ் கோளின் உள்ளே கடல் இருப்பதற்கான சாத்திய நம்பிக்கைகளையும் மக்களுக்கு ஏற்படுத்தியது. 5 வட்டப்பாதைகளை சுற்றிவந்த காஸினி சனியின் பரப்பில் சாம்பிள்களை சேகரித்தபின் இறுதியாக செப்டம்பர் 15, 2017 அன்று எரிந்துபோகவிருக்கிறது.


  முக்கிய கண்டுபிடிப்புகள்: 2017 

மனித மரபணுவில் மாற்றம்!

ஜூலை 27, 2017: போர்ட்லேண்டின் ஓரேகானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் CRISPR என்ற மரபணு எடிட்டிங் தொழில்நுட்பம் மூலம் கருமுட்டை வரையில் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்று கண்டறிந்தனர். இதன் மூலம் தேவையற்ற மரபணுக்களை நீக்க முடியும் என்பது இதன் பிளஸ் பாய்ண்ட்.    

மெட்டாலிக் ஹைட்ரஜன்

ஜனவரி 27, 2017:
திரவ நிலையிலுள்ள ஹைட்ரஜன் மீது பல்வேறு நிலையில் அழுத்தங்களை செலுத்தி மெட்டாலிக் ஹைட்ரஜனை உருவாக்கி சாதித்தனர். கடலின் கீழ்படுகையில் 4500 மடங்கு அழுத்தம் உண்டு. மெட்டாலிக் நிலையில் ஹைட்ரஜன் முக்கிய கடத்தியாக செயல்படுகிறது. பாறையில் கிடைத்த ஹைட்ரஜன் முதல்முறையாக தன் தன்மையில் மாறுபட்டு வெளியான நிகழ்விது.

புதிய கோள் கண்டுபிடிப்பு!

கடந்த ஏப்ரலில், ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் புதிய கோளான LHS 1140b யை பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் கண்டுபிடித்தனர். இது பூமியைப் போன்றே சூரிய ஒளியை நட்சத்திரத்திடமிருந்து பெறுகிறது. "கடந்த பத்தாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான வெளிக்கோள் இது" என்கிறார் ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையத்தின் ஆராய்ச்சியாளரான ஜேசன் டிட்மன். பூமியைத் தவிர்த்த பிறகோளை தேடும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.

உலகின் முதல் மரபணு எடிட்டிங் சோதனை

ஜூன் 1, 2017: மரபணு எடிட்டிங் முறையான CRISPR சோதனை மனிதரின் மேல் முதன்முறையாக நடத்தப்பட்டது. HPV கிருமியை உடலிலிருந்து நீக்க இச்சோதனை. 60 பெண்களின் உடலில்  டிஎன்ஏ கோடிங் கொண்ட ஜெல்,  கர்பப்பைவாய் வழியாக புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் வகையில் செலுத்தப்பட்டது.

ஸ்பேஸ் எக்ஸின் ரீசைக்கிள் ராக்கெட்டுகள்

மார்ச் 30, 2017: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ரீசைக்கிள் முறையில் ஃபால்கன் 9 ராக்கெட்டுகளை ஏவி சாதித்தது, விண்வெளிக்கு செல்வதற்கும், திரும்ப வருவதற்கும் ஒரே ராக்கெட்டை பயன்படுத்துவதால் இவ்வகையில் மிச்சமாவது 18 மில்லியன் டாலர்கள்.

கருப்பைக்கு வெளியே மனிதர்கள்

பிலடெல்பியாவின் குழந்தை மருத்துவமனை மருத்துவர்கள், தாயின் கருப்பை போலவே செயற்கையாக வடிவமைத்து குறைபிரசவத்தில் (37 வாரங்களுக்கு குறைவாக) பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை குறைக்க முயற்சித்து வருகிறார்கள்.

நன்றி: முத்தாரம் வார இதழ்
தொகுப்பு: கதிரவன், மிலி ரான்சன்